Home Tamil த்ரில் வெற்றியோடு சுபர் 4 சுற்றுக்கு முன்னேறும் இலங்கை

த்ரில் வெற்றியோடு சுபர் 4 சுற்றுக்கு முன்னேறும் இலங்கை

Asia Cup 2023

578

இலங்கை மற்றும் ஆப்கான் அணிகள் ஆசியக் கிண்ணத் தொடரில் மோதியிருந்த குழுநிலை ஆட்டத்தில் இலங்கை 02 ஓட்டங்களால் த்ரில்லர் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத் தொடரில் குழு B இலிருந்து சுபர் 4 சுற்றுக்கு முன்னேறுகின்றது. அதேநேரம் இப்போட்டியில் தோல்வியினைத் தழுவிய ஆப்கானிஸ்தான் ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் இரண்டாவது அணியாக மாறுகின்றது.

முன்னதாக லாஹூரில் ஆரம்பித்த இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றிருந்தார். ஆசியக் கிண்ணத் தொடரின் சுபர் 4 சுற்று வாய்ப்பினை எதிர்பார்த்து இப்போட்டிக்கான இலங்கை அணி பங்களாதேஷை வெற்றி கொண்ட அதே குழாத்துடன் களமிறங்க, ஆப்கானிஸ்தான் அணியும் சுபர் 4 வாய்ப்பினை எதிர்பார்த்து மாற்றங்களின்றி களமிறங்கியிருந்தது.

இலங்கை XI

பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க (தலைவர்), துனித் வெல்லாலகே, மகீஷ் தீக்ஷன, மதீஷ பதிரன, கசுன் ராஜித

ஆப்கான் XI

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், றஹ்மத் சாஹ், ஹஸ்மத்துல்லா சஹிதி (தலைவர்), நஜிபுல்லா சத்ரான், மொஹமட் நபி, குல்படின் நயீப், கரீம் ஜனாட், ரஷீட் கான், முஜிபுர் ரஹ்மான், பசால்ஹக் பரூக்கி

பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணி திமுத் கருணாரட்ன மற்றும் பெதும் நிஸ்ஸங்க மூலமாக சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றுக் கொண்டது. இரண்டு வீரர்களும் அணியின் முதல் விக்கெட்டுக்காக 63 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் குல்படின் நயீப்பின் பந்துவீச்சில் திமுத் கருணாரட்ன இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக மாறினார். திமுத் ஆட்டமிழக்கும் போது 35 பந்துகளுக்கு 6 பௌண்டரிகள் அடங்கலாக 32 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

திமுத் கருணாரட்னவின் பின்னர் இலங்கை அணிக்கு நம்பிக்கை வழங்கிய பெதும் நிஸ்ஸங்கவின் விக்கெட்டும் குல்படின் நயீப்பின் பந்துவீச்சில் பறிபோனது. பெதும் நிஸ்ஸங்க நஜிபுல்லா சத்ரானிடம் இலகு பிடியெடுப்பு ஒன்றை வழங்கி 40 பந்துகளுக்கு 6 பௌண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.

பெதும் நிஸ்ஸங்கவின் பின்னர் மீண்டும் குல்படின் நயீப் புதிய வீரராக வந்த சதீர சமரவிக்ரமவின் விக்கெட்டினை அவர் 03 ஓட்டங்கள் மாத்திரம் பெற்ற நிலையில் வீழ்த்தினார். இதனால் இலங்கை அணி 86 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

>> ரோஹித், சுப்மன் அதிரடியில் Super 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

இந்த நேரத்தில் இலங்கை அணிக்காக பொறுமையான முறையில் ஆடியிருந்த சரித் அசலன்க, குசல் மெண்டிஸ் ஜோடி இலங்கை அணியின் நான்காம் விக்கெட் இணைப்பாட்டமாக 102 ஓட்டங்களைப் பகிர்ந்தது. இந்த இணைப்பாட்டத்திற்குள் குசல் மெண்டிஸ் அரைச்சதம் பூர்த்தி செய்திருந்தார். எனினும், இந்த இணைப்பாட்டம் சரித் அசலன்கவின் விக்கெட்டோடு முடிவுக்கு வந்தது. சரித் அசலன்க ரஷீட் கானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

சரித் அசலன்கவின் பின்னர் இலங்கை வலுவான நிலையொன்றை அடைந்த போதிலும் மத்திய வரிசையில் துரித கதியில் மூன்று விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தது. இதற்குள் சதத்தினை நெருங்கியிருந்த குசல் மெண்டிஸின் விக்கெட்டும் அடங்கியிருந்தது. துரதிஷ்டவசமான ரன் அவுட் ஒன்றின் மூலம் ஆட்டமிழந்த குசல் மெண்டிஸ் 84 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 92 ஓட்டங்களை எடுத்து இலங்கை தரப்பிற்கு பெறுமதி சேர்த்திருந்த போதும் சதத்தினை தவறவிட்டிருந்தார். இதேநேரம் துரித கதியில் பறிபோன மூன்று விக்கெட்டுக்கள் காரணமாக இலங்கை மீண்டும் 227 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும் இந்த தருணத்தில் இலங்கை அணிக்கு கைகொடுத்த துனித் வெல்லாலகே – மகீஷ் தீக்ஷன ஜோடி மிகவும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதோடு அதன் மூலம் 64 ஓட்டங்களை 8ஆம் விக்கெட் இணைப்பாட்டமாகவும் பகிர்ந்தது. இந்த இணைப்பாட்ட உதவியுடன் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த துனித் வெல்லாலகே ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 33 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் மகீஷ் தீக்ஷன ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் உடன் 24 பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்து ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய சிறந்த துடுப்பாட்ட இன்னிங்ஸை பதிவு செய்தார்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் குல்படின் நயீப் 60 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ரஷீட் கான் 02 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தனர்.

