THE HUNDRED ஏலத்தில் விலை போகாத இலங்கை வீரர்கள்

988

இங்கிலாந்தில் நடைபெற்ற தி ஹண்ரட் (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கை அணி சார்பாக பங்கேற்ற 18 வீரர்களும் எந்த அணிக்காகவும் ஏலத்தில் வாங்கப்படவில்லை.  

இதன்படி, .பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் இடம்பெற்று இரண்டு வாரங்களுக்குப் பிறகு நடைபெற்ற 100 பந்துகள் கொண்ட தி ஹண்ரட் தொடருக்கான வீரர்கள் ஏலத்திலும் குதித்த இலங்கை அணி வீரர்கள் யாரையும் வாங்குவதற்கு எந்தவொரு அணியும் முன்வரவில்லை

இலங்கை வீரர்களுக்கு ஏன் IPL வாய்ப்பு கிடைக்கவில்லை? – மஹேல, சங்கக்கார சொன்ன பதில்

இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 100 பந்துகள் கொண்டதி ஹன்ரட்கிரிக்கெட் தொடர் கடந்த வருடம் முதல்முறையாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட போதும் கொவிட-19 வைரஸ் அச்சத்தினால் ஒத்திவைக்கப்பட்டது

எனினும், இந்த வருடம் ஜூலை மாதம்தி ஹன்ரட்கிரிக்கெட் தொடரினை மீண்டும் நடத்துவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மொத்தம் 8 அணிகள் பங்குபெறுகின்ற இந்த கிரிக்கெட் தொடரின் ஏலத்திற்காக 252 வெளிநாட்டு வீரர்களும், 254 இங்கிலாந்து வீரர்களும் பதிவு செய்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை கடந்த வாரம் அறிவித்தது.  

வீரர்கள் ஏலத்தில் மொத்தமாக ஏழு வெளிநாட்டு வீரர்கள் உட்பட 35 வீரர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்ட நிலையில் இந்த இடங்களுக்காக 18 இலங்கை வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.

இதன்படி, 40 ஆயிரம் பவுண்ட்கள் நிர்ணயத் தொகையின் கீழ் தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, திசர பெரேரா, இசுரு உதான ஆகிய வீரர்கள் இடம்பெற்றனர்

Video – ‘The Hundred’ லீக்குக்கான தேர்வு செயல்பாட்டில் இலங்கை வீரர்கள்…!

32 ஆயிரம் பவுண்ட்கள் நிர்ணயத் தொகையின் கீழ் திக்ஷி டி சில்வா மற்றும் லசித் எம்புல்தெனிய உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றனர்

இதனிடையே, நிர்ணயிக்கப்படாத ஏலத் தொகையின் கீழ் வனிந்து ஹஸரங்க, அகில தனன்ஜய, அவிஷ் பெர்னாண்டோ, அசேல குணரட்ன, தனுஷ் குணதிலக்க, லஹிரு குமார, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, தசுன் ஷானக்க, லஹிரு திரிமான்ன மற்றும் இங்கிலாந்தின் உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் விளையாடி வருகின்ற திலான் வலல்லாவிட ஆகிய வீரர்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே, தி ஹண்ரட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று இங்கிலாந்தில் இடம்பெற்றது. இந்த ஏலத்தில் எந்தவொரு இலங்கை வீரரும் தெரிவு செய்யப்படாத போதும், சர்வதேசத்தில் உள்ள முன்னணி வீரர்கள் மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டனர்

இதில் அவுஸ்திரேலியா வீரர் டேவிட் வோர்னர், அதிக ஏலத்தொகையைக் கொண்ட ஒரு மில்லியன் பவுண்ட்களுக்கான பிரிவில் சதெர்ன் ப்ரேவ் (Southern Brave) அணிக்காக வாங்கப்பட்டார். இந்த அணியின் பயிற்சியாளராக மஹேல ஜயவர்தன செயற்படுகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

Video – மே.தீவுகள் தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ள இலங்கை அணி!

இதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணியின் நிகொலஸ் பூரான் மற்றும் தென்னாபிரிக்காவின் கங்கிஸோ ரபாடா மற்றும் பாகிஸ்தானின் சதாப் கான் ஆகியோர் மன்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக (Manchester Originals) ஏலத்தில் வாங்கப்பட்டார்கள்.    

இதில், மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிரென் பொல்லார்ட் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஜைய் றிச்சர்ட்சன் ஆகிய இருவரையும் வெல்ஸ் பையர் அணி (Welsh Fire) ஏலத்தில் எடுத்தது.  

இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அங்குரார்ப்பண தி ஹண்ரட் கிரிக்கெட் தொடர் ஜுலை மாதம் 21ஆம் திகதி ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<