இந்தியாவில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்குகொண்ட ஆண்களுக்கான 4X400 அஞ்சலோட்ட அணி தங்கப் பதக்கத்தினை சுவீகரித்திருந்ததுடன், பெண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற நிமாலி லியனாரச்சி வெண்கலப் பதக்கம் வென்றார்.
தெற்காசிய போட்டிகளுக்குத் தகுதி பெற்ற சண்முகேஸ்வரன்: சபான், அரவிந்த் வெற்றி
தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில் …..
இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையேயான 59ஆவது தேசிய மெய்வல்லுனர் போட்டிகள் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெற்றன.
இந்தப் போட்டித் தொடரில் இந்திய மெய்வல்லுனர் சம்மேளனத்தின் விசேட அழைப்பின் பேரில் இலங்கை சார்பாக 5 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.
போட்டிகளின் 3ஆவதும், இறுதியுமான நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான 4X400 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை சார்பாக அசங்க ரத்னசேன, டிலான் போகொட, எரங்க லக்மால் மற்றும் தசுன் சில்வா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 4X400 அஞ்சலோட்ட போட்டிக்கு இந்திய அணிக்கு தகுதிபெறுவதற்கான ஒரு வாய்ப்பாக இப்போட்டி அமைந்தது.
எனவே, 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்களாக வலம்வந்து கொண்டிருக்கும் மொஹமட் அனஸ், அமோஜ் ஜேகப், நேஆ நிர்மால் மற்றும் அலெக்ஸ் அண்டனி உள்ளிட்ட நான்கு வீரர்களும் இந்தியா ஏ அணி என்ற பெயரில் பங்கேற்றிருந்தனர்.
போட்டியின் ஆரம்பமாகியது முதல் முன்னிலை வகித்த இந்திய ஏ அணிக்கு அமோஜ் ஜேகப், நேஆ நிர்மால் ஆகிய இரு வீரர்களும் சிறந்த ஆரம்பத்தைப் பெற்று முன்னிலை பெறச் செய்தனர். எனினும், போட்டியில் மூன்றாவது வீரராக ஓடிய அலெக்ஸ் அண்டனி தனக்கான 300ஆவது மீற்றரில் வைத்து உபாதைக்குள்ளாகி இடைநடுவே வெளியேறினார்.
இதனை அவதானிக்காமல் போட்டியின் இறுதி சுற்றில் ஓடிய அனுபவமிக்க வீரரான மொஹமட் அனஸ், இந்திய பி அணி வீரரின் கோலை எடுத்துக் கொண்டு ஓடி முதலிடத்தைப் பெற்றார்.
எனினும், போட்டியின் முடிவில் இது விதிமுறைகளுக்கு முரணானது என்பது கண்டறியப்பட்டதால் இந்திய ஏ மற்றும் இந்திய பி அணிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
இதனால் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை அஞ்சலோட்ட அணி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. இலங்கை வீரர்கள் போட்டியை நிறைவுசெய்ய 3 நிமிடங்கள் 11.40 செக்கன்களை எடுத்துக் கொண்டனர்.
இதேநேரம், குறித்த போட்டியில் 4ஆவது மற்றும் 5ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்ட கேரளா (3 நிமி. 16.76 செக்.) மற்றும் டெல்லி (3 நிமி. 17.09 செக்.) ஆகிய அணிகள் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தினை சுவீகரித்தன.
இராணுவ மெய்வல்லுனரை ஆக்கிரமிக்கும் தமிழ் பேசும் வீரரகள்
இலங்கை இராணுவத்தினால் 56ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட….
இதேநேரம், பெண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர மத்திய தூர ஓட்ட வீராங்கனையான நிமாலி லியனாரச்சி, 4 நிமிடங்கள் 25.07 செக்கன்களில் போட்டியைக் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிளில் பெண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் 9 வருடங்களுக்குப் பிறகு பங்கேற்றிருந்த நிமாலி லியனாரச்சி, போட்டித் தூரத்தை 4 நிமிடங்கள் 15.86 செக்கன்களில் ஓடிமுடித்து புதிய தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றிருந்ததுடன், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், இப்போட்டியில் மேற்கு வங்காள வீராங்கனையான லில்லி தாஸ் (4 நிமி. 22.58 செக்.) தங்கப் பதக்கமும், கேரளாவின் சித்ரா (4 நிமி. 22.58 செக்.) வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<