இலங்கை அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க உலகளாவிய ரீதியில் உள்ள சிறுவர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு கிரிக்கெட் வீரர் என பங்களாதேஷ் அணியின் தலைவர் தமிம் இக்பால் கருத்து தெரிவித்துள்ளார்.
“வெற்றியுடன் மாலிங்கவுக்கு பிரியாவிடை வழங்க வேண்டும்” – திமுத்
இலங்கை அணியின் நட்சத்திர வேகப் …..
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (26) கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (25) இடம்பெற்ற போதே தமிம் இக்பால் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியுடன், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து மாலிங்க ஓய்வுபெறவுள்ளார். இந்தநிலையில், மாலிங்க தொடர்பில் குறிப்பிட்ட தமிம் இக்பால், மாலிங்க இலங்கைக்கு மாத்திரமின்றி சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஒரு சிறந்த அடையாளம் என்பதனை தெரிவித்தார்.
“மாலிங்க என்ற ஒரு கிரிக்கெட் வீரர், உலகளாவிய ரீதியில் உள்ள சிறுவர்களுக்கு கிரிக்கெட் மீதான ஈர்ப்பினை அதிகரித்துள்ளார் என்பதுடன், அவரை பார்த்து சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடவும் ஆரம்பித்திருக்கின்றனர். அப்படிப்பட்ட சிறந்த வீரர் மாலிங்க. அவர் இலங்கை கிரிக்கெட்டுக்கு மாத்திரமின்றி சர்வதேச கிரிக்கெட்டுக்கும் ஒரு சிறந்த தூதர்”
அதுமாத்திரமின்றி மாலிங்கவின் பந்துவீச்சு பாணியை பார்த்து பங்களாதேஷில் உள்ள மக்களும், அதேபோன்ற பாணியில் பந்துவீசுவதற்கு முயற்சித்ததையும் காண முடிந்ததாக தமிம் இக்பால் சுட்டிக்காட்டினார்.
“மாலிங்கவை பார்த்து பங்களாதேஷ் மக்களும் பந்துவீசுவற்கு முனைந்திருந்தமையை கடந்த காலங்களில் பார்க்க முடிந்தது. குறிப்பாக நாம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால், மாலிங்கவை போன்ற பாணியில் பந்துவீசும் ஒருவரை அழைத்து பயிற்சியில் ஈடுபடுவோம். அத்தகைய அழுத்தம் மாலிங்கவின் பந்துவீச்சில் இருக்கிறது”
எவ்வாறாயினும் இன்றைய போட்டியானது மாலிங்கவுக்கு இறுதி ஒருநாள் போட்டி என்றாலும், அதனை மனதில் வைத்துக்கொள்ளாமல், பங்களாதேஷ் அணி போட்டியில் தங்களுடைய முழுமையான திறனை வெளிப்படுத்தி போட்டியில் வெற்றிபெறவதற்கு முயற்சிக்கும் என்பதை தமிம் இக்பால் குறிப்பிட்டிருந்தார்.
பிரியாவிடை போட்டியொன்றை தர மறுத்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தேன் – மாலிங்க
உபாதை காரணமாக இலங்கை அணியில் …….
“மாலிங்கவுக்கு இந்தப் போட்டி விஷேடமானது. ஆனால், நாம் அதனை மனதில் வைத்துக்கொள்ள மாட்டோம். நாம் எமது திறமையை வெளிப்படுத்தி பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கு ஒரு வெற்றியை பெற்றுக்கொடுக்கவே எண்ணியுள்ளோம். அதேநேரம், மாலிங்கவின் சாதனைகள் இலங்கை கிரிக்கெட்டுக்கு மாத்திரமின்றி சர்வதேச கிரிக்கெட்டிலும் தனிச்சிறப்பு வாய்ந்தன” என தமிம் தெரிவித்தார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<