Home Tamil வெற்றியுடன் மாலிங்கவிற்கு பிரியாவிடை கொடுத்த இலங்கை
Sri Lanka vs Bangladesh

வெற்றியுடன் மாலிங்கவிற்கு பிரியாவிடை கொடுத்த இலங்கை

994

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியினை 91 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி, இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது.

பிரியாவிடை போட்டியொன்றை தர மறுத்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தேன் – மாலிங்க

உபாதை காரணமாக இலங்கை அணியில் இருந்து புறக்கணிப்பட்டதால் பிரியாவிடை..

அந்தவகையில் இந்த ஒருநாள் தொடரின் முதல் அங்கமாக நடைபெறும் இந்தப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (26) ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற, இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். 

இலங்கையின் வேகப்பந்து நாயகன் லசித் மாலிங்கவினுடைய கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியாக அமையும் இப்போட்டியில் இலங்கை அணி லஹிரு குமாரவிற்கு வாய்ப்பு வழங்கியிருந்தது. அத்தோடு, திசர பெரேராவும் இணைக்கப்பட்டிருந்தார். 

இலங்கை அணி – திமுத் கருணாரத்ன (தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாந்து, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், லஹிரு திரிமான்ன, தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, லஹிரு குமார, நுவன் பிரதீப், லசித் மாலிங்க 

இதேநேரம் காயமுற்ற மஷ்ரபி மொர்தஸாவிற்கு பதிலாக தமிம் இக்பால் மூலம் வழிநடாத்தப்படும் பங்களாதேஷ் அணி, 2016ஆம் ஆண்டின் பின்னர் வேகப்பந்துவீச்சாளர் சபியுல் இஸ்லாமிற்கு இப்போட்டியின் மூலம் முதல் தடவையாக ஒருநாள் போட்டி ஒன்றில் வாய்ப்பு வழங்கியிருந்தது. 

பங்களாதேஷ் அணி – தமிம் இக்பால் (தலைவர்), சௌம்யா சர்க்கார், மொஹமட் மிதுன், முஷ்பிகுர் ரஹீம், மஹ்மதுல்லாஹ், மொஸாதிக் ஹொஸைன், சப்பீர் ரஹ்மான், மெஹிதி ஹஸன், ருபெல் ஹொசைன், சபியுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான்

இதன் பின்னர் அவிஷ்க பெர்னாந்து மற்றும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன ஆகியோருடன் இலங்கை அணி தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. எனினும், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அவிஷ்க பெர்னாந்து வெறும் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார். 

இதன் பின்னர், இலங்கை அணியின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன இரண்டாம் விக்கெட்டுக்காக 97 ஓட்டங்களை குசல் பெரேராவுடன் இணைந்து பகிர்ந்து தனது தரப்பினை வலுவூட்டினார். தொடர்ந்து இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஓய்வறை நடந்த திமுத் கருணாரத்ன, 36 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

“உலகளாவிய ரீதியில் உள்ள சிறுவர்களை ஈர்த்தவர் மாலிங்க” – தமிம்

இலங்கை அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க உலகளாவிய..

திமுத் கருணாரத்னவினை தொடர்ந்து இலங்கை அணிக்கு குசல் பெரேரா ஒருநாள் போட்டிகளில் பெற்றுக் கொண்ட, 5ஆவது சதத்துடன் வலுச்சேர்த்தார். இதேநேரம், குசல் மெண்டிஸூம் இலங்கை அணியின் ஓட்டங்களை உயர்த்த பங்களிப்பு வழங்கினார். 

தொடர்ந்து இலங்கை அணியின் 4ஆம் விக்கெட்டாக ஆட்டமிழந்த குசல் பெரேரா, அதிரடியான துடுப்பாட்டத்தோடு 99 பந்துகளில் 17 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 111 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேவேளை குசல் மெண்டிஸ் 43 ஓட்டங்களை பெற்றிருந்தார். 

