இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்கா பயணம்

Sri Lanka Women’s tour of South Africa 2024

166

தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 T20i போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்த ஆண்டு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி விளையாடவுள்ள முதலாவது இருதரப்பு தொடர் இதுவாகும்.

தென்னாபிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான இந்த தொடர் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை அணி தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் தலா 3 T20i மற்றும் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடும். இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரானது ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்பிற்கான போட்டிகளாக அமையவுள்ளது.

இரு அணிக்கும் இடையிலான மூன்று T20i போட்டிகளும் எதிர்வரும் மார்ச் 27, 30 மற்றும் ஏப்ரல் 3ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

தொடர்ந்து இரு அணிகளும் மோதும் ஒருநாள் சர்வதேச போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் 9, 13 மற்றும் 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<