இலங்கை அணியின் தோல்வி குறித்து மனந்திறந்த திலான் சமரவீர

1629

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், மோசமாக துடுப்பெடுத்தாடியதன் காரணத்தால் இலங்கை அணி 5 விககெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்விடைந்து, ஒருநாள் தொடரில் 0-1 என பின்தங்கிய நிலைக்கு முகங்கொடுத்துள்ளது.

பெரேராக்களின் இணைப்பினால் மீண்டது இலங்கை

ககிசோ றபாடா மற்றும் தப்ரைஸ் ஷம்சியின் அதிரடி.

டெஸ்ட் தொடரி்ல் தென்னாபிரிக்க அணியை சுழற்பந்து வீச்சின் மூலம் மிரட்டியெடுத்த இலங்கை அணி, 2-0 என தொடரை கைப்பற்றியிருந்தது. இந்தநிலையில், நேற்று (29) ஆரம்பமான ஒருநாள் தொடரில் இலங்கை அணி சாதிக்கும் என்ற எண்ணம் இலங்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்த போதும், அந்த எதிர்பார்ப்பை இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றத்துக்கு கொண்டுவந்திருந்தனர்.

இந்தநிலையில், இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க, தினேஷ் சந்திமால் மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு ஐசிசி தடை விதித்துள்ள காரணத்தால், போட்டிகளின் போது, அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும்,  துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் திலான் சமரவீர தனது ஏமாற்றத்தை போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போது வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் அங்கு குறிப்பிடுகையில்,

என்னை பொருத்தவரையில் அணியின் துடுப்பாட்டம் மிகவும் மோசமாக இருந்தது. ஆடுகளத்தில் எந்தவித தவறுகளும் இருக்கவில்லை. துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகத் தன்மையை ஆடுகளம் கொண்டிருந்ததுதுடுப்பாட்ட வீரர்களின் அசமந்த போக்கின் காரணமாகவே ஓட்டங்கள் பெறப்படவில்லை. டிக்வெல்ல புல் டோஸ் (full toss) பந்துக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதிலிருந்து அணியின் துடுப்பாட்டம் சரிவை நோக்கிச் சென்றது. முதல் ஒன்பது ஓவர்களுக்குள் 36 ஓட்டங்களுக்கு எமது அணியின் 5 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இது அணியின் துடுப்பாட்ட வரிசையின் பலவீனத்தை வெளிப்படுத்தியிருந்தது. இவ்வாறான நிலையிலிருந்து அணியை வெற்றியை நோக்கி கொண்டு செல்வது கடினமான விடயம்.

எவ்வாறாயினும், அதன் பின்னர் திசர பெரோ மற்றும் குசல் ஜனித் பெரேரா அணிக்கு நம்பிக்கை அளித்தனர்இவர்களின் கிட்டத்தட்ட நூறு ஓட்ட இணைப்பாட்டமானது (92 ஓட்டங்கள்) இலங்கை அணிக்கு வலு சேர்த்தது. அவர்களின் துடுப்பாட்டத்துக்கு வாழ்த்துகள். தென்னாபிரிக்க அணியின் பலம் முதல் 8 தொடக்கம் 10 ஓவர்கள். அதன் பின்னர் குறைந்த அனுபவங்களுடைய பந்து வீச்சாளர்களே அணியில் இணைக்கப்பட்டிருந்தனர். எனினும் நாம் துரதிஷ்டவசமாக குறித்த முதல் 9 ஓவர்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தோம். நாம் 275-280 ஓட்டங்களை எதிர்பார்த்திருந்தோம். எம்மிடம் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்ததால், குறித்த ஓட்ட எண்ணிக்கையின் மூலம் எதிரணியை கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணம் எமக்கிருந்தது.

பின்னர் நாம் 193 ஓட்டங்களை பெற்றதால், எமக்கு 10 விக்கட்டுகளை வீழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் போட்டியின் முதல் பாதியிலேயே நாம் பின்னடைவை சந்தித்தோம் என்றார்.

