Home Tamil இறுதிப்பந்தில் வெற்றியை தவறவிட்ட இலங்கை மகளிர் அணி!

இறுதிப்பந்தில் வெற்றியை தவறவிட்ட இலங்கை மகளிர் அணி!

Sri Lanka Women’s Tour of Pakistan 2022

274

பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற மூன்றாவது T20I போட்டியில் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி தொடரை 0-3 என இழந்துள்ளது.

முதலிரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் மகளிர் அணி இலகுவான வெற்றிகளை பதிவுசெய்திருந்த நிலையில், மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சயில் வெற்றிபெற்றிருந்த இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

>>இலங்கை வரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பம் கிடைக்காத போதும், இந்தப்போட்டியில் ஹாசினி பெரேரா மற்றும் சமரி அதபத்து ஆகியோர் மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 69 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

எனினும், துரதிஷ்டவசமாக ஹாசினி பெரேரா 24 ஓட்டங்களுடன் ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்க, சமரி அதபத்து இதற்கு அடுத்த பந்தில் 37 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரின் ஆட்டமிழப்பின் பின்னர் இலங்கை அணி ஓட்டங்களை பெறத்தவறியதுடன், இந்தப்போட்டியில் 5 வீராங்கனைகள் ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில் இலங்கை மகளிர் அணி 120 ஓட்டங்களை கடக்கும் வாய்ப்பிருந்த போதும், மத்தியவரிசை வீராங்கனைகளின் ஏமாற்றத்தின் காரணமாக 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே இலங்கை அணி பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் நிடா தார் ஒரு ஓட்டத்தை மாத்திரம் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணிக்கு ஆரம்பத்தில் முனீபா அலி 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, இறுதி ஓவர்களில் அணித்தலைவி பிஸ்மா மரூப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இறுதிப்பந்தில் திரில் வெற்றியை பாகிஸ்தான் மகளிர் அணி பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் மகளிர் அணிக்கு இறுதி ஓவரில் 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், பிஸ்மா மரூப் மற்றும் கைனாட் இம்தியாஸ் ஆகியோர் அணியின் வெற்றியை உறுதிசெய்ததுடன், பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

பிஸ்மா மரூப் ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், ஆலியா ரியாஸ் 17 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் ஓசதி ரணசிங்க 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எனவே, இரண்டு அணிகளுக்கும் இடையிலான T20I தொடரை இலங்கை மகளிர் அணி 0-3 என இழந்துள்ளதுடன், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுருக்கம்

இலங்கை மகளிர் அணி – 107/8 (20), சமரி அதபத்து 37, ஹாசினி பெரேரா 24, நிடா தார் 1/1

பாகிஸ்தான் மகளிர் அணி – 108/6 (20), முனீபா அலி 25, ஆலியா ரியாஸ் 17, பிஸ்மா மரூப் 15*, ஓசதி ரணசிங்க 18/3

முடிவு – பாகிஸ்தான் மகளிர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

Result


Sri Lanka Women
107/8 (20)

Pakistan Women
108/6 (20)

Batsmen R B 4s 6s SR
Hasini Perera run out (Bismah Maroof) 24 30 2 0 80.00
Chamari Athapaththu c Iram Javed b Nida Dar 37 38 2 1 97.37
Nilakshi de Silva lbw b Tuba Hassan 9 12 1 0 75.00
Oshadi Ranasinghe run out (Bismah Maroof) 0 2 0 0 0.00
Harshitha Madavi run out (Muneeba Ali) 1 8 0 0 12.50
Kavisha Dilhari b Kainat Imtiaz 2 7 0 0 28.57
Ama Kanchana run out (Ayesha Nasem) 2 2 0 0 100.00
Anushka Sanjeewani not out 14 13 2 0 107.69
Sugandika Kumari run out (Muneeba Ali) 10 8 1 0 125.00


Extras 8 (b 4 , lb 0 , nb 0, w 4, pen 0)
Total 107/8 (20 Overs, RR: 5.35)
Bowling O M R W Econ
Anam Amin 4 0 24 0 6.00
Diana Baig 4 0 23 0 5.75
Omaima Sohail 2 0 13 0 6.50
Tuba Hassan 4 0 23 1 5.75
Kainat Imtiaz 4 0 19 1 4.75
Nida Dar 2 1 1 1 0.50


Batsmen R B 4s 6s SR
Muneeba Ali st Anushka Sanjeewani b Kavisha Dilhari 25 33 3 0 75.76
Iram Javed b Sugandika Kumari 10 12 2 0 83.33
Omaima Sohail st Anushka Sanjeewani b Oshadi Ranasinghe 4 11 0 0 36.36
Aliya Riaz c Nilakshi de Silva b Oshadi Ranasinghe 17 23 1 0 73.91
Ayesha Nasem c Nilakshi de Silva b Oshadi Ranasinghe 10 6 0 1 166.67
Nida Dar lbw b Kavisha Dilhari 14 14 2 0 100.00
Bismah Maroof not out 15 15 0 0 100.00
Kainat Imtiaz not out 4 7 0 0 57.14


Extras 9 (b 0 , lb 3 , nb 1, w 5, pen 0)
Total 108/6 (20 Overs, RR: 5.4)
Bowling O M R W Econ
Udeshika Prabodhani 1 0 10 0 10.00
Ama Kanchana 2 0 7 0 3.50
Sugandika Kumari 4 0 13 1 3.25
Oshadi Ranasinghe 4 0 18 3 4.50
Sachini Nisansala 4 0 25 0 6.25
Kavisha Dilhari 4 0 28 2 7.00
Chamari Athapaththu 1 0 5 0 5.00



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<