ரங்கன ஹேரத்தின் அபாரப் பந்துவீச்சால் இலங்கை அணி வெற்றியின் விளிம்பில்

1092
CRICKET-ZIM-SRI

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நிறைவின் போது ஜிம்பாப்வே அணி வெற்றி பெற 491 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் 180 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது.

102 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதோடு 491 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தவேளை ஆட்டத்தை இடை நிறுத்தியது.

திமுத் கருணாரத்ன தனது ஐந்தாவது சதத்தினை பெற்றுகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மதிய போசனத்துக்கு பின்னரான நான்காவது ஓவரில் துரதிர்ஷ்டமாக 88 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளை கிறிஸ்டோபர் போபியின் பந்து வீச்சில் சிக்குண்டு LBW முறையில் ஆட்டமிழந்தார்.

அதே நேரம், ஏழாவது விக்கெட்டுக்காகக் களமிறங்கிய விக்கெட் காப்பாளர் குசல் ஜனித் பெரேரா எட்டு பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் உட்பட 69 பந்துகளில் 62 ஓட்டங்களை அதிரடியாகப் பெற்று இலங்கை அணியின் ஓட்ட எண்ணிகையை சடுதியாக உயர்த்திய நிலையில் ஜிம்பாப்வே அணி அணித் தலைவர் கிரேம் கிரீமரின் பந்து வீச்சில் சோன் வில்லியம்ஸ்சிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அத்துடன் 10ஆவது விக்கெட்டுக்காக துடுப்பாட வந்த சுரங்க லக்மால் ஆட்டமிழக்காமல் 18 பந்துகளில் 4 பவுண்டரிகள் உட்பட 21 ஓட்டங்களை விளாசி களத்தில் இருந்த நிலையில் குசல் ஜனித் பெரேராவின் ஆட்டம் இழப்புடன் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

491 ஓட்டங்களை வெற்றி இலக்காக்க் கொண்டு துடுப்பாடக் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிஆட்ட நேர முடிவின் போது 45 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில்   7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. ஜிம்பாப்வே அணிக்காக துடுப்பாட்டத்தில் நிதான ஆட்டதினை வெளிப்படுத்தி கிரேக் எர்வின் 107 பந்துகளை எதிர் கொண்டு ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார். இவரைத் தவிர சோன் வில்லியம்ஸ் 45 ஓட்டங்களையும் பீட்டர் மூர் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்பாக சிறப்பான முறையில் பந்து வீசிய ரங்கன ஹேரத் இரண்டாம் இன்னிங்சில் 16 ஓவர்களுக்கு 45 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரங்கன ஹேரத் 2ஆவது இன்னிங்சில் கைப்பற்றிய 5 விக்கெட்டுகளோடு, அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஏழாவது தடவை ஆகும்.

இலங்கை அணி வெற்றி பெற இன்னும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய நிலையில் இன்றைய நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. நாளை போட்டியின் இறுதி நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி (முதல் இன்னிங்ஸ்) : 504(144.4) – அசேல குணரத்ன 116(193), தனஞ்சய டி சில்வா 127(245), உபுல் தரங்க 79(155), கௌஷல் சில்வா 37(73), ஹெமில்டன் மசகட்ஸா 34/2(13), க்றிஸ் 92/1(23), டொனால்ட் திரிபனோ 91/3(32), கிரேம் கிரீமர் 136/3(40)

ஜிம்பாப்வே அணி (முதல் இன்னிங்ஸ்) : 272(82.1) – பிரையன் சாரி 80(158), க்ரெய்க் எர்வைன் 64(112), சோன் வில்லியம்ஸ் 58(93), ரங்கன ஹேரத் 89/5(26) தில்ருவன் பெரேரா 51/3(18), சுரங்க லக்மால் 55/2(21.1)

இலங்கை அணி (இரண்டாம் இன்னிங்ஸ்) : 258/9(81.4) – திமுத் கருணாரத்ன 88(208),குசல் ஜனித் பெரேரா 62(69), அசேல குணரத்ன 39(92), சுரங்க லக்மால் 21*(18), கார்ல் மும்பா 67/3(19), கிரேம் கிரீமர்  91/4(21.4) டொனால்ட் திரிபனோ 14/1(11)

ஜிம்பாப்வே அணி (இரண்டாம் இன்னிங்ஸ்) : 180/7(45) – கிரேக் எர்வின் 65*(107),  சோன் வில்லியம்ஸ் 45(47), பீட்டர் மூர் 20(30), ரங்கன ஹேரத் 45/5(16) லஹிறு குமார 42/1(9), தனஞ்சய டி சில்வா 10/1(3)