சிம்பாப்வே அபிவிருத்தி அணியினருக்கு இலகு வெற்றி

319
Sri Lanka v Zimbabwe 1st ODI
Getty Images

சிம்பாப்வே ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் ஆட்டத்தின்போது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அபிவிருத்தி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 48.1 ஓவர்களை எதிர்கொண்ட இலங்கை அபிவிருத்தி அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அபிவிருத்தி  அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய சந்துன் வீரக்கொடி 29 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் இலங்கை அணியின் விக்கட்டுகள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. இதன் மத்தியிலும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய சதுரங்க 66 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். கசுன் மதுசங்க 43 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். சிம்பாப்வே அபிவிருத்தி அணி சார்பாகப் பந்துவீச்சில் மும்பா 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

230 என்ற வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அபிவிருத்தி அணி 45.1 ஓவர்களை எதிர்கொண்டு 5 விக்கட்டுகளை இழந்து 232 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றிபெற்றது.

சிம்பாப்வே அபிவிருத்தி அணி சார்பில் துடுப்பாட்டத்தில் முசகண்ட ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததோடு, மூர் 59 பந்துகளில் அரைச்சதம் கடந்து 63 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக சிம்பாப்வே அபிவிருத்தி அணியின் முசகண்ட தெரிவுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் மூன்று  போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு போட்டிகள் மீதமிருக்க 1-0 என்ற கணக்கில் சிம்பாப்வே அபிவிருத்தி அணி முன்னிலை வகிக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை அபிவிருத்தி  அணி – 230 (48.5)

சதுரங்க 53, மதுசங்க 43, அணுக்  பெர்னாண்டோ 35 – மும்பா 26/3, வல்லேர் 38/2, நயுச்சி 58/2

சிம்பாப்வே அபிவிருத்தி அணி – 232/5 (45.1)

மசகண்டா 83, மூர் 63, சாரி 52 – சேகான் மதுசங்க 52/2, கசுன் மதுசங்க 42/1

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்