முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்திய பாகிஸ்தான் மகளிர் அணி

397
Sri Lanka vs Pakistan

சுற்றுலா பாகிஸ்தான் மகளிர் அணி மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையே  தம்புள்ளையில் இன்று (20) இடம்பெற்று முடிந்திருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தரப்பு இலங்கை மகளிர் அணியை 69 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது.

[rev_slider LOLC]

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் மகளிர் அணி இங்கு (இலங்கை மகளிர் அணியுடன்) மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது.

ஒரு நாள் போட்டிகள் யாவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை நடாத்தும் (ஐ.சி.சி இன்) மகளிர் சம்பியன்ஷிப் தொடரினுடைய அங்கமாக இடம்பெறுகின்றன.

மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மூன்று போட்டிகளில் பங்கேற்றிருந்த இலங்கை அணி அது மூன்றிலும் தோல்வியைத் தழுவியிருந்தது. மறுமுனையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் வைத்து ஐ.சி.சி மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்தை எதிர் கொண்டிருந்த பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என பறிகொடுத்திருந்தது.

உடைமாற்றும் அறைக் கதவை உடைத்தவர் ஷகீப் அல் ஹஸன்

பங்களாதேஷுக்கு எதிராக இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி ஒன்றை பெற்ற சுதந்திரக் கிண்ண

எனவே, இன்றைய முதலாவது ஒரு நாள் போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றியை எதிர்பார்த்த வண்ணம் களமிறங்கியிருந்தன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவி சமரி அட்டபத்து முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்தார்.

இலங்கை மகளிர் அணி இன்றைய போட்டி மூலம் மகளிர் ஒரு நாள் போட்டிகளுக்காக 17 வயதேயான கவிஷ்கா தில்ஹாரியை அறிமுகம் செய்ய பாகிஸ்தானும் மகளிர் ஒரு நாள் போட்டிகளில் முதல் தடவையாக முனீபா அலி மற்றும் நட்டாலியா பேர்வைஸ் ஆகியோருக்கு வாய்ப்புத் தந்திருந்தது.

தொடர்ந்து ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கணைகளாக நஹிதா கான் மற்றும் முனீபா அலி ஆகியோர் மைதானத்திற்குள் விரைந்திருந்தனர். இலங்கை  மகளிர் அணி இதில் கன்னிப் போட்டியில் விளையாடும் முனீபாவை ஓட்டமேதும் இல்லாத நிலையிலும் நஹீதாவை 13 ஓட்டங்களுடனும் ஓய்வறைக்கு அனுப்பி அதிரடி ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்டது. ஒரு கட்டத்தில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து தடுமாறிய பாகிஸ்தான் மகளிர் அணிக்காக மூன்றாம் இலக்கத்தில் துடுப்பாடிய அனுபவமிக்க வலதுகை துடுப்பாட்ட வீராங்கணையான ஜவேரியா கான் பொறுமையாக செயற்பட்டு ஓட்டங்களை உயர்த்தினார்.

Photos: Sri Lanka Women’s vs Pakistan Women’s – 1st ODI 2018

Sri Lanka Women vs Pakistan Women, 1st ODI 20.03.2018 at Rangiri Dambulla International Stadium, Dambulla.

தொடர்ந்தும் சிறப்பாக ஓட்டங்கள் பெற்ற ஜவேரியா தனது தரப்புக்காக சதம் ஒன்றைக் கடந்தார். இதேவேளை, ஜவேரியாவுக்கு நிதா தார் (34) மற்றும் சனா மிர் (27) ஆகியோரும் பெறுமதியான ஓட்டங்களுடன் கைகொடுத்திருந்தனர்.

இதனால், 50 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் மகளிர் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணிக்காக சதம் தாண்டிய ஜவேரியா கான் 142 பந்துகளில் 15 பவுண்டரிகள் அடங்கலாக 113 ஓட்டங்களைக் குவித்திருந்தார். இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சு சார்பாக சஷிகலா சிறிவர்தன அணித்தலைவி சமரி அட்டபத்து ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 251 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெற பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி, அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 181 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணி ரசிகருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ரோஹித் சர்மா

சுதந்திரக் கிண்ண முக்கோண T20 தொடரில் இந்திய

இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித்தலைவி சமரி அட்டபத்து 46 ஓட்டங்களையும், சஷிகலா சிறிவர்தன 44 ஓட்டங்களையும் குவித்திருக்க ஏனைய வீராங்கணைகள் எவரும் 20 ஓட்டங்களையும் தாண்டியிருக்காது ஓய்வறை நடந்திருந்தனர்.

பாகிஸ்தானின் பந்துவீச்சு சார்பாக இடதுகை சுழல் வீராங்கணையான அந்நாட்டு அணித்தலைவி பிஸ்மா மஹ்ரூப் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், சனா மிர் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இப்போட்டியின் வெற்றியோடு பாகிஸ்தான் மகளிர் அணி  மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது. இரண்டு அணிகளும் பங்குபெறும் தொடரின் இரண்டாவது போட்டியும் முதல் போட்டி இடம் பெற்ற தம்புள்ளை மைதானத்தில் வியாழக்கிழமை (22) நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்

முடிவு – பாகிஸ்தான் மகளிர் அணி 69 ஓட்டங்களால் வெற்றி