நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை மகளிர் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து மகளிர் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் மற்றும் 3 T20i போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் சம்பியன்ஷிப்புக்கான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என இலங்கை மகளிர் அணி வரலாற்று வெற்றியை பதிவுசெய்திருந்தது. இலங்கை மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்து மகளிர் அணியை முதன்முறையாக இலங்கை அணி வீழ்த்தியிருந்தது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடர் கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் சனிக்கிழமை (08) ஆரம்பமாகின்றது.
இந்த T20i தொடருக்கான இலங்கை குழாத்தின் தலைவியாக சமரி அதபத்து செயற்படவுள்ளார். அதேநேரம் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ள இந்த குழாத்தில் ஒருநாள் தொடரிலிருந்து எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஒருநாள் தொடரில் விளையாடிய அனைத்து வீராங்கனைகளுக்கும் T20i தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடர் எதிர்வரும் 8ம் திகதி முதல் 12ம் திகதிவரை கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மகளிர் T20i குழாம்
சமிர அதபத்து (தலைவி), விஷ்மி குணரத்ன, ஹர்சிதா சமரவிக்ரம, நிலக்ஷி டி சில்வா, கவீஷா டில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, ஓசதி ரணசிங்க, காவ்யா கவிந்தி, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர, உதேசியாக பிரபோதனி, ஹன்சிமா கருணாரத்ன, இனோஷா பெர்னாண்டோ, இமேஷா டுலானி, ஹாசினி பெரேரா
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<