Home Tamil ஒருநாள் தொடரினைக் கைப்பற்றிய நியூசிலாந்து மகளிர்

ஒருநாள் தொடரினைக் கைப்பற்றிய நியூசிலாந்து மகளிர்

Sri Lanka women's tour of New Zealand 2025 

4

சுற்றுலா இலங்கை மகளிர் கிரிக்கெட் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 98 ஓட்டங்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.  

முன்னணி மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்குபெறும் ஒருநாள் தொடர் இலங்கையில்

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது அங்கே ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் ஆடுகின்றது. இதில் இரு அணிகளும் .சி.சி. சம்பியன்ஷிப்பிற்காக பங்கெடுக்கும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை பெற்றிருக்க, மூன்றாவது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை (09) நெல்சன் நகரில் நடைபெற்றது 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து மகளிர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்ததோடு 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 280 ஓட்டங்கள் எடுத்தது. 

நியூசிலாந்து மகளிர் துடுப்பாட்டம் சார்பில் சதம் விளாசிய ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளில் ஒருவரான ஜோர்ஜியா பிளிம்மர் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகளோடு 112 ஓட்டங்கள் எடுத்தார் 

இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் சுகந்திகா குமாரி 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, அச்சினி குலசூரிய, சாமரி அத்தபத்து மற்றும் சச்சினி நிசன்ஷல ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டினர் 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 281 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை அணியானது 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 182 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது 

இலங்கை துடுப்பாட்டம் சார்பில் கவிஷ டில்ஹாரி மற்றும் நிலக்ஷி டி சில்வா ஆகியோர் தலா 45 ஓட்டங்கள் வீதம் பெற்றிருந்தனர். நியூசிலாந்து மகளிர் பந்துவீச்சில் ஜெஷ் கேர் மற்றும் ப்ரான் ஜோனாஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர் 

இதேநேரம் இப்போட்டியின் வெற்றியோடு நியூசிலாந்து மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் 2-0 என கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

போட்டியின் சுருக்கம் 

Result


New Zealand Women
280/6 (50)

Sri Lanka Women
182/10 (50)

Batsmen R B 4s 6s SR
Suzie Bates c Kavisha Dilhari b Sachini Nisansala 53 69 7 0 76.81
Georgia Plimmer c Kavisha Dilhari b Sugandika Kumari 112 120 8 2 93.33
Emma McLeod c Anushka Sanjeewani b Chamari Athapaththu 4 19 0 0 21.05
Brooke Halliday b Sugandika Kumari 36 42 2 0 85.71
Maddy Green c Nilakshika Silva b Sugandika Kumari 32 24 2 0 133.33
Isabella Gaze not out 24 18 1 1 133.33
Jess Kerr b Achini Kulasuriya 6 3 1 0 200.00
Polly Inglis not out 9 5 1 0 180.00


Extras 4 (b 0 , lb 1 , nb 0, w 3, pen 0)
Total 280/6 (50 Overs, RR: 5.6)
Bowling O M R W Econ
Achini Kulasuriya 10 1 62 1 6.20
Chethana Vimukthi 5 0 35 0 7.00
Chamari Athapaththu 10 1 39 1 3.90
Sugandika Kumari 10 0 70 3 7.00
Sachini Nisansala 6 0 31 1 5.17
Kavisha Dilhari 9 0 42 0 4.67


Batsmen R B 4s 6s SR
Vishmi Gunaratne c Maddy Green b Jess Kerr 6 10 1 0 60.00
Chamari Athapaththu c Maddy Green b Jess Kerr 5 20 0 0 25.00
Harshitha Samarawickrama c Eden Carson b Jess Kerr 8 18 1 0 44.44
Imesha Dulani st Polly Inglis b Eden Carson 11 42 0 0 26.19
Kavisha Dilhari b Brooke Halliday 45 54 0 1 83.33
Nilakshika Silva b Eden Carson 45 73 2 0 61.64
Anushka Sanjeewani c Emma Black b Fran Jonas 23 34 1 0 67.65
Sachini Nisansala b Fran Jonas 0 8 0 0 0.00
Sugandika Kumari c Bree Illing b Fran Jonas 2 5 0 0 40.00
Achini Kulasuriya c Brooke Halliday b Maddy Green 9 23 2 0 39.13
Chethana Vimukthi not out 4 13 0 0 30.77


Extras 24 (b 2 , lb 6 , nb 0, w 16, pen 0)
Total 182/10 (50 Overs, RR: 3.64)
Bowling O M R W Econ
Bree Illing 8 0 30 0 3.75
Jess Kerr 10 0 22 3 2.20
Fran Jonas 10 0 40 3 4.00
Eden Carson 10 2 29 2 2.90
Brooke Halliday 8 0 39 1 4.88
Suzie Bates 3 0 9 0 3.00
Maddy Green 1 0 5 1 5.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<