இலங்கை மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான T-20 மோதல் அடுத்த மாதத்தில்

7284

இலங்கை கிரிக்கெட் வாரியமானது (SLC), அண்மையில் நாட்டில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கு, வரட்சி மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்கள் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிதிசேகரிக்கும் வகையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இலங்கை பதினொருவர் அணி மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையில் T-20 கிரிக்கெட் போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்டிருந்த சுனாமி பேரலையின் பின்னர் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் திலங்க சுமதிபாலவின் எண்ணக்கரு மூலம் உருவாக்கப்பட்ட “கிரிக்கெட் உதவி” (Cricket Aid) என்னும் நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாகவே இந்தப் போட்டி நடாத்தப்படவுள்ளது. அத்தோடு, இத்திட்டம் மூலம் கடந்த வருடத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகள் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு போட்டிகளில் வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்கவேண்டும் – வாஸ்

உள்நாட்டு போட்டிகளில் வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்கவேண்டும் – வாஸ்

இலங்கை கிரிக்கெட் (SLC) உள்நாட்டு போட்டிகளில் 2016/17 இல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ..

இப்போட்டியில் பங்கேற்கவிருக்கும் இலங்கை பதினொருவர் அணி தரப்பில், விளையாடுவதை இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான திலகரட்ன தில்ஷான் மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் தாம் இப்போட்டியில் விளையாடுவது தொடர்பாக இன்னும் கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.

மேலும், நல்ல காரியம் ஒன்றிற்காக இடம்பெறும் இந்த T-20 போட்டியில் விளையாடவுள்ள இரண்டு அணிகளிலும் இலங்கை மற்றும் உலகின் ஏனைய அணிகளில் தற்போது விளையாடிவரும் வீரர்களும் மற்றும் ஓய்வு பெற்ற  வீரர்களும் பங்கேற்கவுள்ளனர். போட்டியில் பங்கேற்கவுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான போட்டிக் கட்டணம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் வழங்கப்படவுள்ளது.

இந்த விஷேட T-20 போட்டி தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி அஷ்லி டீ சில்வா,

புனிதமான நோக்கம் ஒன்றிற்காக நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் பங்கேற்குமாறு அனைத்து நாடுகளுக்கும் எழுத்து மூலம் அழைப்பு விடுத்துள்ளோம். இதில் பங்கேற்க பலரும் தமது சம்மதத்தை தெரிவித்துள்ளனர். .சி.சி இன் அனுமதியோடு நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் பங்கேற்க 6 தொடக்கம் 7 வரையிலான நாடுகளிலிருந்து 13 இற்கும் மேற்பட்ட வீரர்கள் கொண்ட பட்டியல் ஒன்றும் எம்மால் பெறப்பட்டுள்ளதுநாங்கள் எடுக்கும் இறுதி முடிவோடு, போட்டியில் பங்கேற்வுள்ள பதினொருவர் அணிக் குழாமை ஒரு வாரத்திற்குள் வெளியிடுவோம். இந்த நிகழ்விற்காக கிட்டத்தட்ட 35-40 மில்லியன் ரூபா வரையில் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது

எனக் குறிப்பிட்டிருந்தார்.