Home Tamil தோல்வியுடன் உலகக் கிண்ணத்தை நிறைவு செய்த இலங்கை அணி

தோல்வியுடன் உலகக் கிண்ணத்தை நிறைவு செய்த இலங்கை அணி

ICC World Cup 2023

324

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் தமது இறுதி குழுநிலைப் போட்டியில் இலங்கை அணியினை எதிர்கொண்ட நியூசிலாந்து 6 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் நியூசிலாந்து உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு செல்வதற்கான தங்களது வாய்ப்புக்களையும் அதிகரித்திருக்கின்றது.

>>இளையோர் ஆசியக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது

முன்னதாக பெங்களூரில் ஆரம்பித்த இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை அணிக்கு வழங்கியிருந்தார்.

இப்போட்டிக்கான இலங்கை அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியிருந்தது. அந்தவகையில் கசுன் ராஜிதவிற்குப் பதிலாக சாமிக்க கருணாரட்ன இலங்கை குழாத்தில் உள்வாங்கப்பட்டிருந்தார்.

இலங்கை XI

தனன்ஜய டி சில்வா, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (தலைவர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் பெரேரா, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, சாமிக்க கருணாரட்ன, டில்சான் மதுசங்க

நியூசிலாந்து XI

டெவோன் கொன்வேய், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (தலைவர்), டேரைல் மிச்சல், மார்க் சாப்மன், டொம் லேதம், மிச்சல் சான்ட்னர், டிம் சௌத்தி, ட்ரென்ட் போல்ட், லோக்கி பெர்குஸன்

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணியானது ஆரம்ப வீரர்களில் ஒருவரான குசல் ஜனித் பெரேரா மூலம் சிறந்த ஆரம்பத்தினைப் பெற்ற போதிலும், மறுமுனையில் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

>>இலங்கை கிரிக்கெட் சபை செயலாளர் இராஜினாமா

விக்கெட்களை இழந்த போதும் தொடர்ந்து சிறப்பாக ஆடியிருந்த குசல் பெரேரா 22 பந்துகளில் அரைச்சதம் விளாசியதோடு 2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரில் வீரர் ஒருவர் பெற்ற அதிவேக அரைச்சதத்தினைப் பூர்த்தி செய்தார். எனினும் அவரது விக்கெட் பின்னர் லோக்கி பெர்குஸனின் பந்துவீச்சில் பறிபோனது. ஆட்டமிழக்கும் போது பெரேரா 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இதன் பின்னர் மீண்டும் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய இலங்கை அணிக்கு மகீஷ் தீக்ஷன சற்று ஆறுதல் வழங்க இலங்கை அணி 46.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த மகீஷ் தீக்ஷன 3 பௌண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், லோக்கி பெர்குஸன், மிச்சல் சான்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர்  போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 172 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணியானது 23.2 ஓவர்களில் குறிப்பிட்ட வெற்றி இலக்கை 5 விக்கெட்டுக்களை இழந்து அடைந்தது. நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் டெவோன் கொன்வேய் 45 ஓட்டங்களையும், டேரைல் மிச்சல் 31 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்களையும் பெற்றிருந்தார். இவரோடு ரச்சின் ரவீந்திரா 42 ஓட்டங்கள் பெற்றார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அஞ்செலோ மெதிவ்ஸ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், மகீஷ் தீக்ஷன மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றி இருந்த போதும் அது வீணாகியது.

போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளரான ட்ரென்ட் போல்ட் தெரிவாகினார். இப்போட்டியின் தோல்வியோடு இலங்கை இந்த உலகக் கிண்ணத் தொடரினை தோல்வியுடன் நிறைவு செய்து நாடு திரும்புகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


New Zealand
172/5 (23.2)

Sri Lanka
171/10 (46.4)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Tom Latham b Tim Southee 2 8 0 0 25.00
Kusal Perera c Mitchell Santner b Lockie Ferguson 51 28 9 2 182.14
Kusal Mendis c Rachin Ravindra b Trent Boult 6 7 1 0 85.71
Sadeera Samarawickrama c Mitchell Santner b Trent Boult 1 2 0 0 50.00
Charith Asalanka lbw b Trent Boult 8 8 1 0 100.00
Angelo Mathews c Daryl Mitchell b Mitchell Santner 16 27 2 0 59.26
Dhananjaya de Silva c Daryl Mitchell b Mitchell Santner 19 24 2 1 79.17
Chamika Karunaratne c Tom Latham b Lockie Ferguson 6 17 1 0 35.29
Mahesh Theekshana not out 38 91 3 0 41.76
Dushmantha Chameera c Trent Boult b Rachin Ravindra 1 20 0 0 5.00
Dilshan Madushanka c Tom Latham b Rachin Ravindra 19 48 2 0 39.58


Extras 4 (b 0 , lb 1 , nb 0, w 3, pen 0)
Total 171/10 (46.4 Overs, RR: 3.66)
Bowling O M R W Econ
Trent Boult 10 1 37 3 3.70
Tim Southee 8 0 52 1 6.50
Lockie Ferguson 10 2 35 2 3.50
Mitchell Santner 10 2 22 2 2.20
Rachin Ravindra 7.4 0 21 2 2.84
Glenn Phillips 1 0 3 0 3.00


Batsmen R B 4s 6s SR
Devon Conway c Dhananjaya de Silva b Dushmantha Chameera 45 42 9 0 107.14
Rachin Ravindra c Dhananjaya de Silva b Mahesh Theekshana 42 34 3 3 123.53
Kane Williamson b Angelo Mathews 14 15 2 0 93.33
Daryl Mitchell c Charith Asalanka b Angelo Mathews 43 31 5 2 138.71
Mark Chapman run out (Sadeera Samarawickrama) 7 6 1 0 116.67
Glenn Phillips not out 17 10 3 0 170.00
Tom Latham not out 2 2 0 0 100.00


Extras 2 (b 0 , lb 0 , nb 0, w 2, pen 0)
Total 172/5 (23.2 Overs, RR: 7.37)
Bowling O M R W Econ
Dilshan Madushanka 6.2 0 58 0 9.35
Mahesh Theekshana 7 0 43 1 6.14
Dhananjaya de Silva 2 0 22 0 11.00
Dushmantha Chameera 4 1 20 1 5.00
Angelo Mathews 4 0 29 2 7.25



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<