தென்னாபிரிக்காவுடனான முதல் மோதலில் இலங்கை வளர்ந்து வரும் அணி வெற்றி

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி மற்றும்

இதேவேளை நேற்றைய (29) போட்டியி்ல் இலங்கை அணி சரிவுப்பாதையை நோக்கிச் சென்ற போது, அதிரடி துடுப்பாட்ட வீரர் திசர பெரேரா மற்றும் குசல் பெரேரா ஜோடியின், சிறந்த இணைப்பாட்ட பிரதி அணிக்கு நம்பிக்கை அளித்திருந்தது. இதில் திசர பேரேராவின் நேர்த்தியானதும், பொறுப்பானதுமான ஆட்டம் அதிகமாக பேசப்பட்டு வந்தது. இதுதொடர்பில் குறிப்பிட்ட சமரவீர,

கடந்த ஆறு மாதங்களாக திசர பெரேரா அதிக முன்னேற்றத்தை பெற்றுள்ளார். நான் அவருக்கு அதிக சுதந்திரத்தையும், இடைவெளியை கொடுத்துள்ளேன். அந்த இடைவெளிகைளை அவர் சிறப்பாக நிரப்பி வருகின்றார். அதிலும் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்த திசர பேரேரா உடைமாற்றும் அறையில் அதிக ஏமாற்றத்துடன் இருந்ததை என்னால்  அவதானிக்க முடிந்தது. ஒருநாள் அரங்கில் தனது சதத்தை கடக்க ஒரு வாய்ப்பு இருந்தும், அதனை அவர் தவறவிட்டதை உணர்ந்திருந்தார். நான் குசல் பெரேரா மற்றும் திசர பெரேராவின் துடுப்பாட்டத்தை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்

தொடர்ந்து அணியின் தோல்வி குறித்து கருத்து வெளியிட்ட திலான் சமரவீர,

மொத்தமாக அணியின் தோல்விக்கு காரணம் மோசமான துடுப்பாட்டமும், துடுப்பாட்ட வீரர்களின் கவனக் குறைவும்தான். புல் டோஸ் பந்துக்கு ஒரு ஆட்டமிழப்பு மற்றும் ஒரு ரன்அவுட் ஆகிய இரண்டும் அணிக்கு  பின்னடைவை ஏற்படுத்தியது. நாம் ஏற்கனவே தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சு தொடர்பில் பேசியிருந்தோம். முதல் 10 ஓவர்கள் தொடர்பிலும், அடுத்து அவர்களது அனுபவமற்ற பந்து வீச்சாளர்கள் தொடர்பிலும் பேசியிருந்தோம். இப்படி இருந்தும் முதல் 5 விக்கட்டுகளை பறிகொடுத்தோம்.

தமிமின் சதத்தினால் ஒருநாள் தொடர் பங்களாதேஷ் அணிக்கு

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம்….

தற்போது ஒருநாள் போட்டிகளை பொருத்தவரையில் 300 -330 ஓட்டங்கள் பெறப்பட்டு வருகின்றது. இதற்கு அடிப்படை ஒன்றுதான். துடுப்பாட்ட வீரர்கள் மிகப்பெரிய இன்னி்ங்ஸ் வரை தங்களது துடுப்பாட்டத்தை கொண்டு செல்ல வேண்டுமாயின், முதல் 10 தொடக்கம் 20 பந்துகளின் ஆட்டத்தை கட்டியெழுப்ப வேண்டும். அதன் பின்னர் ஓட்டங்களை இலகுவாக குவிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். நாம் இப்பொழுது 50 ஓவர்கள் வரை துடுப்பெடுத்தாட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துவதில்லைஒரு துடுப்பாட்ட வீரரை நம்பியிருப்பதையும் விட அனைவருக்கும் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கின்றோம். துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிகமான சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். காரணம் தற்போது ஒருநாள் போட்டிகளில் 300 ஓட்டங்களை கடக்க வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது. எமது கண்டத்தை பொருத்தவரையில் 300 ஓட்டங்களின் தேவை குறைவாக இருப்பினும், இங்கிருந்து வெளியில் செல்லும் போது 300 ஓட்டங்களுக்கு அதிகமாக பெறவேண்டியது கட்டாயம்.

