கதிகலங்கிப்போன அவுஸ்திரேலியா, வெற்றிப்பாதையில் இலங்கை

322
SL vs Aus Day 2

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் மோதும் வோர்ன் – முரளிக் கிண்னத்தின் 2ஆவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியது.

ஏற்கனவே பல்லேகலேயில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால் இந்த போட்டியை கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் அவுஸ்திரேலிய அணி களமிறங்கியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.

இதன் படி தமது இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 73.1 ஓவர்களில் 281 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 86 ஓட்டங்களைப் பெற மெதிவ்ஸ் 54 ஓட்டங்களையும், குசல் பெரேரா 49 ஓட்டங்களையும் மற்றும் தனன்ஜய டி சில்வா 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய அணியின் மிச்சல் ஸ்டார்க் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரைத் தவிர நேதன் லயன் 78 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

பின்னர் அவுஸ்திரேலிய அணி தமது முதல் இனிங்ஸைத் தொடர்ந்தது. அவர்களின் இனிங்ஸின் 2ஆவது பந்து வீச்சில் ஜோ பர்ன்ஸ் அறிமுக வீரர் விஷ்வ பெர்னாண்டோவின் பந்து வீச்சில் ஓட்டம் ஏதும் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

ஆனால் அதன் பின் அவுஸ்திரேலிய அணி நிதான ஆட்டத்தைக் கடைபிடிக்க இறுதியில் டேவிட் வோர்னர் அதிரடியாக ஆடி 42 ஓட்டங்களோடு ஆட்டம் இழக்க அவுஸ்திரேலிய அணி 2 விக்கட்டுகள் இழப்பிற்கு 54 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 1ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

பின்னர் இன்று 2ஆம் நாளில் அவுஸ்திரேலிய அணி தமது இனிங்ஸைத் தொடர்ந்தது.

உஸ்மான் கவாஜாவுடன் ஸ்டீவ்  ஸ்மித் ஜோடி சேர்ந்தார். கவாஜா ஆட்டம் ஆரம்பித்து  சிறிது நேரத்தில் நேற்று எடுத்திருந்த 11 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஸ்மித் 5 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரங்கன ஹேரத்தின் பந்தில் க்ளீன் போல்டானார்.

அதன்பின் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சில் அவுஸ்திரேலிய  விக்கட்டுகள் மளமளவென சரிந்தது. ரங்கன ஹேரத், 25-வது ஓவரின் 4-வது பந்தில் வோகஸ், 5-வது பந்தில் நெவில், 6-வது பந்தில் ஸ்டார்க் ஆகியோரை வெளியேற்றி ஹெட்ரிக் சாதனை படைத்தார்.

இந்த ஹெட்ரிக்  இலங்கை டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் பெறப்பட்ட 2ஆவது ஹெட்ரிக் ஆகும். இதற்கு முன் வேகப் பந்து வீச்சாளர் நுவன் சொயிஸா இந்த சாதனைக்குப் பெயர் பெற்றிருந்தார்.

ரங்கன ஹேரத் இவ்வாறு அவுஸ்திரேலிய விக்கட்டுகளை பதம் பார்க்க மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் டில்ருவான் பெரேரா ஹேரத்திற்கு உறுதுணையாக நிற்க அவுஸ்திரேலிய  அணி தமது முதல் இனிங்ஸில்106 ஓட்டங்களில்  சுருண்டு சகல விக்கட்டுகளையும் இழந்தது. ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா தலா 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்கள்.

அவுஸ்திரேலிய அணி சார்பாக டேவிட் வோர்னர் 42 ஓட்டங்களையும் மிச்சல் மார்ஷ் 25 ஓட்டங்களையும் உஸ்மான்  கவாஜா 11 ஓட்டங்களையும் பெற மற்ற அனைவரும் 10ற்கும் குறைவான ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தனர்.

பின்னர் 175 ஓட்டங்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2வது இனிங்ஸைத் தொடங்கியது.  இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ஜோடி மீண்டும் பெரும் ஏமாற்றம் அளித்து சொற்ப ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தனர்.

