அயர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது அங்கே இரு போட்டிகள் கொண்ட T20 மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்கள் என்பவற்றில் பங்கேற்கின்றது.
>>WATCH – துனித்தின் துடுப்பாட்டம் ; பந்துவீச்சில் மிரட்டி தோல்வியிலிருந்து மீண்ட இலங்கை! | SLvIND<<
அந்தவகையில் இலங்கை மகளிர் அணியானது குறிப்பிட்ட சுற்றுப்பயணத்திற்காக எதிர்வரும் 06ஆம் திகதி இலங்கையில் இருந்து அயர்லாந்து பயணமாகவிருக்கும் நிலையில், இந்த சுற்றுப்பயணத்திற்கான 16 பேர் அடங்கிய இலங்கை மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
- அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
- இலங்கை மகளிர் அணிக்கு டொலர்களை அள்ளிக்கொடுத்த SLC
சாமரி அத்தபத்து தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை குழாத்தில், மகளிர் ஆசியக் கிண்ண T20 தொடரினை வெற்றி கொண்ட இலங்கை குழாத்தில் காணப்பட்ட பல முன்னணி வீராங்கனைகள் பெரும்பாலும் இடம்பெற்றிருக்கின்றனர்.
இதேவேளை அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் நடைபெறவிருக்கும் ஒருநாள் போட்டிகள் அடுத்த மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான அணிகளை தீர்மானிக்க முக்கியத்துவம் கொண்ட போட்டிகளாக அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இலங்கை மகளிர் குழாம்
சாமரி அத்தபத்து (தலைவி), விஷ்மி குணரட்ன, ஹர்சிதா சமரவிக்ரம, ஹாசினி பெரேரா, கவீஷா டில்ஹாரி, நிலக்ஷி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனீ, காவ்யா கவிந்தி, உதேசிகா ப்ரோபதினி, அச்சினி குலசூரிய, சுகந்திகா குமாரி, சச்சினி நிசன்சல, இனோஷி பெர்னாண்டோ, சஷினி கிம்ஹானி, அமா காஞ்சனா, கௌசினி நுத்யாங்கனா
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<