மெண்டிஸ், அசிதவுக்கு அமெரிக்கா செல்வதில் சிக்கல்!

ICC Men’s T20 World Cup 2024

72
Sri Lankan Cricketers Kusal Mendis and Asitha Fernando

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோருக்கு ஐக்கிய அமெரிக்காவுக்கான வீசா கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்காக இலங்கை அணியின் 25 வீரர்களுக்கு அமெரிக்க வீசா விண்ணப்பிக்கப்பட்டிருந்தன. 

>> புதிய பயிற்றுவிப்பாளருக்கான விண்ணப்பங்களை கோரும் இந்திய கிரிக்கெட் சபை!

இதில் ஏனைய வீரர்களுக்கு அமெரிக்க வீசா கிடைக்கப்பெற்ற போதும், குசல் மெண்டிஸ் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோருக்கு வீசா வழங்கப்படவில்லை. 

எனவே ஏனைய வீரர்கள் இன்று அதிகாலை (14) அமெரிக்காவுக்கு புறப்பட்டுச்சென்ற போதும், குசல் மெண்டிஸ் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் அணியுடன் பயணிக்கவில்லை 

இந்தநிலையில் இவர்களுக்கான வீசாக்கள் விரைவாக கிடைக்கப்பெறும் என இலங்கை கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வீசா கிடைத்ததும் அசித மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அமெரிக்காவுக்கு புறப்படுவர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேற்குறித்த வீரர்களுக்கு வீசா தாமதமாக கிடைக்கப்பெற்றாலும் ஐசிசி T20 உலகக்கிண்ணத்தில் இவர்கள் பங்கேற்பதில் எந்தவித சிக்கல்களும் இருக்காது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<