இந்திய – இலங்கை மற்றும் தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கையை இந்தியா 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.
இந்தியா, இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய மூன்று மகளிர் கிரிக்கெட் அணிகளும் ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் விதத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மகளிர் முக்கோண ஒருநாள் தொடரின் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியது.
>> முக்கோண ஒருநாள் தொடரின் சம்பியனாக இலங்கை A கிரிக்கெட் அணி
மழையின் காரணமாக அணிக்கு 39 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா இலங்கை வீராங்கனைகளை துடுப்பாடப் பணித்ததோடு இலங்கை முதலில் துடுப்பாடி 38.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரம் எடுத்துக் கொண்டது.
இலங்கை சார்பில் அதிகபட்சமாக ஹாசினி பெரேரா 30 ஓட்டங்கள் பெற்றார். இந்திய மகளிர் அணியின் பந்துவீச்சில் ஸ்நேஹ் ரனா 3 விக்கெட்டுக்களையும் தீப்தி சர்மா மற்றும் நல்லபுரெட்டி சரணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 148 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இந்திய மகளிர் அணி குறித்த வெற்றி இலக்கினை பிரத்திக்கா ராவல் மற்றும் ஹர்லின் டியோலின் சிறப்பாட்டத்தோடு அடைந்து கொண்டது.
இந்திய மகளிர் அணியின் வெற்றியினை உறுதி செய்த பிரத்திக்கா ராவல் தன்னுடைய 4ஆவது அரைச்சதத்தோடு 52 ஓட்டங்களை பெற, ஹர்லின் 48 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார். இதேநேரம் ஸ்மிரிதி மந்தனா 43 ஓட்டங்கள் எடுத்தார்.
போட்டியின் ஆட்டநாயகியாக இந்திய மகளிர் தரப்பின் பிரத்திக்கா ராவல் தெரிவாகினார். இப்போட்டியின் வெற்றியோடு இந்திய மகளிர் தொடரில் சிறந்த ஆரம்பத்தினைப் பெற, இலங்கை வீராங்கனைகளுக்கு அது மோசமான துவக்கமாக மாறியது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Hasini Perera | lbw b Sneh Rana | 30 | 46 | 4 | 0 | 65.22 |
Chamari Athapaththu | c Richa Ghosh b Arundhati Reddy | 7 | 18 | 1 | 0 | 38.89 |
Harshitha Samarawickrama | run out (Jemimah Rodrigues) | 14 | 24 | 1 | 0 | 58.33 |
Hansima Karunaratne | c & b Sneh Rana | 4 | 16 | 0 | 0 | 25.00 |
Kavisha Dilhari | c Arundhati Reddy b Shree Charani | 25 | 26 | 3 | 0 | 96.15 |
Nilakshika Silva | c & b Sneh Rana | 10 | 13 | 0 | 0 | 76.92 |
Anushka Sanjeewani | st Richa Ghosh b Deepti Sharma | 22 | 39 | 3 | 0 | 56.41 |
Piumi Badalge | c Pratika Rawal b Shree Charani | 2 | 7 | 0 | 0 | 28.57 |
Achini Kulasuriya | c Jemimah Rodrigues b Deepti Sharma | 17 | 34 | 1 | 0 | 50.00 |
Malki Madara | run out (Harmanpreet Kaur) | 2 | 2 | 0 | 0 | 100.00 |
Inoka Ranaweera | not out | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 14 (b 12 , lb 0 , nb 0, w 2, pen 0) |
Total | 147/10 (38.1 Overs, RR: 3.85) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kashvee Gautam | 8 | 0 | 28 | 0 | 3.50 | |
Arundhati Reddy | 8 | 0 | 26 | 1 | 3.25 | |
Deepti Sharma | 5.1 | 0 | 22 | 2 | 4.31 | |
Sneh Rana | 8 | 0 | 31 | 3 | 3.88 | |
Shree Charani | 8 | 0 | 26 | 2 | 3.25 | |
Pratika Rawal | 1 | 0 | 2 | 0 | 2.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pratika Rawal | not out | 50 | 62 | 7 | 0 | 80.65 |
Smriti Mandhana | c & b Inoka Ranaweera | 43 | 46 | 6 | 0 | 93.48 |
Harleen Deol | not out | 48 | 71 | 4 | 0 | 67.61 |
Extras | 8 (b 0 , lb 0 , nb 1, w 7, pen 0) |
Total | 149/1 (29.4 Overs, RR: 5.02) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Malki Madara | 6 | 0 | 31 | 0 | 5.17 | |
Achini Kulasuriya | 3 | 0 | 12 | 0 | 4.00 | |
Kavisha Dilhari | 6 | 0 | 41 | 0 | 6.83 | |
Inoka Ranaweera | 7.4 | 2 | 32 | 1 | 4.32 | |
Chamari Athapaththu | 4 | 0 | 22 | 0 | 5.50 | |
Piumi Badalge | 3 | 0 | 11 | 0 | 3.67 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<