Home Tamil பிரதீப்பின் அபார பந்துவீச்சோடு ஸ்கொட்லாந்துடனான ஒருநாள் தொடர் இலங்கை வசம்

பிரதீப்பின் அபார பந்துவீச்சோடு ஸ்கொட்லாந்துடனான ஒருநாள் தொடர் இலங்கை வசம்

594
Photo - Peter Della Penna

சுற்றுலா இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின், இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் டக்வெத் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றியினை பதிவு செய்துள்ளது.

அதேநேரம், இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை 1-0 எனக் கைப்பற்றி கடந்த மூன்று வருடங்களில் தாம் பெற்றுக் கொண்ட முதலாவது இருதரப்பு தொடர் வெற்றியினையும் பதிவு செய்துள்ளது

இலங்கை ஏ அணியில் விளையாடுவதை புறக்கணித்த சந்திமால்

இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடுகின்ற வாய்ப்பை இழந்த..

உலகக் கிண்ணத்திற்கான தயார்படுத்தல்களில் ஈடுபடும் இலங்கை அணி ஸ்கொட்லாந்து அணியுடன் விளையாடும் இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி கடந்த சனிக்கிழமை (18) மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், தொடரின் தீர்மானமிக்க இரண்டாவது போட்டி எடின்பேர்க் நகரில் செவ்வாய்க்கிழமை (21) ஆரம்பமானது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஸ்கொட்லாந்து அணித் தலைவர் கைல் கோயெட்சர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை அணிக்கு வழங்கினார்.

கடந்த 2015ஆம் ஆண்டிலேயே ஒருநாள் போட்டிகளில் கடைசியாக ஆடிய திமுத் கருணாரத்ன, உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ஸ்கொட்லாந்து அணியுடனான இப்போட்டியின் மூலம் ஒருநாள் சர்வதேச போட்டி ஒன்றில் முதல் தடவையாக இலங்கை அணியினை வழிநடாத்தும் சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொண்டார்.

இதேவேளை, இப்போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பெற்ற லஹிரு திரிமான்ன, 18 மாதங்களின் பின்னரும் சகலதுறை வீரரான ஜீவன் மெண்டிஸ் 4 வருடங்களுக்கு பின்னரும் ஒருநாள் போட்டி ஒன்றில் ஆடும் வாய்ப்பினை பெற்றனர்.

மறுமுனையில் அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் பெரேரா, காயம் ஒன்றில் இருந்து பூரணமாக குணமடையாத நிலையில் அவருக்கு இப்போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது

இலங்கை அணி திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), லஹிரு திரிமான்ன, அவிஷ்க பெர்னாந்து, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, ஜீவன் மெண்டிஸ்,சுரங்க லக்மால், நுவான் பிரதீப், இசுரு உதான 

ஸ்கொட்லாந்து அணி மெத்திவ் குரோஸ், கைல் கொயெட்சர் (அணித்தலைவர்), கெலும் மெக்லியோட், கிரைக் வல்லஸ், ஜோர்ஜ் மன்ஸி, மைக்கல் லீஸ்க், டொம் சோல், சபியான் சரீப், அலிஸ்டைர் ஈவான்ஸ், மார்க் வாட், பிரட் வீல்

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக இலங்கைத்தரப்பு தமது துடுப்பாட்டத்தை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் அவிஷ்க பெர்னாந்து ஆகியோருடன் ஆரம்பம் செய்தது.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் நிதான ஆரம்பத்தை வழங்கியதனால், இலங்கை அணியின் முதல் விக்கெட்டுகாக சிறப்பான முறையில் 123 ஓட்டங்கள் பகிரப்பட்டன

பின்னர் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக ஓய்வறை நடந்த அவிஷ்க பெர்னாந்து ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது கன்னி அரைச்சதத்தை பூர்த்தி செய்து 78 பந்துகளில் 74 ஓட்டங்களை குவித்தார். அவிஷ்க பெர்னாந்து தனது துடுப்பாட்டத்தின் போது 3 சிக்ஸர்களையும், 5 பெளண்டரிகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

அவிஷ்க பெர்னாந்துவினை அடுத்து திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் தமது அரைச்சதங்களோடு இலங்கை அணிக்கு வலுச்சேர்த்தனர். இதில் திமுத் கருணாரத்ன ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற இரண்டாவது அரைச்சதத்தோடு 77 ஓட்டங்களை குவிக்க, குசல் மெண்டிஸ் ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற 15ஆவது அரைச்சதத்தோடு 56 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களை எடுத்தார்

