Home Tamil முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை இளையோர் அணி வெற்றி

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை இளையோர் அணி வெற்றி

Sri Lanka U19 tour of England 2024

68

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து 19 வயதின் கீழ்ப்பட்டோர் அணிகள் இடையிலான முதல் இளையோர் ஒருநாள் போட்டியில், இலங்கை 65 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை இளம் கிரிக்கெட் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் தற்போது பங்கேற்று வருகின்றது.

அதன்படி இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று செல்ம்ஸ்போர்டில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து இளம் வீரர்கள் இலங்கையினை துடுப்பாடப் பணித்தனர். அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை வீரர்கள் 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 294 ஓட்டங்கள் எடுத்தனர்.

இலங்கைத் தரப்பில் மூன்று வீரர்கள் அரைச்சதம் தாண்டியதோடு அதில் மாஹித் பெரேரா 58 ஓட்டங்களையும், சாரூஜன் சண்முகநாதன் 57 ஓட்டங்களையும் தினிரு அபேய்விக்ரமசிங்க 52 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர். இங்கிலாந்து இளையோர் பந்துவீச்சில் நோவா கோர்ன்வெல் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 295 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து இளம் அணியானது 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 229 ஓட்டங்களுடன் தோல்வியினைத் தழுவியது.

இங்கிலாந்து துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக நோவாஹ் தெய்ன் 58 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அதேநேரம் அணித்தலைவரும் 51 ஓட்டங்களோடு போராட்டத்தினை வெளிப்படுத்தினார்.

மறுமுனையில் இலங்கை இளம் அணிப்பந்துவீச்சு சார்பில் விஹாஸ் தேவ்மிக்க 03 விக்கெட்டுக்களைச் சாய்க்க ஹிவின் கெவுல, திசார ஏக்கநாயக்க மற்றும் ப்ரவீன் மனீஷா ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.

இப்போட்டியின் வெற்றியோடு இலங்கைத் தரப்பானது மூன்று போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்

Result


England U19
229/10 (43.3)

Sri Lanka U19
294/6 (50)

Batsmen R B 4s 6s SR
Pulindu Perera c Noah Thain b Noah Cornwell 19 25 1 1 76.00
Thisara Ekanayake c Harry Moore b Noah Cornwell 13 14 1 0 92.86
Gayana Weerasinghe c Keshana Fonseka b Noah Thain 20 31 3 0 64.52
Sharujan Shanmuganathan c Farhan Ahmed b Noah Cornwell 57 75 7 0 76.00
Dinura Kalupahana lbw b Luc Benkenstein 49 59 4 1 83.05
Mahith Perera not out 58 60 4 0 96.67
Diniru Abeywickramasinghe b Noah Cornwell 52 37 2 0 140.54
Hivin Kenula not out 0 1 0 0 0.00


Extras 26 (b 0 , lb 11 , nb 2, w 13, pen 0)
Total 294/6 (50 Overs, RR: 5.88)
Bowling O M R W Econ
Noah Cornwell 9 0 54 3 6.00
Harry Moore 10 0 66 0 6.60
Farhan Ahmed 10 0 38 1 3.80
Noah Thain 7 0 39 1 5.57
Tazeem Chaudry Ali 7 0 37 0 5.29
Freddie McCann 3 0 23 0 7.67
Luc Benkenstein 4 0 26 1 6.50


Batsmen R B 4s 6s SR
Keshana Fonseka c Mahith Perera b Thisara Ekanayake 25 27 5 0 92.59
Freddie McCann b Vihas Thewmika 10 16 2 0 62.50
Noah Thain b Praveen Maneesha 58 69 7 0 84.06
Charlie Allison c Hivin Kenula b Thisara Ekanayake 8 20 0 0 40.00
Luc Benkenstein c Mahith Perera b Hivin Kenula 51 50 4 2 102.00
Rocky Flintoff c Gayana Weerasinghe b Hivin Kenula 22 25 3 0 88.00
Haydon Mustard b Praveen Maneesha 5 10 0 0 50.00
Harry Moore c Praveen Maneesha b Vihas Thewmika 26 28 2 0 92.86
Farhan Ahmed c & b Vihas Thewmika 1 2 0 0 50.00
Tazeem Chaudry Ali not out 13 12 0 1 108.33
Noah Cornwell b Dinura Kalupahana 0 2 0 0 0.00


Extras 10 (b 0 , lb 5 , nb 0, w 5, pen 0)
Total 229/10 (43.3 Overs, RR: 5.26)
Bowling O M R W Econ
Dumindu Sewmina 5 0 29 0 5.80
Hivin Kenula 6 0 28 2 4.67
Thisara Ekanayake 10 1 48 2 4.80
Vihas Thewmika 9 0 37 3 4.11
Dinura Kalupahana 4.3 0 24 1 5.58
Gayana Weerasinghe 1 0 8 0 8.00
Praveen Maneesha 8 0 50 2 6.25