Home Tamil ஒருநாள் தொடரில் முன்னிலை அடைந்த நியூசிலாந்து மகளிர் அணி

ஒருநாள் தொடரில் முன்னிலை அடைந்த நியூசிலாந்து மகளிர் அணி

73
Sri Lanka women's tour of New Zealand

சுற்றுலா இலங்கை மகளிர் கிரிக்கெட் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 78 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

>>முன்னணி மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்குபெறும் ஒருநாள் தொடர் இலங்கையில்<<

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது அங்கே ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் ஆடுகின்றது. இதில் இரு அணிகளும் ஐ.சி.சி. சம்பியன்ஷிப்பிற்காக பங்கெடுக்கும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி இன்று (07) நெல்சன் நகரில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து மகளிர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்ததோடு 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 245 ஓட்டங்களை எடுத்தது.

நியூசிலாந்து துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக மேடி கீரின் சதம் விளாசி 109 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை பந்துவீச்சு சார்பில் சாமரி அத்தபத்து 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 248 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை அணியானது 46.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

இலங்கை துடுப்பாட்டம் சார்பில் ஹர்சிதா சமரவிக்ரம அதிகபட்சமாக 59 ஓட்டங்களை எடுக்க, நியூசிலாந்து தரப்பின் வெற்றியினை ஹன்னா ரோவே 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி உறுதி செய்தார்.

போட்டியின் சுருக்கம்

நியூசிலாந்து மகளிர் – 245/7 (50) மேடி கீரின் 100, சாமரி 42/2

 

இலங்கை மகளிர் – 167 (46.4) ஹர்சிதா சமரவிக்ரம 59, ஹன்னா ரோவே 31/4

Result


New Zealand Women
245/7 (50)

Sri Lanka Women
167/10 (46.4)

Batsmen R B 4s 6s SR
Suzie Bates run out (Kavisha Dilhari) 5 14 0 0 35.71
Georgia Plimmer c Manudi Nanayakkara b Chamari Athapaththu 28 54 4 0 51.85
Emma McLeod c Sugandika Kumari b Achini Kulasuriya 6 9 0 0 66.67
Brooke Halliday c Achini Kulasuriya b Chamari Athapaththu 6 16 0 0 37.50
Maddy Green run out (Nilakshika Silva) 100 109 7 0 91.74
Isabella Gaze c Inoshi Priyadarshani b Kavisha Dilhari 19 33 1 0 57.58
Jess Kerr b Inoshi Priyadarshani 38 44 2 0 86.36
Polly Inglis not out 34 21 5 0 161.90


Extras 9 (b 0 , lb 3 , nb 0, w 6, pen 0)
Total 245/7 (50 Overs, RR: 4.9)
Bowling O M R W Econ
Achini Kulasuriya 9 0 46 1 5.11
Inoshi Priyadarshani 9 0 43 1 4.78
Chethana Vimukthi 5 0 29 0 5.80
Sugandika Kumari 9 1 38 0 4.22
Chamari Athapaththu 10 1 42 2 4.20
Kavisha Dilhari 8 0 44 1 5.50


Batsmen R B 4s 6s SR
Vishmi Gunaratne c Jess Kerr b Hannah Rowe 8 16 1 0 50.00
Chamari Athapaththu c Hannah Rowe b Bree Illing 11 16 2 0 68.75
Harshitha Samarawickrama c Brooke Halliday b Hannah Rowe 59 77 4 0 76.62
Kavisha Dilhari c Polly Inglis b Eden Carson 25 42 1 0 59.52
Manudi Nanayakkara c Polly Inglis b Bree Illing 0 8 0 0 0.00
Nilakshika Silva lbw b Suzie Bates 20 44 1 0 45.45
Anushka Sanjeewani run out (Jess Kerr) 13 19 1 0 68.42
Sugandika Kumari not out 11 33 0 0 33.33
Achini Kulasuriya c Emma McLeod b Hannah Rowe 1 3 0 0 33.33
Inoshi Priyadarshani c Polly Inglis b Hannah Rowe 0 8 0 0 0.00
Chethana Vimukthi c Suzie Bates b Eden Carson 3 14 0 0 21.43


Extras 16 (b 1 , lb 1 , nb 0, w 14, pen 0)
Total 167/10 (46.4 Overs, RR: 3.58)
Bowling O M R W Econ
Bree Illing 10 0 45 2 4.50
Jess Kerr 10 1 23 0 2.30
Hannah Rowe 10 1 31 4 3.10
Eden Carson 8.4 0 30 2 3.57
Brooke Halliday 3 0 21 0 7.00
Suzie Bates 5 0 15 1 3.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<