பிரிஸ்டோல் – கௌண்டி மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணத் தொடரின் 16வது லீக் போட்டி மழை காலநிலை காரணமாக நாணய சுழற்சியின்றி கைவிடப்பட்டது.
பாகிஸ்தானிடம் பெற்ற தோல்விகளுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?
நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11வது லீக் போட்டி நாளைய..
இந்த மைதானத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காலநிலை காரணமாக கைவிடப்பட்டிருந்த நிலையில், இன்றைய போட்டியும் கைவிடப்பட்டுள்ளமை இரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு போட்டி கைவிடப்பட்டுள்ள நிலையில் இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் பகிரப்பட்டுள்ளன. இதன்படி புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி 4 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், பங்களாதேஷ் அணி 3 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் இதுவரை 16 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் 3 போட்டிகள் மழை காலநிலை காரணமாக முடிவற்ற போட்டிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. முதலில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டது. பின்னர், நேற்றைய தினம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி மழையின் காரணமாக முடிவற்ற போட்டியாக நிறைவுபெற்றது. தற்போது இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டுள்ளது.
நாடு திரும்புகிறார் லசித் மாலிங்க
இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இன்று (11)..
இதன் அடிப்படையில் உலகக் கிண்ணத் தொடரொன்றில் அதிக முடிவற்ற போட்டிகள் இடம்பெற்றுள்ள முதல் சந்தர்ப்பமாக 2019ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர் அமைந்துள்ளது. அத்துடன் நாணய சுழற்சி இன்றி அதிக போட்டிகள் (02) கைவிடப்பட்ட சந்தர்ப்பமாகவும் இந்த உலகக் கிண்ண தொடர் அமைந்துள்ளது.
இதற்கு முன்னர் நடைபெற்ற 11 உலகக் கிண்ணத் தொடர்களில் 2 போட்டிகள் மாத்திரமே நாணய சுழற்சியின்றி கைவிடப்பட்டிருந்த நிலையில், இந்த உலகக் கிண்ணத்தில் இதுவரையில் மாத்திரம் இரண்டு போட்டிகள் நாணய சுழற்சியின்றி கைவிடப்பட்டுள்ளன. அதன்படி, அதிக போட்டிகள் நாணய சுழற்சியின்றி கைவிடப்பட்ட உலகக் கிண்ணமாக இந்த உலகக் கிண்ணம் பதிவாகியுள்ளது.
மேலும், இதற்கு முன்னர் நடைபெற்ற உலகக் கிண்ணங்களில் 1979ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நாணய சுழற்சியின்றி கைவிடப்பட்டிருந்ததுடன், 2015ம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாணய சுழற்சி இன்றி கைவிடப்பட்டிருந்தது.
Photo Album – Sri Lanka vs Bangladesh | ICC Cricket World Cup 2019 – Match 16
இதேவேளை, ஒட்டுமொத்த உலகக் கிண்ணங்களை பொருத்தவரை அதிக கைவிடப்பட்ட போட்டிகளை சந்தித்த அணியாக இலங்கை அணி பதிவாகியுள்ளது. இவ்வருடத்தில் இரண்டு கைவிடப்பட்ட போட்டிகளை சந்தித்த இலங்கை அணி, 1979ம் ஆண்டு ஒரு போட்டியை சந்தித்திருந்தது.
அதேநேரம், இம்முறை 2 கைவிடப்பட்ட போட்டிகளுக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை அணி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைப்பதில் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. குறிப்பாக இனிவரும் போட்டிகளில் பலமான அணிகளை எதிர்கொள்ளவுள்ள இலங்கை அணி, தங்களுடைய அடுத்த போட்டியில் அவுஸ்திரேலிய அணியை எதிர்வரும் 15ம் திகதி சந்திக்கவுள்ளதுடன், பங்களாதேஷ் அணி எதிர்வரும் 17ம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<