இலங்கை அணியுடனான உத்தியோகபூர்வமற்ற போட்டியில் 7 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்ற டெஸ்ட் அந்தஸ்து இல்லாத ஸ்கொட்லாந்து அணி, தமது கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கு கொள்வதற்காக இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான இலங்கை அணி, அத்தொடருக்கு முன்னதாக ஸ்கொட்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வருகின்றது.
சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ள சவால்கள்
ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி..
நேற்றைய தினம் இடம்பெற்ற முதல் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
இதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தினேஷ் சந்திமால் 79 ஓட்டங்களையும், சாமர கபுகெதர 71 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 57 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாகப் பெற்றக்கொடுத்தனர்.
ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். குறிப்பாக, நீண்ட நாட்களின் பின்னர் அணிக்கு திரும்பியிருந்த அணித் தலைவர் மெதிவ்ஸ் 15 ஓட்டங்களைப் பெற்ற வேளையில், பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
குசல் மென்டிஸ் மற்றும் திசர பெரேரா ஆகியோரும் முறையே 1 மற்றும் 2 இரண்டு ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினர். அதேபோன்று, அபார ஆட்டம் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அசேல குனரத்னவும் 27 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.
ஸ்கொட்லாந்து அணி சார்பாக பந்து வீச்சில் எவன்ஸ் மற்றும் விதின்காம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கை அணிக்கு பெரும் அழுத்தம் கொடுத்த வீரர்களாகக் காணப்பட்டனர்.
அதன் பின்னர் 288 என்ற வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய ஸ்கொட்லாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களின் இணைப்பை உடைப்பதற்கு இலங்கை பந்து வீச்சாளர் பெரிதும் சிரமப் பட்டனர்.
இதன் காரணமாக அவ்வணி 42.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து 291 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று இலங்கை அணிக்கு அதிர்ச்சியளித்தது.
20 மில்லியன் மக்களின் கனவுகளை சுமந்து இங்கிலாந்து பயணிக்கும் இலங்கை அணி
2017ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்தில் விளையாடவிருக்கும் இலங்கை..
துடுப்பாட்டத்தில் ஸ்கொட்லாந்து அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கைல் கோட்சர் அதிரடியாக ஆடி வெறும் 84 பந்துகளில் 118 ஓட்டங்களை விளாசினார். மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான மெத்திவ் குரோஸ் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களை பெற்று இறுதி வரை களத்தில் இருந்தார்.
பந்து வீச்சினைப் பொறுத்தவரையில் இலங்கை அணி சார்பில் எந்த பந்து வீச்சாளரும் பிரகாசிக்கவில்லை எனலாம். லக்மால் தவிர்ந்த அனைவரும் ஓட்டங்களை அதிகமாகவே கொடுத்தனர்.
இந்த வெற்றியின்மூலம் இரண்டு பொட்டிகள் கொண்ட தொடரில் ஸ்கொட்லாந்து அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
போட்டியின் சுருக்கம்
Sri Lanka - Batting | Toss: Sri Lanka | |
---|---|---|
Kusal Janith Perera | c Budge b De Lange | 57 (59) |
Upul Tharanga | b Evans | 20 (14) |
Kusal Mendis | c Cross b Whittingham | 1 (4) |
Dinesh Chandimal | c Cross b Whittingham | 79 (105) |
Angelo Mathews | c De Lange b Sole | 15 (22) |
Chamara Kapugedara | c Cross b Whittingham | 71 (50) |
Asela Gunarathne | Run Out | 27 (32) |
Thisara Perera | c Berrington b Evans | 2 (3) |
Suranga Lakmal | c Coetzer b Sole | 1 (2) |
Lakshan Sandakan | Not Out | 3 (17) |
Nuwan Pradeep | c Budge b Evans | 1 (2) |
Total | Extras (10) | 287/10 (49.5 overs) |
Scotland - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
AC Evans | 8.5 | 0 | 62 | 3 |
SG Whittingham | 10 | 0 | 56 | 3 |
CB Sole | 9 | 0 | 64 | 2 |
DE Budge | 1 | 0 | 10 | 0 |
MRJ Watt | 10 | 0 | 41 | 0 |
CD De Lange | 9 | 1 | 34 | 1 |
RD Berrington | 2 | 0 | 17 | 0 |
Scotland - Batting | Toss: Sri Lanka | |
---|---|---|
Matthew Cross | Not Out | 106 (123) |
Kyle Coetzer | c Mathews b Perera | 118 (84) |
Calum MacLoed | c Mathews b Sandakan | 2 (4) |
Richie Berrington | c Sub b Mathews | 19 (32) |
Con De Lange | Not Out | 19 (20) |
Dylan Budge | ||
Craig Wallace | ||
Mark Watt | ||
Chris Sole | ||
Stuart Whittingham | ||
Alasdair Evan | ||
Total | Extras (27) | 291/3 (42.5 overs) |
Sri Lanka - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Suranga Lakmal | 5 | 2 | 18 | 0 |
Nuwan Pradeep | 7 | 1 | 45 | 0 |
Angelo Mathews | 5 | 0 | 35 | 1 |
Thisara Perera | 8.5 | 0 | 62 | 1 |
Lakshan Sandakan | 10 | 0 | 66 | 1 |
Asela Gunarathne | 7 | 0 | 56 | 0 |