இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி

250

இலங்கை கிரிக்கெட் அணியில் அங்கம் வகிக்கும் வீரர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.  

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட அஸ்ரா செனகா தடுப்பூசியே இலங்கை வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்

இதன் முதலாவது கட்ட தடுப்பூசி கொழும்பில் வழங்கப்பட உள்ளதாவும், இரண்டாவது கட்ட தடுப்பூசியை இன்னும் இரண்டு மாதங்களில் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

ஐந்து பேர் கொண்ட கிரிக்கெட் நிர்வாகக்குழு நியமிப்பு

இதன்படி, டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் விளையாடி வரும் தேசிய அணி வீரர்கள் மட்டுமன்றி, பயிற்றுவிப்புக் குழுவின் உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட உள்ளது.

இலங்கை தேசிய அணி வீரர்கள் மேற்கிந்திய தீவுகளுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ள நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதி பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…