பின்னர் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களாக வந்த அஞ்செலோ மெதிவ்ஸ், திசர பெரேரா மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்த போதிலும் லஹிரு திரிமான்ன தனது துடுப்பாட்டம் மூலம் ஆறுதல் தந்தார்

லஹிரு திரிமான்னவின் துடுப்பாட்ட உதவியோடும் பின்வரிசை வீரர்களான இசுரு உதான மற்றும் சுரங்க லக்மால் ஆகியோரின் அதிரடியோடும் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 322 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.  

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் லஹிரு திரிமான்ன 40 பந்துகளில் 44 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் நின்றார். இதேவேளை, அதிரடி காட்டிய இசுரு உதான 2 சிக்ஸர்கள் அடங்கலாக 15 ஓட்டங்களையும், சுரங்க லக்மால் 4 பந்துகளுக்கு 12 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சு சார்பாக பிரட்லீ வீல் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சபியான் சரீப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

தொட முடியாத உயரத்தில் மெக்ராத்: சாதிக்க காத்திருக்கும் மாலிங்க

உலகக் கிண்ண வரலாற்றை எடுத்துக்…

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 323 ஓட்டங்களை அடைய ஸ்கொட்லாந்து அணி பதிலுக்கு துடுப்பாட ஆரம்பித்தது.

ஸ்கொட்லாந்து அணியின் துடுப்பாட்டத்தினை அதன் தலைவர் கைல் கொயெட்சர் மற்றும் மெத்திவ் குரோஸ் ஆகியோர் ஆரம்பம் செய்தனர். ஸ்கொட்லாந்து அணியின் துடுப்பாட்டம் ஆரம்பித்து அவர்கள் நல்ல ஆரம்பத்தை பெற்ற போதிலும், நுவான் பிரதீப் அடுத்தடுத்த விக்கெட்டுகள் மூலம் நெருக்கடி தந்தார். அதன்படி, நுவான் பிரதீப்பின் விக்கெட்டுகளாக கைல் கொயெட்சர் 34 ஓட்டங்களுடனும், கெலும் மெக்லியோட் ஒரு ஓட்டத்துடனும் அரங்கு நடந்தனர். இதனை அடுத்து இன்னுமொரு விக்கெட்டினை பறிகொடுத்து ஸ்கொட்லாந்து அணி மேலும்  தடுமாறியது

எனினும், களத்தில் இருந்த மெதிவ் குரோஸ், புதிய துடுப்பாட்ட வீரராக வந்த ஜோர்ஜ் மன்ஸியுடன் இணைந்து மீண்டுமொரு இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்க முயன்றனர். இந்நிலையில் போட்டியில் மழையின் குறுக்கீடு உருவானது. அப்போது ஸ்கொட்லாந்து அணியினர் 27 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றிருந்தனர்

தொடர்ந்து மழையின் குறுக்கீடு இல்லாமல் போக போட்டியின் வெற்றி இலக்காக ஸ்கொட்லாந்து அணிக்கு டக்வெத் லூயிஸ் முறைப்படி 34 ஓவர்களில் 235 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கினை நெருங்க குறைவான ஓவர்களே இருந்ததனால் தொடர்ந்து அதிரடியான முறையில் ஸ்கொட்லாந்து அணி ஆடத் தொடங்கியது. எனினும், இலங்கை பந்துவீச்சாளர்களை சமாளிப்பது ஸ்கொட்லாந்து அணிக்கு சிரமமாகியது.

இதனால், இறுதியில் 199 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த ஸ்கொட்லாந்து அணி போட்டியில் தோல்வியினை தழுவியது. ஸ்கொட்லாந்து அணியின் வெற்றிக்காக அதிரடி மூலம் போராடிய ஜோர்ஜ் மன்ஸி அரைச்சதம் ஒன்றுடன் 41 பந்துகளில் 62 ஓட்டங்களை குவித்ததோடு, மெதிவ் குரோஸும் அரைச்சதம் தாண்டி 55 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இலங்கை அணியின் வெற்றியினை பந்துவீச்சு மூலம் உறுதி செய்து ஒருநாள் தொடர் வெற்றியினை பெற காரணமான நுவான் பிரதீப் 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, சுரங்க லக்மால் 2 விக்கெட்டுகளையும், திசர பெரேரா மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இந்த ஆண்டு தாம் விளையாடிய 8 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியினை தழுவிய இலங்கை அணி, ஸ்கொட்லாந்து அணியுடனான இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் தமது தோல்வி ஓட்டத்தினையும் நிறைவு செய்திருக்கின்றது.

போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணியின் நுவான் பிரதீப் தெரிவாகியிருந்தார்.

போட்டியின் ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka
322/8 (50)

Scotland
199/10 (33.2)

Batsmen R B 4s 6s SR
Avishka Fernando c George Munsey b Michael Leask 74 78 5 3 94.87
Dimuth Karunaratne c & b Bradley Wheal 77 75 7 0 102.67
Kusal Mendis b Safyaan Sharif 66 56 4 3 117.86
Thisara Perera c Matthew Cross b Bradley Wheal 0 1 0 0 0.00
Angelo Mathews c Michael Leask b Tom Sole 1 10 0 0 10.00
Lahiru Thirimanne not out 44 40 3 1 110.00
Dhananjaya de Silva c Tom Sole b Mark Watt 7 10 0 0 70.00
Jeevan Mendis c George Munsey b Safyaan Sharif 13 8 1 1 162.50
Isuru Udana c Tom Sole b Bradley Wheal 15 7 0 2 214.29
Suranga Lakmal not out 12 4 1 21 300.00


Extras 13 (b 0 , lb 4 , nb 2, w 7, pen 0)
Total 322/8 (50 Overs, RR: 6.44)
Fall of Wickets 1-123 (22.1) Avishka Fernando, 2-204 (33.3) Dimuth Karunaratne, 3-205 (33.4) Thisara Perera, 4-210 (34.4) Angelo Mathews, 5-238 (41.2) Kusal Mendis, 6-258 (44.4) Dhananjaya de Silva, 7-280 (47.2) Jeevan Mendis, 8-301 (48.4) Isuru Udana,

Bowling O M R W Econ
Bradley Wheal 10 0 49 3 4.90
Safyaan Sharif 10 0 76 2 7.60
Alasdair Evans 7 0 55 0 7.86
Tom Sole 9 0 52 1 5.78
Mark Watt 10 0 61 1 6.10
Michael Leask 4 1 25 1 6.25


Batsmen R B 4s 6s SR
Matthew Cross c Avishka Fernando b Suranga Lakmal 55 71 4 0 77.46
Kyle Coetzer c Lahiru Thirimanne b Nuwan Pradeep 34 44 7 0 77.27
Calum MacLeod b Nuwan Pradeep 1 4 0 0 25.00
Craig Wallace c Kusal Mendis b Isuru Udana 18 23 0 0 78.26
George Munsey b Nuwan Pradeep 61 42 6 3 145.24
Michael Leask c Avishka Fernando b Suranga Lakmal 8 4 0 1 200.00
Tom Sole c Dimuth Karunaratne b Kusal Perera 5 3 1 0 166.67
Safyaan Sharif b Nuwan Pradeep 0 1 0 0 0.00
Mark Watt not out 8 6 1 0 133.33
Alasdair Evans run out (Kusal Perera) 1 2 0 0 50.00
Bradley Wheal run out (Dimuth Karunaratne) 0 0 0 0 0.00


Extras 8 (b 0 , lb 3 , nb 0, w 5, pen 0)
Total 199/10 (33.2 Overs, RR: 5.97)
Fall of Wickets 1-51 (10.4) Kyle Coetzer, 2-52 (12.1) Calum MacLeod, 3-95 (20.5) Craig Wallace, 4-153 (28.4) Matthew Cross, 5-171 (30.2) Michael Leask, 6-191 (31.2) Tom Sole, 7-189 (31.3) George Munsey, 8-189 (31.4) Safyaan Sharif, 9-189 (33.1) Alasdair Evans, 10-199 (33.2) Bradley Wheal,

Bowling O M R W Econ
Suranga Lakmal 7 0 55 2 7.86
Nuwan Pradeep 7 0 34 4 4.86
Dhananjaya de Silva 5.2 0 30 0 5.77
Thisara Perera 7 1 46 1 6.57
Isuru Udana 7 0 31 1 4.43



முடிவுஇலங்கை அணி டக்வெத் லூயிஸ் முறைப்படி 35 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<