Home Tamil சாதனை வெற்றியுடன் உலகக் கிண்ண அரையிறுதியில் இந்தியா

சாதனை வெற்றியுடன் உலகக் கிண்ண அரையிறுதியில் இந்தியா

ICC ODI World Cup 2023

353

உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிய  போட்டியில் இலங்கை அணியினை இந்தியா 302 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது.

இந்திய மோதலில் தனன்ஞயவிற்கு ஓய்வா?

முன்னதாக இந்தியாவின் மும்பையில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்ற இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய அணிக்கு வழங்கியிருந்தார்.

இப்போட்டிக்கான இலங்கை அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியிருந்தது.  அதன்படி தனன்ஞய டி சில்வா, துஷான் ஹேமன்தவினால் பிரதியீடு செய்யப்பட்டிருந்தார்.

இலங்கை XI 

பெதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (தலைவர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, துஷான் ஹேமன்த, அஞ்செலோ மெதிவ்ஸ், துஷ்மன்த சமீர, மகீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, டில்சான் மதுசங்க 

இந்தியா XI

ரோஹிட் சர்மா (தலைவர்), சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், KL ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, மொஹமட் சமி, ஜஸ்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ், மொஹமட் சமி

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே ரோஹிட் சர்மாவின் விக்கெட்டினை கைப்பற்றி டில்சான் மதுசங்க நெருக்கடி உருவாக்கிய போதிலும், அவ்வணியின் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக விராட் கோலி – சுப்மான் கில் ஜோடி 189 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டத்திற்கு காரணமான வீரர்களில் ஒருவரான சுப்மான் கில் 92 ஓட்டங்களைப் பெற்றதோடு அது அவரின் 11ஆது ஒருநாள் அரைச்சதமாக மாறியது. மறுமுனையில் விராட் கோலி 92 பந்துகளில் 11 பௌண்டரிகள் உடன் 88 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

எனினும் இந்திய அணிக்காக மத்திய வரிசை வீரர்களில் ஒருவராக வந்த ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடி அரைச்சதம் விளாச இந்திய அணியானது 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 357 ஒட்டங்கள் எடுத்தது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தன்னுடைய 16ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 82 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் இந்திய அணிக்கு பின்வரிசையில் பலம் வழங்கிய ரவீந்திர ஜடேஜா 24 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 35 ஓட்டங்கள் பெற்றார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் டில்சான் மதுசங்க 80 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு அது ஒருநாள் போட்டிகளில் அவரின் சிறந்த பந்துவீச்சுப் பிரதியாகவும் மாறியது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 358 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி இரண்டாம் இன்னிங்ஸின் முதல் பந்தில் இருந்தே விக்கெட்டுக்களைப் பறிகொடுக்கத் தொடங்கியதோடு, மிக மோசமான துடுப்பாட்ட இன்னிங்ஸை வெளிப்படுத்தி 19.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 55 ஓட்டங்களை எடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது. அத்துடன் இது இலங்கை அணி ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளில் பெற்ற அதிகுறைந்த ஓட்டங்களாக மோசமான சாதனை ஒன்றுக்கும் காரணமாகியது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஐந்து வீரர்கள் ஓட்டமேதுமின்றி ஆட்டமிழக்க அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக 14 ஓட்டங்களுடன் கசுன் ராஜித மாறியிருந்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் குறிப்பாக அதன் வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயற்பட்டிருந்ததோடு அதில் மொஹமட் சமி வெறும் 18 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மொஹமட் சிராஜ் 03 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தார்.

இலங்கை அணியினை இப்போட்டியில் வீழ்த்திய இந்தியா உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவான முதல் அணியாக மாற, போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் சமி தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

Result


India
357/8 (50)

Sri Lanka
55/10 (19.4)

Batsmen R B 4s 6s SR
Rohit Sharma b Dilshan Madushanka 4 2 1 0 200.00
Shubman Gill c Kusal Mendis b Dilshan Madushanka 92 92 11 2 100.00
Virat Kohli c Pathum Nissanka b Dilshan Madushanka 88 94 11 0 93.62
Shreyas Iyer c Mahesh Theekshana b Dilshan Madushanka 82 56 3 6 146.43
KL Rahul c Dushan Hemantha b Dushmantha Chameera 21 19 2 0 110.53
Suryakumar Yadav c Kusal Mendis b Dilshan Madushanka 12 9 2 0 133.33
Ravindra Jadedja run out (Sadeera Samarawickrama) 35 24 1 1 145.83
Mohammed Shami run out (Kusal Mendis) 2 4 0 0 50.00
Jasprit Bumrah not out 1 1 0 0 100.00


Extras 20 (b 5 , lb 6 , nb 1, w 8, pen 0)
Total 357/8 (50 Overs, RR: 7.14)
Bowling O M R W Econ
Dilshan Madushanka 10 0 80 5 8.00
Dushmantha Chameera 10 2 71 1 7.10
Kasun Rajitha 9 0 65 0 7.22
Angelo Mathews 3 0 11 0 3.67
Mahesh Theekshana 10 0 67 0 6.70
Dushan Hemantha 8 0 52 0 6.50


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka lbw b Jasprit Bumrah 0 1 0 0 0.00
Dimuth Karunaratne lbw b Mohammed Siraj 0 1 0 0 0.00
Kusal Mendis b Mohammed Siraj 1 10 0 0 10.00
Sadeera Samarawickrama c Shreyas Iyer b Mohammed Siraj 0 4 0 0 0.00
Charith Asalanka c Ravindra Jadedja b Mohammed Shami 1 24 0 0 4.17
Angelo Mathews b Mohammed Shami 12 25 1 0 48.00
Dushan Hemantha c KL Rahul b Mohammed Shami 0 1 0 0 0.00
Dushmantha Chameera c KL Rahul b Mohammed Shami 0 6 0 0 0.00
Mahesh Theekshana not out 12 23 2 0 52.17
Kasun Rajitha c Shubman Gill b Mohammed Shami 14 17 2 0 82.35
Dilshan Madushanka c Shreyas Iyer b Ravindra Jadedja 5 6 1 0 83.33


Extras 10 (b 5 , lb 1 , nb 0, w 4, pen 0)
Total 55/10 (19.4 Overs, RR: 2.8)
Bowling O M R W Econ
Jasprit Bumrah 5 1 8 1 1.60
Mohammed Siraj 7 2 16 3 2.29
Mohammed Shami 5 1 18 5 3.60
Kuldeep Yadav 2 0 3 0 1.50
Ravindra Jadedja 0.4 0 4 1 10.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<