நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை மகளிர் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் கடைசியாக நடைபெற்ற பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய வீராங்கனைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பந்துவீச்சாளரை விமர்சிக்கும் ஆஸி. முன்னாள் நட்சத்திரங்கள்
பங்களாதேஷ் மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் T20i தொடர்களுக்காக இலங்கை 21 பேர்கொண்ட குழாத்தை அறிவித்திருந்த போதும், தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு 15 பேர்கொண்ட குழாத்தை அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தின் தலைவியாக தொடர்ந்தும் சமரி அதபத்து செயற்படவுள்ளதுடன், பங்களாதேஷ் தொடரில் அறிமுகம் பெற்ற காவ்யா கவிந்தி நியூசிலாந்து தொடருக்கான குழாத்திலும் இடத்தை தக்கவைத்துள்ளார்.
அதேநேரம் தொடர்ச்சியாக இலங்கை அணிக்கு துடுப்பாட்டத்தில் பிரகாசித்துவரும் ஹர்சிதா சமரவிக்ரம, சுழல் பந்துவீச்சில் பிரகாசிக்கும் ஓசதி ரணசிங்க, அனுஷ்கா சஞ்சீவனி, நிலக்ஷி டி சில்வா, சுகந்திகா குமாரி மற்றும் இனோகா ரணவீர போன்ற முன்னணி வீராங்கனைளும் இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளனர்.
ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்புக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட T20i தொடருக்கான நியூசிலாந்து மகளிர் அணி இலங்கை வந்துள்ள நிலையில், போட்டித்தொடரானது எதிர்வரும் 27ம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் தொடருக்கான இலங்கை மகளிர் குழாம்
சமிர அதபத்து (தலைவி), விஷ்மி குணரத்ன, ஹர்சிதா சமரவிக்ரம, நிலக்ஷி டி சில்வா, கவீஷா டில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, ஓசதி ரணசிங்க, காவ்யா கவிந்தி, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர, உதேசியாக பிரபோதனி, ஹன்சிமா கருணாரத்ன, இனோஷா பெர்னாண்டோ, இமேஷா டுலானி, ஹாசினி பெரேரா
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<