Home Tamil T20 உலகக் கிண்ணப் பயிற்சி மோதலை வெற்றியுடன் நிறைவு செய்த இலங்கை அணி

T20 உலகக் கிண்ணப் பயிற்சி மோதலை வெற்றியுடன் நிறைவு செய்த இலங்கை அணி

166
Sri Lanka vs Irelands - ICC World T20 2024

இலங்கை கிரிக்கெட் அணியானது 2024ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடருக்காக விளையாடியிருந்த பயிற்சி மோதல் ஒன்றில் அயர்லாந்து அணியினை 41 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது.

>>வீசா பிரச்சினையால் T20 உலகக் கிண்ண வாய்ப்பை இழக்கும் நேபாள வீரர்<<

இலங்கை அணிக்கு T20 உலகக் கிண்ணத் தொடரில் இறுதிப் பயிற்சி ஆட்டமாக அமைந்திருந்த போட்டி நேற்று (01) ஐக்கிய அமெரிக்காவின் ப்ளோரிடாவில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் இலங்கை வீரர்களை துடுப்பாடப் பணித்தது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை வீரர்கள் சிறந்த ஆரம்பம் ஒன்றைப் பெற்ற போதிலும் பின்னர் தடுமாறியிருந்தனர். ஒரு கட்டத்தில் 97 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணியானது பின்னர் அஞ்செலோ மெதிவ்ஸின் பொறுப்பான ஆட்டத்தோடு 8 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்கள் எடுத்தனர்.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக அஞ்சேலோ மெதிவ்ஸ் ஆட்டமிழக்காது 30 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 32 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் வனிந்து ஹஸரங்க 26 ஓட்டங்கள் பெற்றார்.

அயர்லாந்து பந்துவீச்சு சார்பில் ஜோஷ் லிட்டில் மற்றும் பெர்ரி மெக்கார்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 164 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து அணியானது இலங்கைப் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறியதோடு 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவினர்.

>>105 பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைப்பு<<

அயர்லாந்து துடுப்பாட்டம் சார்பில் கேர்டிஸ் கேம்பர் 26 ஓட்டங்கள் பெற்று அதிக ஓட்டங்களைப் பதிவு செய்ய, இலங்கைப் பந்துவீச்சில் தசுன் ஷானக்க வெறும் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சுருட்டி இலங்கையின் வெற்றியினை உறுதி செய்தார். தசுன் ஷானக்க தவிர வனிந்து ஹஸரங்க மற்றும் மகீஷ் தீக்ஷண ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


Ireland
122/10 (18.2)

Sri Lanka
163/8 (20)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Lorcan Tucker b Craig Young 22 15 1 2 146.67
Kusal Mendis c Gareth Delany b Josh Little 13 8 1 1 162.50
Kamindu Mendis b Josh Little 0 3 0 0 0.00
Sadeera Samarawickrama c Paul Stirling b Barry McCarthy 13 11 3 0 118.18
Charith Asalanka c Harry Tector b Curtis Campher 6 13 1 0 46.15
Wanidu Hasaranga c Josh Little b Ben White 26 21 3 1 123.81
Angelo Mathews not out 32 30 1 2 106.67
Dasun Shanaka c Mark Adair b Barry McCarthy 23 15 2 1 153.33
Dhananjaya de Silva c Craig Young b Mark Adair 9 4 2 0 225.00
Matheesha Pathirana not out 2 2 0 0 100.00


Extras 17 (b 0 , lb 4 , nb 2, w 11, pen 0)
Total 163/8 (20 Overs, RR: 8.15)
Bowling O M R W Econ
Mark Adair 4 0 28 1 7.00
Josh Little 4 0 45 2 11.25
Craig Young 2.2 0 19 1 8.64
Barry McCarthy 2.4 0 31 2 12.92
Curtis Campher 2 0 5 1 2.50
Ben White 3 0 22 1 7.33
Gareth Delany 2 0 9 0 4.50


Batsmen R B 4s 6s SR
Andy Balbirnie c Kusal Mendis b Maheesh Theekshana 16 17 3 0 94.12
Paul Stirling c Angelo Mathews b Dushmantha Chameera 21 13 4 0 161.54
Lorcan Tucker lbw b Wanidu Hasaranga 11 11 0 1 100.00
Harry Tector c Angelo Mathews b Dasun Shanaka 13 8 2 0 162.50
Curtis Campher lbw b Maheesh Theekshana 26 26 2 1 100.00
George Dockrell b Dasun Shanaka 17 10 1 1 170.00
Gareth Delany b Wanidu Hasaranga 4 8 0 0 50.00
Mark Adair c Kusal Mendis b Dasun Shanaka 1 2 0 0 50.00
Barry McCarthy c Wanidu Hasaranga b Dasun Shanaka 4 10 0 0 40.00
Craig Young lbw b Matheesha Pathirana 1 3 0 0 33.33
Josh Little not out 2 2 0 0 100.00


Extras 6 (b 0 , lb 1 , nb 0, w 5, pen 0)
Total 122/10 (18.2 Overs, RR: 6.65)
Bowling O M R W Econ
Angelo Mathews 2 0 12 0 6.00
Dushmantha Chameera 2 0 19 1 9.50
Maheesh Theekshana 4 0 14 2 3.50
Wanidu Hasaranga 4 0 40 2 10.00
Dasun Shanaka 3.2 0 23 4 7.19
Matheesha Pathirana 3 0 13 1 4.33



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<