“எமது திட்டத்தை விடவும் இங்கிலாந்து அணி அதிகமான ஓட்டங்களை குவித்துள்ளது” ; மலிந்த புஷ்பகுமார

633

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சுமார் ஒருவருடத்துக்கு பின்னர் சர்வதேச டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடிய இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமார 89 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

சுழற்பந்து மூலம் இங்கிலாந்துக்கு சவால் விடுத்த இலங்கை

இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி…

இவரது பந்துவீச்சில் முக்கியமாக இங்கிலாந்து அணயின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களான அணித் தலைவர் ஜோ ரூட், ஜோஸ் பட்லர் மற்றும் மொயீன் அலி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இவருடன் இணைந்து ஏனைய சுழற்பந்து வீச்சாளர்களும் இங்கிலாந்து அணிக்கு சவால்களை கொடுத்திருந்த போதும், செம் கரனின் சிறப்பான அரைச்சதத்தின் உதவியுடன் இங்கிலாந்து அணி 285 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த ஆடுகளத்தை பொருத்தவரை முதல் இன்னிங்ஸில் பெறப்பட்ட 285 ஓட்டங்கள் சவாலான ஓட்ட எண்ணிக்கை என ரங்கன ஹேரத்துக்கு பதிலாக அணியில் இணைந்த மலிந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இன்றைய ஆட்டநேர முடிவை தொடர்ந்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாம் இங்கிலாந்து அணியை சுமார் 200 ஓட்டங்கள் அளவில் கட்டுப்படுத்துவதற்கு திட்டமிட்டிருந்தோம். அதன்படி 225 ஓட்டங்களுக்கு நாம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தோம். எனினும் துரதிஷ்டவசமாக இறுதி விக்கெட்டுக்காக 50 இற்கும் மேற்பட்ட ஓட்ட எண்ணிக்கை வழங்கப்பட்து. இறுதியாக பெறப்பட்ட இந்த 50 ஓட்டங்களை எமது துடுப்பாட்ட வீரர்கள் பெறவேண்டியிருக்கும்என்றார்.

ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக டில்ஹார லொகுஹெட்டிகே மீது குற்றச்சாட்டு

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத்….

அதேவேளை காலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் சரி, இன்றைய போட்டியிலும் சரி, இங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழந்த பின்னர், பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் தேவையான ஓட்டங்களை குவித்து வருகின்றனர். இதுதொடர்பில் தெளிவுப்படுத்திய இவர்,

அணியென்ற ரீதியில் நாம் பின்வரிசை வீரர்களுக்கு ஓட்டங்களை வழங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எமது நோக்கம் எதிரணியை மொத்தமாக குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்பதுதான். எனினும் நாம் ஓரிரு பிடியெடுப்புகளை தவறவிட்டதால், இன்றைய தினம் மேலதிக ஓட்டங்களை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது

அதேவேளை துடுப்பாட்டத்தை பொருத்தவரை இலங்கை அணி தங்களது முதல் இன்னிங்ஸில் பெறவேண்டிய ஓட்ட எண்ணிக்கை தொடர்பில் குறிப்பிட்ட மலிந்த புஷ்பகுமார, முதல் இன்னிங்ஸில் நாம் 350 இற்கும் அதிகமான ஓட்டங்களை பெறவேண்டும் என்ற திட்டம் உள்ளது. இவ்வாறான ஓட்ட எண்ணிக்கையை பெறும் திட்டத்துடன் தான் நாம் நாளைய தினம் துடுப்பெடுத்தாடுவோம். முக்கியமாக கடந்த காலங்களில் அணிக்காக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து வருபவர் திமுத் கருணாரத்ன. அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதுஎன்றார்.

அத்துடன், ஒருவருட காலப்பகுதிக்கு பின்னர் சர்வதேச போட்டியில் விளையாடுவது குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார்.

ரங்கன ஹேரத் இலங்கை அணியில் விளையாடும் வரை எனது பங்கு என்ன என்பதை நான் சிந்தித்தேன். குறித்த காலப்பகுதியில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடினேன். சுழற்பந்து பயிற்றுவிப்பாளருடன் இணைந்து பந்து வீச்சினை பலப்படுத்திக்கொண்டேன்.

இறுதியாக இந்திய அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடந்த வருடம் விளையாடியிருந்தேன். அந்த போட்டியின் போது எனக்கு சர்வதேச அனுபவம் இருக்கவில்லை. குறித்த விடயத்திலும் பயிற்றுவிப்பாளருடன் இணைந்து அவதானம் செலுத்தினேன். தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளதுஎன்றார்.

இலங்கைஇங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 285 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இலங்கை அணி  ஆட்டநேர முடிவில் 26 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. இதன்படி இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை எட்டுவதற்கு இலங்கை அணிக்கு இன்னும் 259 ஓட்டங்கள் தேவைப்படுகின்றது.