நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான இலங்கை மகளிர் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர்கொண்ட இலங்கை குழாத்தின் தலைவியாக சமரி அதபத்து செயற்படவுள்ளதுடன், ஹர்சிதா சமரவிக்ரம, விஷ்மி குணரத்ன, நிலக்ஷி டி சில்வா, கவீஷா டில்ஹாரி மற்றும் அனுஷ்கா சஞ்சீவனி போன்ற முன்னணி வீராங்கனைகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
>>பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் வடக்கிலிருந்து ஆரம்பம்
மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட இந்த தொடரில், ஒருநாள் போட்டிகள் மார்ச் 4, 7 மற்றும் 9ம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், T20I போட்டிகள் மார்ச் 14, 16 மற்றும் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
இந்த தொடருக்கான இலங்கை குழாம் எதிர்வரும் 22ம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்
- சமரி அதபத்து (தலைவர்)
- ஹர்சிதா சமரவிக்ரம
- விஷ்மி குணரத்ன
- நிலக்ஷி டி சில்வா
- கவீஷா டில்ஹாரி
- அனுஷ்கா சஞ்சீவனி
- மனுதி நாணயக்கார
- இமேஷா துலானி
- அச்சினி குலசூரிய
- உதேசிகா பிரபோதனி
- சச்சினி நிசன்சலா
- கௌசானி நுத்யங்கனா
- இனோசி பெர்னாண்டோ
- சுகந்திகா குமாரி
- ரஷ்மிகா செவ்வந்தி
- சேத்தனா விமுக்தி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<