இலங்கை – பங்களாதேஷ் முதல் ஒருநாள் போட்டி சந்தேகம்

299

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று  (23) நடைபெறுவதில் சந்தேகம் உருவாகியிருக்கின்றது.

பங்களாதேஷில் உடற்தகுதியை நிரூபிக்க தவறிய இலங்கை வீரர்கள்

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அங்கே ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கிற்காக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது.

இந்த  ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அணி சார்பிலான மூன்று பேருக்கு கொவிட்-19 வைரஸ் ஏற்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு கொவிட்-19 வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் அச்சம் காரணமாகவே இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி இன்று நடைபெறுவதில் சந்தேகம் உருவாகியிருக்கின்றது.

அதேநேரம், கொவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களாக இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளர் சமிந்த வாஸ், இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான இசுரு உதான மற்றும் ஷிரான் பெர்னாந்து ஆகியோர் இனம் காணப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தை நிராகரித்த வீரர்கள்

எனினும், இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான போட்டி ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…