ஆசிய கிண்ண மகளிர் டி-20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

358

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் மலேஷியா ஆகிய ஆறு நாடுகளின் பங்குபற்றலுடன் அடுத்த மாதம் 3ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை மலேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண டி-20 மகளிர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை மகளிர் அணி, இன்று (31) மலேஷியா நோக்கி பயணமாகவுள்ளது.

தினேஷ் சந்திமாலின் சதத்தோடு பயிற்சிப் போட்டியின் முதல் நாளில் இலங்கை ஆதிக்கம்

மேற்கிந்திய தீவுகளுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட்..

இலங்கை அணியின் வழமையான அணித் தலைவி சமரி அத்தபத்து டெங்கு காய்ச்சல் காரணமாகவும், சகலதுறை வீராங்கனை அமா காஞ்சனா சுகயீனம் காரணமாகவும் இலங்கை குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் அணியின் தலைவியாக அனுபவமிக்க வீராங்கனையான சசிகலா சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சமரி அத்தபத்து மற்றும் அமா காஞ்சனாவுக்குப் பதிலாக ஹர்ஷிதா மாதவி, இனோகா ரனவீர ஆகியோர் அணிக்குள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று (30) இலங்கை கிரிக்கெட் நிறுவன கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு இலங்கை அணியின் பதில் அணித் தலைவி ஷஷிகலா சிறிவர்தன கருத்து வெளியிடுகையில்,

WBBL தொடரில் ஒப்பந்தமாகிய முதல் இலங்கை வீராங்கணையாக சாமரி

இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்ட நட்சத்திரமான..

இலங்கையின் அனுபவமிக்க வீராங்கனைகளான சமரி அத்தபத்து மற்றும் அமா காஞ்னா ஆகியோர் அணியில் இடம்பெறாமை மிகப் பெரிய இழப்பாகும். அதிலும் சமரிக்குப் பதிலாக ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனையாக யாரை களம் இறக்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், சிரேஷ்ட வீராங்கனைகளான யசோதா மெண்டிஸ், ஹசினி பெரேரா மற்றும் நிப்புனி ஹன்சிகா ஆகியோரில் இருவர் ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளாக விளையாடுவர்என தெரிவித்தார்.

அதுமாத்திரமின்றி, கடந்த ஒன்றரை மாதங்களாக நாங்கள் பயிற்சிகளை முன்னெடுத்திருந்ததுடன், ஒருசில பயிற்சிப் போட்டிகளிலும் விளையாடியிருந்தோம். எனவே, அணியில் உள்ள அனைத்து வீராங்கனைகளும் நல்ல நிலையில் உள்ளனர். எனினும், இம்முறை போட்டித் தொடரில் இந்தியாவுக்கு அடுத்ததாக பாகிஸ்தான் அணியிடமிருந்து பலத்த சவாலை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். ஆனால் தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேற முடியும்என தெரிவித்தார்.

2004, 2006, 2008 ஆகிய மூன்று வருடங்களிலும் நடைபெற்ற ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் இலங்கை அணி, இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி இரண்டாவது இடங்களைப் பெற்றுக்கொண்டது. குறித்த மூன்று சந்தர்ப்பங்களிலும் இந்திய அணியே கிண்ணத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இம்முறை ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரிற்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியில் பெரும்பாலான வீராங்கனைகள் குறைந்தபட்சம் ஒரு சர்வதேசப் போட்டியிலாவது விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம், இம்முறைப் போட்டித் தொடரில் இலங்கை அணி தமது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்வரும் 3ஆம் திகதி சந்திக்கவுள்ளதுடன், 4ஆம் திகதி மலேஷியாவையும், 6ஆம் திகதி பாகிஸ்தானையும், 7ஆம் திகதி இந்தியாவையும், 9ஆம் திகதி தாய்லந்து அணியையும் சந்திக்கவுள்ளது.

இலங்கை அணி விபரம்:

ஷஷிகலா சிறிவர்தன (அணித் தலைவி), ஹசினி பெரேரா (உப தலைவி), யசோதா மெண்டிஸ், அனுஷ்கா சஞ்சீவனி, ரெபேக்கா வெண்டர்ட், நிலக்ஷி டி சில்வா, உதேஷிகா ப்ரபோதினி, சுகந்திகா குமாரி, ஓஷதி ரணசிங்க, நிப்புனி ஹன்சிகா, மல்ஷா ஷெஹானி, அச்சினி குலசூரிய, இனோஷா பெர்னாண்டோ, இனோகா ரணவீர, ஹர்ஷிதா மாதவி

பதில் வீராங்கனைகள்:

ஸ்ரீபாலி வீரக்கொடி, கனீஷh டில்ஹாரி, சத்யா சந்தீப்பணி