ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

2036
Sri Lankan ODI squad

ஜிம்பாப்வே – இலங்கை அணிகள் இடையில் இந்த மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கெடுக்கும் 18 பேர் அடங்கிய இலங்கை அணிக்குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> கொவிட்-19 காரணமாக ஜிம்பாப்வே தொடரை தவறவிடும் கமில் மிஷார

இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) ஒருநாள் சுபர் லீக்கிற்காக நடைபெறவுள்ள நிலையில், இந்த தொடரில் பங்கெடுக்கும் இலங்கை அணிக்குழாத்தில் துடுப்பாட்டவீரரான குசல் மெண்டிஸ் இடம்பெற்றிருக்கின்றார்.

கடந்த ஆண்டு உயிரியல் பாதுகாப்பு விதிமுறைகளை குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஒரு வருடத்தடையினைப் பெற்றிருந்த குசல் மெண்டிஸ், அந்த தடை பாதியிலேயே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நீக்கப்பட்ட பின்னர் விளையாடும் முதல் தொடராக ஜிம்பாப்வே அணியுடனான போட்டிகள் அமைகின்றன.

குசல் மெண்டிஸ் 2021ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடியிருந்ததோடு, அந்த தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராகவும் மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் LPL தொடரில் திறமையினை வெளிப்படுத்தியிருந்த ஏனைய வீரர்களில் ஒருவரான தினேஷ் சந்திமாலுக்கும் இலங்கை ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இவர் தவிர சகலதுறைவீரரான கமிந்து மெண்டிஸ், நுவான் பிரதீப் வேகப்பந்துவீச்சாளர் சிரான் பெர்னாண்டோ, ஜெப்ரி வன்டர்செய் மற்றும் சாமிக்க குணசேகர ஆகியோரும் ஜிம்பாப்வே தொடரில் விளையாடவிருக்கின்றனர்.

மறுமுனையில் அதிரடித் துடுப்பாட்டவீரரான அவிஷ்க பெர்னாண்டோ, அறிமுக வீரர் கமில் மிஷார மற்றும் ஜனித் லியனகே ஆகியோர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கையின் ஒருநாள் குழாத்தில் உள்வாங்கப்பட்டிருந்த போதும் அவர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்ட காரணத்தினால், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிகளில் ஆடுகின்ற வாய்ப்பினை இழக்கின்றனர்.

>> கொவிட்-19 காரணமாக ஜிம்பாப்வே தொடரை தவறவிடும் கமில் மிஷார

இதேவேளை ஏற்கனவே இலங்கை  ஒருநாள் அணியில் வாய்ப்பு பெற்ற வேகப்பந்துவீச்சாளர்களான லஹிரு குமார மற்றும் கலன பெரேரா ஆகியோர் உடற்தகுதி பரிசோதனையில் சித்தியடைய தவறியதனை அடுத்து தமது வாய்ப்புக்களை இழக்கின்றனர்.

இதுதவிர சுழல்நட்சத்திரம் வனிந்து ஹஸரங்க, குசல் ஜனித் பெரேரா ஆகியோர் உபாதையில் இருந்து குணமாகாத நிலையில் அவர்களும் ஜிம்பாப்வே தொடரில் உள்ளடக்கப்படவில்லை. அதோடு தனன்ஞய டி சில்வா அவருக்கு புதிய குழந்தை ஒன்று கிடைத்ததனை அடுத்து ஜிம்பாப்வே தொடரில் ஆடவில்லை எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

>> கொவிட்-19 காரணமாக ஜிம்பாப்வே தொடரை தவறவிடும் கமில் மிஷார

அஷேன் பண்டார, புலின தரங்க, நிமேஷ் விமுக்தி, அஷைன் டேனியல், அசித்த பெர்னாண்டோ மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகிய வீரர்கள் ஜிம்பாப்வே தொடரின் போது இலங்கை அணியின் மேலதிக வீரர்களாக இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை ஒருநாள் அணி – தசுன் ஷானக்க (அணித்தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, மினோத் பானுக்க, தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, ஜெப்ரி வன்டர்செய், நுவான் துஷார, ரமேஷ் மெண்டிஸ், பிரவீன் ஜயவிக்ரம, துஷ்மன்த சமீர, சாமிக்க குணசேகர, தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ், நுவான் பிரதீப், சிரான் பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ்

மேலதிக வீரர்கள் – அஷேன் பண்டார, புலின தரங்க, நிமேஷ் விமுக்தி, அஷைன் டேனியல், அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<