ஐக்கிய அரபு இராச்சியம் செல்லும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி

279

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியானது அங்கே முக்கோண மற்றும் இருதரப்பு இளையோர் ஒருநாள் தொடர்களில் விளையாடவிருக்கின்றது.

இளம் வீரர்களுக்காக மஹ்முதுல்லாஹ் அணியிலிருந்து வெளியேற்றம்

அதன்படி இலங்கை 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி தமது  சுற்றுப்பயணத்தில் முதலாவதாக முக்கோண ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.

முக்கோண ஒருநாள் தொடரில் இலங்கை அணியுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளின் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கின்றன. இந்த முக்கோண ஒருநாள் தொடரில் இலங்கை மொத்தமாக நான்கு போட்டிகளில் விளையாடவுள்ளதோடு தொடரின் முதல் போட்டி மார்ச் 20ஆம் திகதி இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையில் அபுதாபி சயேத் அரங்கில் நடைபெறுகின்றது.

முக்கோண ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியானது மார்ச் மாதம் 30ஆம் திகதி அபுதாபி டோலரன்ஸ் ஓவல் அரங்கில் இடம்பெறுகின்றது. முக்கோண ஒருநாள் தொடரின் பின்னர் ஏப்ரல் 1ஆம் திகதி, இருதரப்பு ஒருநாள் இடம்பெறுகின்றது. இருதரப்பு ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியுடன் இலங்கை விளையாடவுள்ளதோடு, இந்த இளையோர் ஒருநாள் தொடரில் மொத்தமாக இரண்டு போட்டிகள் காணப்படுகின்றன. ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்தும் டோலரன்ஸ் ஓவல் அரங்கில் நடைபெறுகின்றன.

முக்கோண ஒருநாள் தொடர் அட்டவணை

மார்ச் 20 – இலங்கை எதிர் பங்களாதேஷ் – சயேத் கிரிக்கெட் அரங்கு, அபுதாபி

மார்ச் 22 – ஆப்கானிஸ்தான் எதிர் இலங்கை – டோலரன்ஸ் ஓவல் அரங்கு, அபுதாபி

மார்ச் 26 – இலங்கை எதிர் பங்களாதேஷ் – டோலரன்ஸ் ஓவல் அரங்கு, அபுதாபி

மார்ச் 28 – ஆப்கானிஸ்தான் எதிர் இலங்கை – டோலரன்ஸ் ஓவல் அரங்கு, அபுதாபி

இருதரப்பு ஒருநாள் தொடர்

முதல் போட்டி – ஏப்ரல் 1 – டோலரன்ஸ் ஓவல் அரங்கு, அபுதாபி

இரண்டாவது போட்டி – ஏப்ரல் 2 – டோலரன்ஸ் ஓவல் அரங்கு, அபுதாபி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<