பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற முதல் T20I போட்டியில், இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை மகளிர் அணிக்கு மோசமான ஆரம்பமே கிடைத்திருந்தது.
>> திமுத், ஓசதவின் அரைச்சதங்களோடு வலுப்பெறும் இலங்கை கிரிக்கெட் அணி
இலங்கை மகளிர் அணியில் எதிர்பார்க்கப்பட்ட துடுப்பாட்ட வீராங்கனையான அணித்தலைவி சாமரி அதபத்து 6 ஓட்டங்களுடனும், ஹாசினி பெரேரா 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
எனினும் மத்தியவரிசையில் ஹர்சிதா மாதவி (25) மற்றும் நிலக்ஷி டி சில்வா (25) ஆகியோர் ஓரளவு ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்வடைந்தது. ஆனாலும், குறைந்த ஓட்ட வேகத்துடன் ஓட்டங்களை குவித்த இலங்கை அணியால் 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடிந்தது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை பொருத்தவரை அனாம் அமீன் மற்றும் டுபா ஹஸன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணிக்கு முதல் 10 ஓவர்களில் இலங்கை மகளிர் அணி கடுமையான சவாலை கொடுத்திருந்தது. இதில் 8.5 ஓவர்கள் நிறைவில் 45 ஓட்டங்களுக்கு பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.
எவ்வாறாயினும் பாகிஸ்தான் மகளிர் அணியின் தலைவி பிஸ்மா மரூப் மற்றும் நிடா தார் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர். இவர்கள் இருவரும் 41 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, 18.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றியை பதிவுசெய்தது.
பிஸ்மா மரூம் 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்ததுடன், நிடா தார் ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் ஓசதி ரணசிங்க அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் 1-0 என முன்னிலை வகிப்பதுடன், இரண்டாவது போட்டி எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுருக்கம்
இலங்கை மகளிர் அணி – 106/8 (20), ஹர்சிதா மாதவி 25, நிலக்ஷி டி சில்வா 25, டுபா ஹஸன் 8/3, அனாம் அமீன் 21/3
பாகிஸ்தான் மகளிர் அணி – 107/4 (18.2), நிடா தார் 36*, பிஸ்மா மரூம் 28, ஓசதி ரணசிங்க 20/2
முடிவு – பாகிஸ்தான் மகளிர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<
A PHP Error was encountered
Severity: Warning
Message: Invalid argument supplied for foreach()
Filename: controllers/Embed.php
Line Number: 86
Backtrace:
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 86
Function: _error_handler
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once
A PHP Error was encountered
Severity: Warning
Message: Invalid argument supplied for foreach()
Filename: embed/match_result.php
Line Number: 115
Backtrace:
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/views/embed/match_result.php
Line: 115
Function: _error_handler
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 92
Function: view
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once