அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் T20I போட்டியில் இலங்கை மகளிர் அணி சமரி அதபத்துவின் அபார ஆட்டத்துடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றியை பெற்றுக்கொண்டது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணி சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்தது.
>> இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணையும் முன்னாள் இங்கிலாந்து வீரர்
ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான கெபி லிவிஸ் 39 ஓட்டங்களை விளாச, ஓர்லா பிரெண்டெர்கெஸ்ட் 29 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அதேநேரம் லவுரா டெலனி மற்றும் ரெபேகா ஸ்டொகெல் ஆகியோர் தங்களுடைய பங்களிப்பின் உதவியுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் இனோசி பிரியதர்ஷனி 2 விக்கெட்டுகளையும், உதேசிகா பிரபோதனி மற்றும் சுகந்திகா குமாரி ஆகியோர் தலா ஒவ்வொரு வவிக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணிக்கு ஹர்சிதா சமரவிக்ரம அதிரடியாக ஓட்டங்களை குவித்து அசத்தியிருந்தார். சமரி அதபத்துவுக்கு பதிலாக ஆடிய ஹர்சிதா சமரவிக்ரம அதேபோன்று வேகமாக ஆடி 45 பந்துகளில் 86 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
இவருடன் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை விஷ்மி குணரத்ன 30 ஓட்டங்களையும், அனுஷ்கா சஞ்சீவினி 12 ஓட்டங்களையும் பெற 16.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதினை ஹர்சிதா சமரவிக்ரம பெற்றுக்கொண்டதுடன், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இலங்கை மகளிர் அணி முன்னிலை பெற்றுள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<