போராடி வெற்றியை தவறவிட்ட இலங்கை உடல் அங்க குறைப்பாடு உள்ளோர் அணி

200

இலங்கை மற்றும் இந்திய உடல் அங்க குறைப்பாடு உள்ளோர் அணிகளுக்கிடையில் கொழும்பு BRC மைதானத்தில நடைபெற்ற முதலாவது T-20 போட்டியில் இந்திய உடல் அங்க குறைப்பாடு உள்ளோர் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இந்த T-20 தொடரை இலங்கை உடல் அங்க குறைப்பாடு உள்ளோர் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டி நேற்று (23) நடைபெற்றது.

நான் சஹீட் அப்ரிடி போன்று பந்துவீச விரும்புகின்றேன் – ஸ்டீவ் ஸ்மித்

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சர்வதேச …

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி ஆடிய இந்திய அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பால்ராஜ் மற்றும் ஜீட் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை குவித்தது. அதிகபட்சமாக பால்ராஜ் 47 ஓட்டங்களையும்,ஜீட் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இவர்களுக்கு அடுத்தப்படியாக கைலாஸ் 29 ஓட்டங்களை விளாசினார். இலங்கை அணியின் சார்பில் இந்திரஜித் 3 விக்கெட்டுகளையும், பி.ஜி.கயான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் வரை போராடிய நிலையில், 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து, 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதன்படி இலங்கை அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.

இலங்கை அணியின் சார்பில் ரத்நாயக்க 26 ஓட்டங்களையும், ஏக்கநாயக்க 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, இந்திய அணியின் பந்து வீச்சில் கைலாஸ் 2 விக்கெட்டுகளையும், ஏனைய பந்து வீச்சாளர்கள் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

காலி அணியை சுழலால் சுருட்டிய தம்புள்ளை அணிக்கு இரண்டாவது வெற்றி

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற …

இதனடிப்படையில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலைப்பெற்றுள்ளது. இரண்டு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டி இன்று (24) BRC மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

போட்டி சுருக்கம்

இந்திய உடல் அங்க குறைப்பாடு உள்ளோர் அணி149(20),பால்ராஜ் 47 (25), ஜீட் 34 (36),இந்திரஜித் 26/3

இலங்கை உடல் அங்க குறைப்பாடு உள்ளோர் அணி146(20), ரத்நாயக்க 26(32), ஏக்கநாயக்க 25(13), கைலாஸ் 35/2

ஆட்டநாயகன்கைலாஸ்

போட்டி முடிவுஇந்திய உடல் அங்க குறைப்பாடு உள்ளோர் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…