அதிரடி வெற்றியுடன் முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை

1974
@AFP

டாக்கா மிர்பூரில் நடைபெற்று முடிந்திருக்கும் (பங்களாதேஷ், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பங்குபெறும்) முக்கோண ஒரு நாள் தொடரின் ஆறாவது போட்டியில்,  பங்களாதேஷ் அணியினை அதிசிறந்த பந்துவீச்சினால் இலங்கை 10 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருப்பதுடன், தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினையும் உறுதி செய்தது.

[rev_slider LOLC]

முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபி மொர்தஸா முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.

முக்கோண ஒரு நாள் தொடரிலிருந்து வெளியேறும் குசல் பெரேரா

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அதிரடி…

இந்த முக்கோண ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை வீரர்கள் பங்களாதேஷுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் தமக்கு சாதகமான முடிவு ஒன்றினை எதிர்பார்த்த வண்ணம் களமிறங்கியிருந்தனர்.

ஜிம்பாப்வே அணியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற இந்த முக்கோணத்தொடரின் நான்காவது போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்த வீரர்களில் ஒருவரான குசல் பெரேராவுக்கு காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. இவரின் இடத்தினை இலங்கை அணியில் தனுஷ்க குணத்திலக்க பிரதியீடு செய்ய, வேகப்பந்து வீச்சாளரான நுவான் ப்ரதீப்புக்குப் பதிலாக துஷ்மந்த சமீரவுக்கு இன்றைய நாளில் வாய்ப்பு தரப்பட்டிருந்தது.

தொடரின் இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே தெரிவாகியிருந்த பங்களாதேஷ் அணி, எந்தவித அழுத்தங்களுமின்றி தமது துடுப்பாட்டத்தினை தொடங்கியிருந்தது.

பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான தமிம் இக்பால் மற்றும் அனாமுல் ஹக் ஆகியோர் சுரங்க லக்மாலின் அதிரடிப்பந்து வீச்சினால் பத்து ஓட்டங்களையேனும் தாண்டாது ஓய்வறை நடந்தனர். மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரராக வந்த சகீப் அல் ஹஸனையும் தனுஷ்க குணத்திலக்க தன்னுடைய அபாரமான களத்தடுப்பினால் 8 ஓட்டங்களுடன் ரன் அவுட் செய்தார். இதனால், ஆரம்பத்திலேயே 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்து பங்களாதேஷ் அணி தடுமாறியிருந்தது.

இப்படியான நிலையில் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான முஷ்பிகுர் ரஹீம் மஹமதுல்லாவுடன் இணைந்து அணியை மீட்க முயற்சி செய்திருந்தார். எனினும், சுரங்க லக்மால் மீண்டும் சிறப்பாக செயற்பட்ட காரணத்தினால் அம்முயற்சி வீணானது. இதனால் பங்களாதேஷ் அணியின் நான்காம் விக்கெட்டாக மஹமதுல்லா 7 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

போயகொடவின் உலக சாதனை மூலம் இலங்கை இளையோர் அணி அபார வெற்றி

ஹசித்த போயகொட 191 ஓட்டங்களை விளாசி பெற்ற..

இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு தொடர்ந்தும் தடுமாறிய பங்களாதேஷ் தமது அடுத்தடுத்த விக்கெட்டுக்களை குறுகிய ஓட்ட இடைவெளிக்குள் பறிகொடுத்தது. பங்களாதேஷின் இறுதி நம்பிக்கையான முஸ்பிகுர் ரஹீம் களத்தில் காணப்பட்ட போதிலும் அவரினையும் 26 ஓட்டங்களுடன் இலங்கை அணியின் துஷ்மந்த சமீர மைதானத்தினை விட்டு வெளியேற்றினார். ரஹீமே பங்களாதேஷ் அணி சார்பாக அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக  காணப்பட்டிருந்தார்.

முடிவில் 24 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த பங்களாதேஷ் அணி 82 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றது. பங்களாதேஷ் அணிக்கு இது ஒரு நாள் போட்டிகளில் பெறப்பட்ட எட்டாவது அதிகுறைவான ஓட்டங்களாக பதிவாகியிருந்தது.

இன்றைய நாளில் முன்னேற்றகரமான முறையில் செயற்பட்ட இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் சுரங்க லக்மால் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர, திசர பெரேரா மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

இதனைத் அடுத்து மிகவும் சவால் குறைந்த வெற்றி இலக்கான 83 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு இலங்கை அணி துடுப்பாடியது.

உள்ளூர் வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட்டின் நற்செய்தி

2017 மற்றும் 2018 பருவகாலத்துக்கான வருடாந்த..

ஆரம்ப தவீரர்களான தனுஷ்க குணத்திலக்க, உபுல் தரங்க ஆகியோர் அதிரடி ஆட்டத்தினை வெளிக்காட்ட 11.3 ஓவர்களில் எந்தவொரு விக்கெட்டினையும் பறிகொடுக்காமல் இலங்கை அணி வெற்றி இலக்கினை அடைந்தது. இதில் ஆட்டமிழக்காது இருந்த தரங்க 39 ஓட்டங்களினையும், குணத்திலக்க 35 ஓட்டங்களினையும் குவித்து தமது தரப்பின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்தனர்.

இப்போட்டியின் முடிவு மூலம் இலங்கை அணி பங்களாதேஷுக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் அதிக பந்துகள் (231) மீதமிருக்க பெற்றுக் கொண்ட வெற்றியினை பதிவு செய்திருக்கின்றது.

போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை சுரங்க லக்மால் பெற்றுக் கொண்டார்.

இந்த முக்கோண ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டிக்கு தற்போது தெரிவாகியிருக்கும் இலங்கை அணி அதில் வரும் சனிக்கிழமை (27) பங்களாதேஷ் அணியுடன் மோதுகின்றது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் – 82 (24) முஷ்பிகுர் ரஹீம் 26(56), சுரங்க லக்மால் 3/21(7), துஷ்மந்த சமீர 6/2(5), லக்ஷான் சந்தகன் 2/24(6), லக்ஷான் சந்தகன் 27/2(6)

இலங்கை – 83/0 (11.3) உபுல் தரங்க 39(37)*,  தனுஷ்க குணத்திலக்க 35(35)*

முடிவு இலங்கை 10 விக்கெட்டுக்களால் வெற்றி