இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது அடுத்த வாரம் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதோடு அங்கே மகளிர் ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் ஆடவிருக்கின்றது.
>>இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் திடீர் இராஜினாமா
அதன்படி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இலங்கை அணியானது அங்கே முதலில் இரு போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடவிருப்பதோடு, அதன் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றது.
இதில் T20I தொடர் ஒகஸ்ட் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதோடு, அதன் பின்னர் ஒகஸ்ட் மாதம் 16ஆம் திகதி ஒருநாள் தொடர் நடைபெறவிருக்கின்றது. இந்த ஒருநாள் தொடரானது ஐ.சி.சி. இன் மகளிர் சம்பியன்ஷிப்பிற்குள் அடங்குவதோடு, அது 2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத் தொடரிற்கான அணிகளை தெரிவு செய்வதில் மிக முக்கியமானதாக அமைகின்றது.
கடந்த வாரம் மகளிர் ஆசியக் கிண்ண சம்பியன்களாக நாமம் சூடிய இலங்கை அணியானது ஒகஸ்ட் மாதம் 06ஆம் திகதி அயர்லாந்து போட்டிகளுக்காக இலங்கையில் இருந்து பயணமாகுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சுற்றுத் தொடர் அட்டவணை
T20I போட்டிகள்
முதல் போட்டி – ஒகஸ்ட் 11 – டப்ளின்
இரண்டாவது போட்டி – ஒகஸ்ட் 13 – டப்ளின்
முதல் போட்டி – ஒகஸ்ட் 16 – பெல்பஸ்ட்
இரண்டாவது போட்டி – ஒகஸ்ட் 18 – பெல்பஸ்ட்
மூன்றாவது போட்டி – ஒகஸ்ட் 20 – பெல்பஸ்ட்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<