Home Tamil T20I தொடரினை சமநிலை செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி

T20I தொடரினை சமநிலை செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி

5

சுற்றுலா இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது T20I போட்டியில், நியூசிலாந்து 7 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.  

மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகள் பாகிஸ்தானில்

 நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது அங்கே ஒருநாள் தொடரின் பின்னர், T20I தொடரில் பங்கேற்று வருகின்றது 

இலங்கைநியூசிலாந்து மகளிர் அணிகள் இடையிலான முதல் T20I போட்டியில் இலங்கை வென்று தொடரில் 1-0 என முன்னிலை அடைந்த நிலையில், இன்று (16) இரண்டாவது போட்டி கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து வீராங்கனைகள் முதலில் களத்தடுப்பினைத் தெரிவு செய்தனர் 

அதன்படி முதலில் துடுப்பாடப் பணிக்கப்பட்ட இலங்கை வீராங்கனைகள் ஆரம்பம் முதலே தடுமாறி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்கள் மாத்திரம் பெற்றனர் 

இலங்கைத் துடுப்பாட்டம் சார்பில் மனுதி நாணயக்கார 35 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற, ஜெஸ் கெர் மற்றும் ப்ரீ இல்லிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர் 

டெல்லி கேபிடல்ஸின் தலைவராக அக்ஸர் படேல் நியமனம்

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 114 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து மகளிர் போட்டியின் வெற்றி இலக்கினை 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 117 ஓட்டங்களுடன் அடைந்தனர். 

நியூசிலாந்து மகளிர் அணியின் வெற்றியினை உறுதி செய்த வீராங்கனைகளில் அணித்தலைவி சூஷி பேட்ஸ் 47 ஓட்டங்களையும், ப்ரூக் ஹல்லிடேய் 46 ஓட்டங்களையும் பெற்றனர் 

இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை மகளிர் அணியுடனான T20I தொடரினை நியூசிலாந்து 1-1 என சமப்படுத்தியுள்ளது. இரண்டு அணிகளும் பங்கெடுக்கும் T20I தொடரினை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி செவ்வாய்க்கிழமை (18) டனேடின் நகரில் ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது 

போட்டியின் சுருக்கம் 

Result


New Zealand Women
117/3 (18.3)

Sri Lanka Women
113/7 (20)

Batsmen R B 4s 6s SR
Chamari Athapaththu b Jess Kerr 23 29 4 0 79.31
Vishmi Gunaratne b Bree Illing 0 2 0 0 0.00
Harshitha Samarawickrama c Suzie Bates b Bree Illing 11 15 0 0 73.33
Kavisha Dilhari b Flora Devonshire 12 12 1 0 100.00
Manudi Nanayakkara run out (Georgia Plimmer) 35 32 4 0 109.38
Nilakshika Silva c Georgia Plimmer b Brooke Halliday 20 22 1 0 90.91
Anushka Sanjeewani not out 1 3 0 0 33.33
Sugandika Kumari st Polly Inglis b Jess Kerr 1 3 0 0 33.33
Inoshi Priyadarshani not out 2 2 0 0 100.00


Extras 8 (b 0 , lb 1 , nb 0, w 7, pen 0)
Total 113/7 (20 Overs, RR: 5.65)
Bowling O M R W Econ
Bree Illing 4 0 18 2 4.50
Eden Carson 4 0 26 0 6.50
Jess Kerr 4 0 29 2 7.25
Suzie Bates 4 1 16 0 4.00
Flora Devonshire 2 0 12 1 6.00
Brooke Halliday 2 0 11 1 5.50


Batsmen R B 4s 6s SR
Suzie Bates c & b Inoshi Priyadarshani 47 46 4 0 102.17
Georgia Plimmer c Anushka Sanjeewani b Sugandika Kumari 4 5 1 0 80.00
Emma McLeod c Anushka Sanjeewani b Achini Kulasuriya 11 13 1 0 84.62
Brooke Halliday not out 46 40 5 0 115.00
Izzy Sharp not out 8 8 1 0 100.00


Extras 1 (b 0 , lb 0 , nb 1, w 0, pen 0)
Total 117/3 (18.3 Overs, RR: 6.32)
Bowling O M R W Econ
Inoshi Priyadarshani 4 0 19 1 4.75
Sugandika Kumari 3 0 16 1 5.33
Chamari Athapaththu 3 0 19 0 6.33
Malki Madara 3 0 26 0 8.67
Achini Kulasuriya 2.3 0 11 1 4.78
Kavisha Dilhari 3 0 26 0 8.67



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<