பின்னர் குறிப்பிட்ட இடைவேளைகளில் இலங்கை அணி விக்கட்டுகளை இழந்தாலும் இறுதியில் வந்த பந்து வீச்சளர்கள் ஓட்டங்களை பெறுவதற்கு கைகொடுக்க இலங்கை அணி தமது 2ஆவது இனிங்ஸில் 237 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக டில்ருவான் பெரேரா 64 ஓட்டங்களையும், எஞ்சலோ மெதிவ்ஸ் 47 ஓட்டங்களையும், குசல் பெரேரா 35 ஓட்டங்களையும் , தனன்ஜய டி சில்வா 34 ஓட்டங்களையும் ரங்கன ஹேரத் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய அணியின் ஸ்டார்க் 6 விக்கட்டுகளை வீழ்த்தி போட்டியில் மொத்தமாக 11 விக்கட்டுகளைக் கைப்பற்றினர். இவரோடு நேதன் லியன் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பின் அவுஸ்திரேலிய அணிக்கு 413 என்ற பாரிய வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதனை நோக்கி ஆட வந்த அவுஸ்திரேலிய அணி வந்த முதல் ஓவரிலேயே விக்கட் ஒன்றை இழந்து தடுமாறியது. மொத்தமாக 2ஆம் நாள் முடிவுக்கு வரும் போது அவுஸ்திரேலிய அணி 6 ஓவர்களை சந்தித்து 3 விக்கட் இழப்பிற்கு 25 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. டில்ருவான் பெரேரா 2 விக்கட்டுகளையும் ரங்கன ஹேரத் 1 விக்கட்டையும் கைப்பற்றி அவுஸ்திரேலிய அணியை கதி கலங்கச் செய்துள்ளனர். ஆடுகளத்தில் டேவிட் வோர்னர் 22 ஓட்டங்களோடும் ஸ்டீவ் ஸ்மித் 1 ஓட்டத்தோடும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இந்த போட்டியின் 3ஆவது நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 7 விக்கட்டுகளைக் கைப்பற்ற வேண்டிய நிலையில் உள்ளதோடு அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற மேலும் 388 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை  – 281/10

குசல் மெண்டிஸ் 86, எஞ்சலோ மெதிவ்ஸ் 54, குசல் பெரேரா 49, தனன்ஜய  டி சில்வா 37

மிச்சல் ஸ்டார்க் 44/5, நேதன் லயன் 78/2

அவுஸ்திரேலியா – 106

டேவிட் வோர்னர் 42, மிச்சல் மார்ஷ் 25, உஸ்மான் கவாஜா 11

ரங்கன ஹேரத் 35/4, டில்ருவான் பெரேரா 29/4

இலங்கை – 237/10

டில்ருவான் பெரேரா 64, எஞ்சலோ மெதிவ்ஸ் 47, குசல் பெரேரா 35, தனன்ஜய  டி சில்வா 34

மிச்சல் ஸ்டார்க் 50/6, நேதன் லயன் 80/2

அவுஸ்ரேலியா – 25/3

டேவிட் வோர்னர் 22*, ஸ்டீவ் ஸ்மித் 01*

ரங்கன ஹேரத் 16/1, டில்ருவான் பெரேரா 9/2

Full Scorecard

Batsmen Dismissal Runs Balls
Dimuth Karunarathne  c Burns b Starc 0 1
Kaushal Silva  c Nevill b Starc 5 16
Kusal Janith Perera c Smith b Lyon 49 82
Kusal Mendis c Nevill b Starc 86 137
Angelo Mathews  c Nevill b Marsh 54 65
Dinesh Chandimal  c Khawaja b Hazelwood 5 14
Dhananjaya De Silva  LBW b Holland 37 63
Dilruwan Perera LBW b Lyon 16 32
Rangana Herath  b Starc 14 19
Lakshan Sandakan  b Starc 1 7
Vishwa Fernando Not Out 0 4
Extras (14) TOTAL 281 (73.1 overs)