>> ஜிம்பாப்வே அணியின் முன்னாள் சகலதுறை வீரர் மரணம்

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 292 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 289 ஓட்டங்களுடன் போட்டியில் வெறும் 02 ஓட்டங்களால் தோல்வியினைத் தழுவியது.

இப்போட்டியின் வெற்றி இலக்கை 37.1 ஓவர்களில் அடைந்தால் ஆப்கானிஸ்தான் அணியின் சுபர் 4 சுற்று வாய்ப்பு உறுதி செய்யப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் ஆப்கான் அணி வெற்றிக்காக இறுதிவரை போராடியிருந்தது. ஆப்கான் வீரர்களில் அதிக போராட்டத்தினை காண்பித்திருந்த மொஹமட் நபி வெறும் 32 பந்துகளில் 5 இமாலய சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்கள் பெற்றார். இதேநேரம் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ஹஸ்மத்துல்லா சஹிதி ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்கள் பெற்றார். இது தொடரில் அவர் பெற்ற இரண்டாவது தொடர் அரைச்சதமாகவும் மாறியிருந்தது. இவர்களோடு றஹ்மாத் சாஹ்வும் ஆப்கான் அணியின் வெற்றிக்காக போராடி 40 பந்துகளில் 45 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் கசுன் ராஜித 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியும், துனித் வெல்லாலகே மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் போட்டியின் முக்கிய தருணங்களில் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவாகினார். இப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக தங்களது 12ஆவது வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, ஒருநாள் போட்டிகளில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுக்களையும் 12 தடவைகள் தொடர்ச்சியாக கைப்பற்றிய அணியாகவும் புதிய வரலாறு படைத்திருக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Afghanistan
289/10 (37.4)

Sri Lanka
291/8 (50)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Najibullah Zadran b Gulbadin Naib 41 40 6 0 102.50
Dimuth Karunaratne c Mohammad Nabi b Gulbadin Naib 32 35 6 0 91.43
Kusal Mendis run out (Rashid Khan) 92 84 6 3 109.52
Sadeera Samarawickrama c Rahmanullah Gurbaz b Gulbadin Naib 3 8 0 0 37.50
Charith Asalanka c & b Rashid Khan 36 43 2 1 83.72
Dhananjaya de Silva b Mujeeb ur Rahman 14 19 1 0 73.68
Dasun Shanaka b Rashid Khan 5 8 1 0 62.50
Dunith Wellalage not out 33 39 3 1 84.62
Mahesh Theekshana b Gulbadin Naib 28 24 2 1 116.67


Extras 7 (b 0 , lb 1 , nb 0, w 6, pen 0)
Total 291/8 (50 Overs, RR: 5.82)
Bowling O M R W Econ
Fazal Haq Farooqi 7 1 52 0 7.43
Mujeeb ur Rahman 10 1 60 1 6.00
Gulbadin Naib 10 0 60 4 6.00
Mohammad Nabi 10 0 35 0 3.50
Rashid Khan 10 0 63 2 6.30
Karim Janat 3 0 20 0 6.67


Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz c Kusal Mendis b Kasun Rajitha 4 8 1 0 50.00
Ibrahim Zadran b Kasun Rajitha 7 14 1 0 50.00
Gulbadin Naib lbw b Matheesha Pathirana 22 16 4 0 137.50
Rahmat Shah c Matheesha Pathirana b Kasun Rajitha 45 40 5 1 112.50
Hashmatullah Shahidi c Kasun Rajitha b Dunith Wellalage 59 66 3 1 89.39
Mohammad Nabi c Dhananjaya de Silva b Mahesh Theekshana 65 32 6 5 203.12
Karim Janat c Dimuth Karunaratne b Dunith Wellalage 22 13 1 2 169.23
Najibullah Zadran c Dushan Hemantha b Kasun Rajitha 23 15 1 2 153.33
Rashid Khan not out 27 16 4 1 168.75
Mujeeb ur Rahman c Sadeera Samarawickrama b Dhananjaya de Silva 0 3 0 0 0.00
Fazal Haq Farooqi lbw b Dhananjaya de Silva 0 3 0 0 0.00


Extras 15 (b 0 , lb 5 , nb 0, w 10, pen 0)
Total 289/10 (37.4 Overs, RR: 7.67)
Bowling O M R W Econ
Kasun Rajitha 10 0 79 3 7.90
Mahesh Theekshana 10 0 62 1 6.20
Dunith Wellalage 4 0 36 2 9.00
Matheesha Pathirana 10 0 63 1 6.30
Dasun Shanaka 2 0 32 0 16.00
Dhananjaya de Silva 1.4 0 12 2 8.57



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<