அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள முத்தரப்பு தொடரில் விளையாடும் இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணியானது, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா இளையோர் அணிகளுடன் T20 மற்றும் ஐம்பது ஓவர்கள் கொண்ட முத்தரப்பு தொடர்களில் விளையாடவுள்ளது.
மொஹமட் சமாஸ், தீசன் அதிரடியில் ஜப்னா அணி வெற்றி
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை இளையோர் மகளிர் அணியில் முன்னாள் இலங்கை வீரர் திலகரட்ன டில்சானின் மகள் லிமன்சா திலகரட்னவும் இணைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இந்த முத்தரப்பு தொடரானது எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் குழாம்
மனுதி நாணயக்கார (தலைவி), ரஷ்மிகா செவ்வந்தி, சுமுது நிசன்சலா, சஞ்சனா காவிந்தி, விமோக்ஷா பாலசூரிய, ரஷ்மி நேத்ராஞ்சலி, எராந்தி ஹன்சமாலி, பிரமுதி மெத்சரா, ஹிருனி ஹன்சிகா, சமோதி பிரபோதயா, தஹமி சனெத்மா, அஷேனி தலகுனே, செஹாரா இந்துவரி, தனுலி தென்னகோன், நேதாங்கி இசுராஞ்சலி, லிமன்சா திலகரட்ன
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<