அத்துடன் மணிக்கட்டை மடித்து வீசும் சுழற்பந்து வீச்சாளர்ளை (wrist spinner) எதிர்கொள்வதற்கு துடுப்பாட்ட வீரர்கள் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருவது குறித்தும் தெளிவுப்படுத்திய இவர்,

துடுப்பாட்ட வீரர்கள் அதிகமாக மணிக்கட்டை மடித்து வீசும் சுழற்பந்து வீச்சாளர்களை (wrist spinner) எதிர்கொள்வதில் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் T-20 கிரிக்கெட் தான். இதனால் அதிகமான அணிகள் மணிக்கட்டை மடித்து வீசும் சுழற்பந்து வீச்சாளர்களை தெரிவுசெய்கின்றன. துடுப்பாட்ட வீரர்கள் மணிக்கட்டை மடித்து வீசும் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை கணிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். முன்னர் துடுப்பாட்ட வீரர்கள் பந்து வீச்சாளர்களின் கைகளை பார்த்து பந்தை எதிர்கொண்டு வந்தனர். ஆனால் தற்போது, ஆடுகளத்தை பார்த்து பந்தை கணிக்கின்றனர். இதனால் மீண்டும் அணிகள் மணிக்கட்டை மடித்து வீசும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன”  என்றார்.

இதேவேளை இலங்கை தொடரில் தங்களது முதலாவது வெற்றி தொடர்பில், நேற்றைய போட்டியில் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்திய டெப்ரைஷ் சம்ஷி கருத்து வெளியிடுகையில்,

“தம்புள்ளை ஆடுகளமானது சற்று தென்னாபிரிக்க ஆடுகளங்களை போன்றுதான் இருந்தது. பந்து அதிகமாக சுழலவில்லை. எனினும் இதே போன்ற ஆடுகளங்களில் நான் ஏற்கனவே பந்து வீசியுள்ளேன். அதனால் என்னால் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த முடிந்தது. முக்கியமாக எமது வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியமையானது எனது வேலையை இலகுவாக்கியது. இதுதொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கிரிக்கெட்டை பொருத்தவரையில் எது எப்போது நடக்கும் என யாருக்கும் தெரியாது. இன்று (நேற்று) எனக்கு நல்ல நாளாக அமைந்தது. அதனால் விக்கெட்டுகளை கைப்பறினேன். அடுத்த போட்டி எப்படி அமையும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் இயன்றளவு சிறப்பாக பந்து வீச முற்படுவேன். பயிற்றுவிப்பாளர் மற்றும் அணித் தலைவர் எனது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை வழங்கியுள்ளனர்.

 

நாம் இலங்கை வரும் போது வெற்றிகளை பெறுவேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வந்திருந்தோம். ஆனால் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்திருந்தோம்.  நாம் இங்கு வந்ததில் இருந்து கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றோம். வீரர்கள் அனைவரும் கடுமையாக உழைக்கின்றனர். நாம் பயிற்சியில் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றோம். பயிற்சியை ஒருபோதும் நாம் குறைக்கவில்லை. அதிலும் இலங்கை அணி சிறந்த அணி. அவர்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

எவ்வாறாயினும் வெற்றி, தோல்வி என்பது அடிக்கடி வருவதுதான்.  அதனால் நாம் பயிற்சிகளை விட்டுவிடப்போவதில்லை. வெற்றியோ? தோல்வியோ? ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்கின்றோம். அடுத்த போட்டிக்காகவும் நாங்கள் கடுமையாக உழைப்போம்” என குறிப்பி்ட்டார்.