Home Tamil சாதனை வெற்றியுடன் நெதர்லாந்தினை தோற்கடித்த இலங்கை

சாதனை வெற்றியுடன் நெதர்லாந்தினை தோற்கடித்த இலங்கை

351

இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ண முதல் சுற்றுக்கான போட்டியில், 08 விக்கெட்டுக்களால் இலங்கை அணி சாதனை வெற்றியினை பதிவு செய்திருக்கின்றது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் நடைபெறும் T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றின் குழு A இல் இடம்பெற்றுள்ள  இலங்கை அணி, தமது முதலிரண்டு போட்டிகளிலும் நமீபியா, அயர்லாந்து ஆகிய நாடுகளை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் தமது இறுதி குழுநிலைப் போட்டியில் நெதர்லாந்து அணியினை எதிர்கொண்ட போட்டி இன்று (22) ஷார்ஜா நகரில் ஆரம்பமாகியது.

சுபர் 12 சுற்றுக்கு முன் இலங்கைக்கு உள்ள இறுதி சவால் நெதர்லாந்து

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை அணியின் தலைவர் தசுன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை நெதர்லாந்து அணிக்கு வழங்கியிருந்தார்.

இப்போட்டிக்கான இலங்கை அணி முன்வரிசையில் மோசமாக செயற்படும் தினேஷ் சந்திமாலுக்கு பதிலாக சரித் அசலன்கவிற்கு வாய்ப்பு வழங்க, நெதர்லாந்து அணியும் மூன்று மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.

இலங்கை அணி

தசுன் ஷானக (தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, பெதும் நிஸ்ஸங்க, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார

நெதர்லாந்து அணி

மெக்ஸ் ஒடொவ்ட், பென் கூப்பர், பாஸ் டி லீடே, கொலின் அக்கர்மன், ரயன் டென் டஸ்சாட்டே, ஸ்கொட் எட்வார்ட்ஸ், பீட்டர் சீலர் (தலைவர்), பிரட் கிளாஸ்ஸன், பிரன்டன் குளோவர், ஸ்டீபன் மைபர்க், போல் வான் மீக்கிரேன்

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த நெதர்லாந்து அணிக்கு, ஆரம்பத்திலேயே தசுன் ஷானக்க மிகச் சிறந்த ரன்அவுட் ஒன்றுடன் நெருக்கடியினை உருவாக்கினார். இதனால், நெதர்லாந்து அணியின் ஆரம்பவீரர்களில் ஒருவரான மெக்ஸ் ஒடொவ்டின் விக்கெட் அவர் 02 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பறிபோனது.

சுபர் 12 சுற்றுக்கு தகுதிபெற்று வரலாறு படைத்தது நமீபியா

தமது முதல் விக்கெட்டினைப் பறிகொடுத்த பின்னர் நெதர்லாந்து அணி சிறந்த அடித்தளம் ஒன்றினை உருவாக்க முயன்ற போதும், போட்டியின் மூன்றாவது ஓவரினை வீசிய மகீஷ் தீக்ஷன, இரண்டு விக்கெட்டுக்களை அடுத்தடுத்து கைப்பற்றினார். தீக்ஷனவின் விக்கெட்களாக மாறிய பென் கூப்பர் 09 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலும், ஸ்டிபன் மைபர்க் 05 ஓட்டங்களை பெற்ற நிலையிலும், மைதானத்தினை விட்டு வெளியேறினர்.

அதன் பின்னர் புதிய ஓவரினை வீசிய வனிந்து ஹஸரங்க நெதர்லாந்து அணியின் இரண்டு வீரர்களினை ஓய்வறை அனுப்பினார். வனிந்து ஹஸரங்கவின் முதல் விக்கெட்டாக மாறிய கொலின் அக்கர்மன் 11 ஓட்டங்களுடனும், பாஸ் டி லீட் ஓட்டமேதுமின்றியும் ஆட்டமிழந்து சென்றனர். இதனால், நெதர்லாந்து அணி 32 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் இக்கட்டான நிலைக்குச் சென்றது.

“மஹேலவின் வருகை இலங்கை அணிக்கு மிகப்பெரிய போனஸ்” – முரளி

தொடர்ந்து விக்கெட் வேட்டையில் லஹிரு குமாரவும் தனது அபார வேகத்துடன் இணைய, நெதர்லாந்து அணி தமது இறுதி 5 விக்கெட்டுக்களையும் வெறும் 12 ஓட்டங்களுக்குள் பறிகொடுத்து 10 ஓவர்களில் வெறும் 44 ஓட்டங்களைப் பெற்று சுருண்டது. நெதர்லாந்து அணி இலங்கையுடன் பெற்ற 44 ஓட்டங்கள் T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் அணியொன்று பெற்ற இரண்டாவது குறைந்த ஓட்டங்களாகவும் பதிவானது.