இவர்கள் இருவரினையும் அடுத்து அஞ்செலோ மெதிவ்ஸின் பொறுப்பான ஆட்டத்துடன் இலங்கை அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பாக அஞ்செலோ மெதிவ்ஸ் 52 பந்துகளில் 3 பௌண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்கள் குவித்திருந்தார். அதேநேரம், லஹிரு திரிமான்னவும் 25 ஓட்டங்களுடன் இலங்கை அணிக்கு பங்களிப்பினை வழங்கியிருந்தார். 

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் சயிபுல் இஸ்லாம் 62 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், முஸ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 315 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பங்களாதேஷ் அணி, பதிலுக்கு துடுப்பாடியது. 

பங்களாதேஷ் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அதன் தலைவர் தமிம் இக்பால் லசித் மாலிங்கவின் அட்டகாசமான பந்துவீச்சில் ஓட்டமேதுமின்றி போல்ட் செய்யப்பட்டார். இதன் பின்னர், புதிய துடுப்பாட்ட வீரராக களம் வந்த மொஹமட் மிதுன் வெறும் 10 ஓட்டங்களை மட்டும் பெற்று ஆட்டமிழந்தார். 

Photos: Sri Lanka Vs. Bangladesh | 1st ODI

அதனை அடுத்து பங்களாதேஷ் அணியின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சௌம்யா சர்க்கார் மற்றும் மஹ்மதுல்லா ஆகியோரும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். சௌம்யா சர்க்கர் 15 ஓட்டங்களை மட்டும் பெற்றிருக்க, மஹமதுல்லா 3 ஓட்டங்களையே எடுத்திருந்தார். இதனால், பங்களாதேஷ் அணி ஒரு கட்டத்தில் 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 

எனினும், பங்களாதேஷ் அணிக்காக மத்திய வரிசையில் களம் வந்த சப்பீர் ரஹ்மான் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் போராட்டத்தினை காண்பித்திருந்தனர். அதன்படி, இரண்டு வீரர்களினாலும் பங்களாதேஷ் அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக 111 ஓட்டங்கள் பகிரப்பட்டது. 

தொடர்ந்து பங்களாதேஷ் அணியின் ஐந்தாம் விக்கெட்டாக சப்பீர் ரஹ்மான் அவரது 5ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு, 56 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 

சப்பீர் ரஹ்மானின் விக்கெட்டை அடுத்து தடுமாறத் தொடங்கிய  பங்களாதேஷ் அணி, சிறிது நேரத்தில் முஷ்பிகுர் ரஹிமின் விக்கெட்டையும் பறிகொடுத்தது. இதன் பின்னர், பங்களாதேஷ் அணிக்காக ஜொலிக்க வீரர்கள் யாரும் இல்லாத நிலையில் அவ்வணி 41.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 223 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது. 

வோர்னர், ஸ்மித், பென்குரொப்ட் மீண்டும் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியில்

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெறும் ஆஷஷ்..

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் முஷ்பிகுர் ரஹீம் அவரின் 35ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு, 86 பந்துகளில் 6 பௌண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம், இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக லசித் மாலிங்க மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர். அதேநேரம், தனன்ஞய டி சில்வா 2 விக்கெட்டுக்களை சுருட்டி இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியுடன் மாலிங்க 338 விக்கெட்டுக்களை கைப்பற்றியவாறு தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்திருந்தார். 

