இலங்கைக்கு எதிராக இந்திய கட்புலனற்றோர் அணிக்கு மற்றொரு வெற்றி

235

இந்திய கட்புலனற்றோர் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியிலும் இலங்கை கட்புலனற்றோர் அணி 34 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது. இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

T20 தொடரின் முதல் போட்டியில் இந்திய கட்புலனற்றோர் அணி வெற்றி

சுற்றுலா இலங்கை கட்புலனற்றோர் …

மும்பையில் இன்று (16) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இந்திய அணிக்கு ஆர். வெங்கடேஷ்வரா மற்றும் எம். தீபக் அதிரடி ஆரம்பம் ஒன்றை பெற்றுக் கொடுத்தனர். அவர்கள் 61 பந்துகளில் 108 ஓட்டங்களை பெற்றனர்.

இதன்போது வெங்கடேஷ்வரா 47 ஓட்டங்களை பெற்றதோடு, தீபக் 62 பந்துகளில் ஆட்டமிழக்காது 106 ஓட்டங்களை பெற்றார். இதற்காக அவர் 17 பௌண்டரிகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

இதனிடையே தீபக் 3 ஆவது விக்கெட்டுக்கு எஸ். ரமேஷுடன் சேர்ந்து பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 107 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். ரமேஷ் 34 பந்துகளில் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் இந்திய கட்புலனற்றோர் அணி 20 ஓவர்களுக்கும் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 236 ஓட்டங்களை எடுத்தது.  

பதிலெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு சவாலான இலக்கை எட்ட சிறப்பான ஆரம்பம் ஒன்று தேவைப்படும் நிலையில் அந்த அணியின் ஆரம்ப வரிசை நெருக்கடியை சந்தித்தது. ஆரம்ப வீரர் பிரியந்த குமார 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் சமன் குமார மற்றும் வசந்த இரண்டாவது விக்கெட்டுக்கு 61 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டபோதும் அணிக்கு பலம் சேர்க்கத் தவறினர்.

இளையோர் உலகக் கிண்ணத்திற்காக தயாராகும் இலங்கை இளம் அணி

சுற்றுலா பங்களாதேஷ்…

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் பறிபோன நிலையில் கே. சில்வா மாத்திரமே மத்திய வரிசையில் சிறப்பான பங்களிப்பைச் செய்தார். அவர் அரைச்சதத்தை கடந்த நிலையில் ரன் அவுட் ஆனது இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பை சிதறிடித்தது. கடைசியில் இலங்கை கட்புலனற்றோர் அணியினரால் 202 ஓட்டங்களையே பெற முடிந்தது.  

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 236/2 (20) – எம். தீபக் 106*, எஸ். ரமேஷ் 66*, சமன் குமார 1/37

இலங்கை – 202/9 (20) – கே. சில்வா 60, ஆர். வசந்த 30, எஸ். ரமேஷ் 2/20  

முடிவு இந்திய கட்புலனற்றோர் அணி 34 ஓட்டங்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க