நெதர்லாந்து அணியின் துடுப்பாட்டத்தில் மத்திய வரிசைத்துடுப்பாட்டவீரர்களில் அனைவரும் ஓரிலக்க ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். இந்நிலையில் அபார பந்துவீச்சினை வெளிப்படுத்திய இலங்கை அணி சார்பில் லஹிரு குமார மற்றும் வனிந்து ஹஸரங்க தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, மகீஷ் தீக்ஷன 2 விக்கெட்டுக்களையும், துஷ்மன்த சமீர ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 45 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, போட்டியின் வெற்றி இலக்கினை 7.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்து இலகுவான முறையில் அடைந்தது.

ஹேரத்திற்கு மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் வாழ்நாள் உறுப்புரிமை

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆட்டமிழக்காது இருந்த குசல் ஜனித் பெரேரா 6 பௌண்டரிகள் அடங்கலாக 24 பந்துகளில் 33 ஓட்டங்களைப் பெற்று தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்தார்.

நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில் பிரன்டன் குளோவர் மற்றும் போல் வென் மீக்கிரென் ஆகியோர் தலா ஒரு விக்கெட் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் வேகப்பந்தில் அசத்திய லஹிரு குமார தெரிவாகினார்.

இப்போட்டியின் வெற்றியோடு T20 உலகக் கிண்ண முதல் சுற்றின் குழு A இல் மூன்று வெற்றிகளுடன் முதலிடம் பெற்றிருக்கும் இலங்கை, T20 உலகக் கிண்ணத் தொடரின் அடுத்த சுற்றில் தாம் விளையாடும் முதல் போட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) பங்களாதேஷ் அணியினை எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்


Result


Netherland
44/10 (10)

Sri Lanka
45/2 (7.1)

Batsmen R B 4s 6s SR
Stephan Myburgh b Maheesh Theekshana 5 5 1 0 100.00
Max O’Dowd run out (-Select-) 2 3 0 0 66.67
Ben Cooper b Maheesh Theekshana 10 8 2 0 125.00
Colin Ackermann lbw b Wanidu Hasaranga 11 9 1 1 122.22
Bas de Leede lbw b Wanidu Hasaranga 0 3 0 0 0.00
Scott Edwards lbw b Lahiru Kumara 8 13 1 0 61.54
Roelof van der Merwe c Kusal Perera b Dushmantha Chameera 0 3 0 0 0.00
Pieter Seelaar lbw b Wanidu Hasaranga 2 6 0 0 33.33
Fred Klaassen not out 1 5 0 0 20.00
Brandon Glover c Kusal Perera b Lahiru Kumara 0 2 0 0 0.00
Paul van Meekeren lbw b Lahiru Kumara 0 3 0 0 0.00


Extras 5 (b 1 , lb 3 , nb 0, w 1, pen 0)
Total 44/10 (10 Overs, RR: 4.4)
Fall of Wickets 1-0 (0.4) Max O’Dowd, 2-0 (2.3) Ben Cooper, 3-0 (2.5) Stephan Myburgh, 4-0 (4.3) Colin Ackermann, 5-0 (4.6) Bas de Leede, 6-0 (5.5) Roelof van der Merwe, 7-0 (6.6) Pieter Seelaar, 8-0 (9.3) Scott Edwards, 9-0 (9.3) Brandon Glover, 10-0 (9.6) Paul van Meekeren,

Bowling O M R W Econ
Chamika Karunaratne 1 0 7 0 7.00
Dushmantha Chameera 2 0 13 1 6.50
Maheesh Theekshana 1 0 3 2 3.00
Lahiru Kumara 3 1 7 3 2.33
Wanidu Hasaranga 3 0 9 3 3.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Brandon Glover b Paul van Meekeren 0 5 0 0 0.00
Kusal Perera not out 33 24 6 0 137.50
Charith Asalanka c Paul van Meekeren b Fred Klaassen 6 10 1 0 60.00
Avishka Fernando not out 2 4 0 0 50.00


Extras 4 (b 1 , lb 0 , nb 0, w 3, pen 0)
Total 45/2 (7.1 Overs, RR: 6.28)
Fall of Wickets 1-0 (1.7) Pathum Nissanka,

Bowling O M R W Econ
Fred Klaassen 2.1 0 12 0 5.71
Brandon Glover 3 0 12 1 4.00
Paul van Meekeren 2 0 20 1 10.00



முடிவு – இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<