Fall of wickets :  1-0 (Karunaratne, 0.1 ov), 2-9 (Silva, 4.4 ov), 3-117 (MDKJ Perera, 31.2 ov), 4-184 (Mendis, 45.3 ov), 5-199 (Chandimal, 48.5 ov), 6-224 (Mathews, 56.4 ov), 7-259 (MDK Perera, 67.1 ov), 8-265 (de Silva, 68.6 ov), 9-274 (Sandakan, 71.4 ov), 10-281 (Herath, 73.1 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Mitchell Starc  16.1 7 44 5
Josh Hazelwood 15 3 51 1
Nathan Lyon 18 1 78 2
Mitchell Marsh 9 0 30 1
Jon Holland 15 0 64 1
Batsmen Dismissal Runs Balls
 Joe Burns c K Perera b Fernando 0 2
 David Warner c Mathews b Perera 42 41
 Usman Khawaja b Perera 11 44
 Steve Smith b Herath 5 10
 Adam Voges c Karunarathne b Herath  8 28
 Mitchell Marsh c Karunarathne b Sandakan 27 42
 Peter Nevill LBW b Herath 0 1
 Mitchell Starc LBW b Herath 0 1
 Nathan Lyon c Mendis b Perera 4 10
 Josh Hazelwood c Mathews b Perera 3 16
Jon Holland Not Out 0 5
Extras (6) TOTAL 106 (33.2 overs)

Fall of wickets :  1-0 (Burns, 0.2 ov), 2-54 (Warner, 13.3 ov), 3-59 (Khawaja, 15.6 ov), 4-59 (Smith, 16.1 ov), 5-80 (Voges, 24.4 ov), 6-80 (Nevill, 24.5 ov), 7-80 (Starc, 24.6 ov), 8-85 (Lyon, 27.2 ov), 9-89 (Hazlewood, 31.2 ov), 10-106 (Marsh, 33.2 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Vishwa Fernando  2 0 16 1
Rangana Herath 11 2 35 4
Dilruwan Perera 15 4 29 4
Angelo Mathews 3 1 13 0
Dhananjaya De Silva 2 1 7 0
Lakshan Sandakan 0.2 0 0 1
Batsmen Dismissal Runs Balls
Kaushal Silva  c Smith b Hazelwood 2 6
Dimuth Karunarathne  c Marsh b Starc 7 8
Kusal Janith Perera b Lyon 35 38
Kusal Mendis c Nevill b Starc 7 14
Angelo Mathews  b Lyon 47 69
Dinesh Chandimal  c Nevill b Starc 13 29
Dhananjaya De Silva  c Nevill b Starc 34 48
Dilruwan Perera  b Starc 64 89
Rangana Herath  b Holland 26 55
Lakshan Sandakan  Not Out 0 0
Vishwa Fernando c Voges b Starc 0 1
Extras (2) TOTAL 237 (59.3 overs)

Fall of wickets :  1-5 (Silva, 1.6 ov), 2-9 (Karunaratne, 2.2 ov), 3-31 (Mendis, 6.1 ov), 4-79 (MDKJ Perera, 15.3 ov), 5-98 (Chandimal, 23.2 ov), 6-121 (Mathews, 31.4 ov), 7-172 (de Silva, 39.6 ov), 8-233 (Herath, 58.6 ov), 9-237 (MDK Perera, 59.2 ov), 10-237 (Fernando, 59.3 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Mitchell Starc  12.3 1 50 6
Josh Hazelwood 9 3 13 1
Nathan Lyon 19 2 80 2
Jon Holland 10 1 69 1
Adam Voges 1 0 4 0
Mitchell Marsh 4 1 7 0
Steve Smith 4 0 13 0
Batsmen Dismissal Runs Balls
David Warner Not Out 22  18
Joe Burns c De Silva b Herath 2  4
Nathan Lyon  c Silva b Perera 0  7
Usman Khawaja b Perera 0  1
Steve Smith Not Out 1  6
Extras (0) TOTAL 25/3 (6 overs)

Fall of wickets :   1-3 (Burns, 0.6 ov), 2-10 (Lyon, 3.3 ov), 3-10 (Khawaja, 3.4 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Rangana Herath  3  1  16 1
Dilruwan Perera  3 0  9  2