உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதி நான்கு அணிகளுக்குள் நுழையும் அளவுக்கு இலங்கை அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நான் நினைக்கவில்லை . என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி உலகக் கிண்ண அரையிறுதிக்கு தகுதி பெறாமல் நாடு திரும்ப உள்ள நிலையில் மஹேல தெரிவித்த கருத்துக்களை நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்
மத்திய வரிசையில் போதுமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதோடு லசித் மாலிங்க தவிர்த்து துடுப்பாட்ட வரிசைகளை அச்சுறுத்தும் அளவுக்கு பந்துவீச்சும் இருக்கவில்லை. அரையிறுதிக்கு நுழையும் அளவுக்கு அடிப்படையான பண்புகளும் இலங்கை அணியிடம் இருக்கவில்லை.
IPL போன்ற தொடர்களில் எமது வீரர்கள் விளையாட வேண்டும் – திமுத்
உலகளாவிய ரீதியில் நடைபெறும் சர்வதேச லீக் போட்டிகளில் இலங்கை அணியின் அதிக…
உலகக் கிண்ண அணி பற்றி எதிர்பார்ப்புகள் இருந்தன. இலங்கை போதுமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தாத போதும் பெரிய தொடர்களில் அவர்கள் எப்போதும் சிறப்பாக செயற்படுகின்றனர்.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான அவர்களின் வெற்றி அவர்களுக்கு அதிக நம்பிக்கையை கொடுத்தது. அந்த வெற்றிகளுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
மழையால் கைவிடப்பட்ட போட்டிகளால் வாய்ப்புகள் நழுவிப்போயின. இல்லாவிட்டால் இந்தியாவுக்கு எதிரான இறுதிக் குழுநிலைப் போட்டி ஒரு தீர்க்கமான ஆட்டமாக இருந்திருக்கக் கூடும். நிலைமை மாறிவிட்டது.
இந்தியாவுக்கு எதிராக அஞ்செலோ மெதிவ்ஸ் அபார சதம் ஒன்றை பெற்றார். அதற்கு அவர் தகுதியானவர்.
இலங்கைக்கு சவாலான ஓட்டம் ஒன்றை பெறமுடியாதது போல் தெரிந்தது. ஆனால், பெரிய இணைப்பாட்டம் ஒன்றை பெற்றதற்கு அவருக்கும் திரிமான்னவுக்குமே பாராட்டுகள் சேர வேண்டும்.
மத்திய வரிசை பலவீனப்படுவது போல் தெரிந்தாலும் மெதிவ்ஸ் அதனை சரிசெய்தார். அவர் அதிக அச்சுறுத்தல் கொண்ட ஆட்டத்திற்குச் செல்லாமல் இலங்கை அணியின் ஓட்டங்களை 264 ஆக உயர்த்தினார். அது சூழ்நிலைக்கு ஏற்றவாறானதாக அமைந்தது என்று நான் உணர்கிறேன்.
நாங்கள் உலகின் முன்னணி அணியாக மாறுவோம் – திமுத் கருணாரத்ன
இலங்கை அணியில் சங்கக்கார, மஹேல உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விளையாடிய…
அஞ்செலோ தொடரின் ஆரம்பத்தில் ஆடத்திறனுடன் இருக்கவில்லை. ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான இன்னிங்ஸ் அவருக்கு தீர்க்கமானதாக இருந்ததோடு அது அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
இலங்கை கிரிக்கெட்டுகாக அவருக்கு அதிகம் பங்களிப்புச் செய்ய முடியும் என்பதோடு எதிர்கால திட்டத்தில் அவர் கட்டாயம் இருக்க வேண்டும்.
இந்தியாவுக்கு எதிராக இலங்கை சரியாக ஆடவில்லை என்றபோதும் அவர்களின் பந்துவிச்சு ஒரே மாதிரியாக இருந்தது என்ற விமர்சனத்தை மாத்திரமே என்னால் முன்வைக்க முடியும். பந்துவீச்சுத் துறை அதிகம் கவலை அளிப்பதாக உள்ளது.
மாலிங்க தனது கிரிக்கெட் வாழ்வை முடித்துக் கொள்ளும் தருணத்தை எட்டியிருக்கும் நேரத்தில் எந்த ஒரு நிலையிலும் தாக்கம் செலுத்தக்கூடிய நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நான்கு அல்லது ஐந்து பந்துவீச்சாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ போன்ற இளம் வீரர்கள் மூலம் வலுவான துடுப்பட்ட வரிசை ஒன்றை கட்டியெழுப்ப முடியும். இவர்களில் பெரும்பாலானவர்கள் 2023 இல் இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ண போட்டி வரை விளையாட தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.
>>Photos: Sri Lanka vs India | ICC Cricket World Cup 2019 – Match 44<<
எனினும், விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய பந்துவீச்சாளர்கள் தேவைப்படுகின்றனர். எனவே, ஒருநாள் பந்துவீச்சில் தமது திட்டம் என்ன என்பதை கண்டறிய வேண்டும்.
அணித்தலைவராக திமுத் கருணாரத்ன மிகச் சிறந்த பணியை ஆற்றியதாக அனைவரும் உணர்கின்றனர்.
அது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தபோதும் நிலைமையை கட்டுப்படுத்தி செயற்பட்டார். சதகமான முடிவுக்காக தம்மாலான அனைத்து முயற்சிகளையும் அவர் செய்தார்.
துடுப்பாட்டத்திலும் உலகக் கிண்ணத்தை சிறந்த முறையில் அவர் ஆரம்பித்ததும் அவரது செயற்பாட்டுக்கு உதவியது. உலகக் கிண்ணத்தில் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சிறந்த முறையில் ஆற்றிய திமுத் தலைமைப் பொறுப்பில் தொடர்வதை பார்க்க இலங்கை விரும்பும் என்று நான் நம்புகிறேன்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<