தென்னாபிரிக்க அணிக்கு எதிராக எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் நிறைவில், வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கும் இலங்கை அணி, வெற்றிபெறுவதற்கு தந்திரோபாயங்களை பயன்படுத்துகின்றதா? என்ற கேள்விக்கு இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பதில் கொடுத்துள்ளார்.
தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட்டில் வெற்றியை நோக்கி முன்னேறும் இலங்கை அணி
கொழும்பு SSC சர்வதேச மைதானத்தில்..
இலங்கையில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணியை சற்றும் மேல் எழுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களை தினறடித்து வருகின்றனர். உலக டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்தை வகிக்கும் தென்னாபிரிக்க அணி கடந்த மூன்று இன்னிங்ஸ்களிலும் 130 ஓட்டங்களுக்கு மேல் ஓட்டங்களை குவிக்க முடியாமல் தடுமாறி வந்ததுடன், நேற்று முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவின் போதும், 139 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டிருந்தது.
இன்னும் வெற்றிக்கு 351 ஓட்டங்கள் தேவை எனும் நிலையில், துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்க அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் தங்களது முதற்தர துடுப்பாட்ட வீரர்களான அணித் தலைவர் பொப் டு ப்ளெஸிஸ், ஹசிம் அம்லா மற்றும் கடந்த 2014ஆம் ஆண்டு காலியில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற டீன் எல்கர் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதனால், வெற்றியின் மீதுள்ள முழு நம்பிக்கையையும் தென்னாபிரிக்க அணி இழந்துள்ளது.
இக்கட்டான நிலைக்கு முகங்கொடுத்துள்ள தென்னாபிரிக்க அணி சார்பில், நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நிறைவின் பின் ஊடகவியலாளர் சந்திப்பில் டீன் எல்கர் கலந்துக்கொண்டு, இலங்கை அணி மிக நுணுக்கமான யுத்திகளை கையாண்டு, தந்திரோபாயமான முறையில் தொடரில் விளையாடி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இளம் தனன்ஜயவின் அதிரடி மாற்றத்திற்கான காரணங்கள்
இலங்கை அணிக்காக பந்துவீச்சு மற்றும் துப்பாட்டாம்..
“அதாவது நாம் இங்கு வருகை தந்து கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் இரண்டு நாள் பயிற்சிப் போட்டியில் விளையாடினோம். இந்த போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளரையேனும் சந்திக்கவில்லை. அனைவரும் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டிருந்தோம். ஆனால், நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரில் நான் ஒரு வேகப்பந்து வீச்சாளரின் பந்து வீச்சைக்கூட சந்திக்கவில்லை. இலங்கை அணி சிறந்த திட்டமிடலுடன் இந்த தொடரில் களமிறங்கியுள்ளது.
பயிற்சிப் போட்டியில் விளையாடிய பி சரா ஓவல் ஆடுகளம், தட்டையான ஆடுகளமாக இருந்தது. ஆடுகளத்தில் சுழற்பந்து எடுபடவில்லை. ஒருநாள் துடுப்பாட்டத்துக்கு ஏற்றாற் போல ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் எங்களால் ஓட்டங்களை குவிக்க முடிந்ததுடன், டெஸ்ட் தொடரில் சோபிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், டெஸ்ட் தொடர் நடைபெற்ற காலி மற்றும் எஸ்.எஸ்.சி. மைதானங்கள் முழுமையாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. சுழற்பந்து வீச்சுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள முடியாத அளவிற்கு இலங்கை அணி எங்களுக்கான பயிற்சி ஆடுகளங்களை அமைத்து தந்திரோபாயமான பயன்படுத்தி வருகின்றது.” என குறிப்பிட்டுள்ளார்.
பி சாரா ஓவல் மைதானத்தில் விளையாடிய தென்னாபிரிக்க அணி 338 ஓட்டங்களை குவித்திருந்தது. இந்த போட்டியில் டீன் எல்கர் 43 ஓட்டங்கள், ஹசிம் அம்லா 78 ஓட்டங்கள், புவ்மா 58 ஓட்டங்கள் மற்றும் டு ப்ளெஸிஸ் 79 ஓட்டங்கள் என ஓட்டங்களை குவித்திருந்தனர். ஆனால், டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் தற்போது தடுமாறி வருவதுடன், இதுவரையில் தென்னாபிரிக்க அணியின் புவ்மா, தியூனிஸ் டி ப்ரைன் ஆகியோர் மாத்திரமே அரைச்சதம் அடித்துள்ள நிலையில், வேறு எந்த வீரரும் ஒரு அரைச் சதத்தைக்கூட கடக்க முடியாமல் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து குணதிலக்க இடைநிறுத்தம்
உடன் அமுலுக்கு வரும் வகையில் தனுஷ்க..
இந்த நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அஞ்செலோ மெதிவ்ஸ், சொந்த நாட்டில் விளையாடும் போது, அணிகள் தங்களுக்கு ஏற்ப ஆடுகளங்களையும், பயிற்சி போட்டிகள் நடைபெறும் மைதானங்களின் தன்மைகளையும் மாற்றத்துக்கு உட்படுத்துவது சாதாரண விடயம் எனவும், அது ஒரு தந்திரோபாயமாக இருக்கலாம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் குறிப்பிடுகையில்,
“தென்னாபிரிக்க அணிக்கு இப்போது ஏற்பட்டுள்ள அதே அனுபவம், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தென்னாபிரிக்காவில் எங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. பயிற்சிப் போட்டியில் விளையாடிய போட்செப்ஸ்ட்ரோம் மைதானத்தை போன்று, டெஸ்ட் போட்டியில் விளையாடிய மைதானங்கள் இருக்கவில்லை. மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதுவொரு தந்திரோபாயமாக இருக்க முடியும். இங்கு என்ன நடக்கின்றது என்பது எனக்கு தெரியாது. ஆனால் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும், தங்களுடைய சொந்த மண்ணில் தங்களது சாதனைகளை நிலைத்து வைத்துக்கொள்வதற்கு, ஆடுகளங்களை அமைப்பது சாதாரண விடயம்.
அத்துடன் வெளிநாட்டிலிருந்து வரும் துடுப்பாட்ட வீரர்களுக்கு, இலங்கை ஆடுகளங்களில் ஆடுவது அவ்வளவு இலகுவான விடயமாக இருக்காது. அதுவும் ஆசியாவுக்கு வெளியில் இருக்கும் நாடுகளில் இருந்து வரும் வீரர்களுக்கு மிக அதிக சவால்களை கொடுக்கும் ஆடுகளங்களாக இலங்கை ஆடுகளங்கள் அமையும்.
இதேபோன்ற நிலைதான் இங்கிருந்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்லும் எமக்கும். குறிந்த நாடுகளில் துடுப்பெடுத்தாடும் போது அதிக சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும். சொந்த நாட்டில் விளையாடும் அணிகள் தங்களுக்கு சாதகமான வகையில் களநிலைகளை மாற்றியமைத்துக்கொள்வது எப்போதும் நடந்து வருகின்ற ஒன்றுதான்” என குறிப்பிட்டுள்ளார்.