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேரா தெரிவு செய்யப்பட்டார். இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

அதேநேரம், இந்த ஒருநாள் தொடரின் அடுத்த போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (31) முதல் ஒருநாள் போட்டி நடைபெற்ற, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka
314/8 (50)

Bangladesh
223/10 (41.4)

Batsmen R B 4s 6s SR
Avishka Fernando c Soumya Sarkar b Shaiful Islam 7 13 0 0 53.85
Dimuth Karunaratne c Mustafizur Rahman b Mehidy Hasan Miraz 36 37 4 0 97.30
Kusal Perera c Mustafizur Rahman b Soumya Sarkar 111 99 17 1 112.12
Kusal Mendis c Mushfiqur Rahim b Rubel Hossain 43 49 4 0 87.76
Angelo Mathews c Sabbir Rahaman b Mustafizur Rahman 48 52 3 0 92.31
Lahiru Thirimanne c Soumya Sarkar b Mustafizur Rahman 25 30 1 0 83.33
Thisara Perera c Soumya Sarkar b Shaiful Islam 2 3 0 0 66.67
Dhananjaya de Silva c Sabbir Rahaman b Shaiful Islam 18 12 3 0 150.00
Lasith Malinga not out 6 6 0 0 100.00
Nuwan Pradeep not out 0 0 0 0 0.00


Extras 18 (b 0 , lb 1 , nb 1, w 16, pen 0)
Total 314/8 (50 Overs, RR: 6.28)
Fall of Wickets 1-10 (2.5) Avishka Fernando, 2-107 (14.6) Dimuth Karunaratne, 3-207 (32.4) Kusal Perera, 4-212 (33.6) Kusal Mendis, 5-272 (44.3) Lahiru Thirimanne, 6-276 (45.2) Thisara Perera, 7-302 (48.3) Angelo Mathews, 8-309 (49.2) Dhananjaya de Silva,

Bowling O M R W Econ
Shaiful Islam 9 0 62 3 6.89
Mehidy Hasan Miraz 9 0 56 1 6.22
Rubel Hossain 9 0 54 1 6.00
Mosaddek Hossain 7 0 45 0 6.43
Mustafizur Rahman 10 0 75 2 7.50
Soumya Sarkar 5 0 17 1 3.40
Mahmudullah 1 0 4 0 4.00


Batsmen R B 4s 6s SR
Tamim Iqbal b Lasith Malinga 0 5 0 0 0.00
Soumya Sarkar b Lasith Malinga 15 22 1 0 68.18
Mohammad Mithun lbw b Nuwan Pradeep 10 21 1 0 47.62
Mushfiqur Rahim c Kusal Mendis b Nuwan Pradeep 67 86 5 0 77.91
Mahmudullah c Nuwan Thushara b Lahiru Kumara 3 10 0 0 30.00
Sabbir Rahaman c Avishka Fernando b Dhananjaya de Silva 60 56 7 0 107.14
Mosaddek Hossain run out (Kusal Mendis) 12 16 1 0 75.00
Mehidy Hasan Miraz c Kusal Mendis b Dhananjaya de Silva 2 5 0 0 40.00
Shaiful Islam b Nuwan Pradeep 2 9 0 0 22.22
Rubel Hossain not out 6 6 1 0 100.00
Mustafizur Rahman c Thisara Perera b Lasith Malinga 18 14 3 0 128.57


Extras 28 (b 0 , lb 4 , nb 0, w 24, pen 0)
Total 223/10 (41.4 Overs, RR: 5.35)
Fall of Wickets 1-0 (0.5) Tamim Iqbal, 2-30 (7.3) Mohammad Mithun, 3-30 (8.3) Soumya Sarkar, 4-39 (11.5) Mahmudullah, 5-150 (28.2) Sabbir Rahaman, 6-182 (33.2) Mosaddek Hossain, 7-187 (34.6) Mehidy Hasan Miraz, 8-199 (38.1) Mushfiqur Rahim, 9-200 (38.3) Shaiful Islam, 10-223 (41.4) Mustafizur Rahman,

Bowling O M R W Econ
Lasith Malinga 9.4 2 38 3 4.04
Nuwan Pradeep 9 1 51 3 5.67
Thisara Perera 6 0 36 0 6.00
Lahiru Kumara 7 0 45 1 6.43
Dhananjaya de Silva 10 0 49 2 4.90



முடிவு – இலங்கை அணி 91 ஓட்டங்களால் வெற்றி