இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில், பங்களாதேஷின் இமாலய முதல் இன்னிங்சினை (513) அடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணி தனன்ஜய டி சில்வா, குசல் மெண்டிஸ் ஆகியோரின் இணைப்பாட்டத்தோடு உறுதியான நிலையில் காணப்படுகின்றது.
[rev_slider LOLC]
பங்களாதேஷுக்காக மொமினுல், ரஹீம் முதல் நாளில் சாதனை இணைப்பாட்டம்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் மொமினுல் ஹக்…
நேற்று சிட்டகொங்கில் தொடங்கிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று துடுப்பாடியிருந்த பங்களாதேஷ் அணி, போட்டியின் முதல் நாள் நிறைவில் 374 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. பங்களாதேஷ் அணியின் ஸ்திர நிலைக்கு காரணமான மொமினுல் ஹக் 175 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் மஹ்மதுல்லா 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.
போட்டியின் இரண்டாம் நாளில் தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்த பங்களாதேஷ் அணிக்கு இன்றைய நாள் ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்துக்குள்ளேயே ரங்கன ஹேரத் மொமினுல் ஹக்கின் விக்கெட்டினை சாய்த்து பேரிழப்பு ஒன்றினை ஏற்படுத்தினார். மொமினுல் ஹக் ஆட்டமிழக்கும் போது 214 பந்துகளுக்கு 16 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 176 ஓட்டங்களினை பெற்றிருந்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்தும் பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுக்களை சரிக்கத் தொடங்கியிருந்தனர். எனினும், அவர்களுக்கு அணித்தலைவர் மஹ்மதுல்லாவினை ஓய்வறை அனுப்புவது சிரமமாகவே இருந்தது, மஹ்மதுல்லாவின் ஆட்டத்தோடு பங்களாதேஷ் அணி 500 ஓட்டங்களினை நெருங்கிக் கொண்டது.
மஹ்மதுல்லாவுக்கு சரியான துடுப்பாட்ட ஜோடி ஒருவர் கிடைக்காத நிலையில், பங்களாதேஷ் அணியின் அனைத்து விக்கெட்டுக்களும் இன்றைய நாளுக்கான மதிய உணவு இடைவேளையின் பின்னர் வீழ்த்தப்பட்டிருந்தன. முடிவில், பங்களாதேஷ் 129.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து முதல் இன்னிங்சில் 513 ஓட்டங்களினை குவித்தது.
இதில் இறுதி வரை ஆட்டமிழக்காது நின்ற மஹ்மதுல்லா 134 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக தனது 15 ஆவது டெஸ்ட் அரைச் சதத்துடன் 83 ஓட்டங்களினை குவித்திருந்தார்.
உபாதைகள் அற்ற கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்
பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே.. இதன் முதல்கட்ட செயலமர்வு கடந்த சில தினங்களுக்கு முன்…
இலங்கை அணியின் பந்துவீச்சில் சுரங்க லக்மால் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர். ஹேரத் இந்த டெஸ்ட் மூலம் சர்வதேசப் போட்டிகளில் தனது 500ஆவது விக்கெட்டினை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களோடு லக்ஷான் சந்தகனும் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.
மைதான சொந்தக்காரர்களின் பலமான முதல் இன்னிங்சை அடுத்து இலங்கை வீரர்கள் தங்களுடைய முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை குசல் மெண்டிஸ் மற்றும் திமுத் கருணாரத்னவோடு ஆரம்பித்திருந்தனர்.
ஆரம்ப வீரரான கருணாரத்ன எந்தவித ஓட்டங்களுமின்றி மெஹதி ஹசனின் சுழலில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். கருணாரத்னவின் விக்கெட்டோடு பங்களாதேஷ் வீரர்கள் சிறப்பான ஆரம்பத்தினை பெற்றுக் கொண்டனர்.
De Silva & Mendis strengthens Sri Lanka reply
Dhananjaya De Silva (104*) and Kusal Mendis (83*) put on 187 run stand as Sri Lanka posted a steady reply against Bangladesh’s 513 run first innings score to end day two of the first test played at Chittagong. A bowling performance by Sri Lanka that left much to be..
அனுபவ வீரர் ஒருவரின் விக்கெட்டினை இழந்த இலங்கை அணியினை கட்டியெழுப்பும் பொறுப்பு களத்தில் நின்ற குசல் மெண்டிசுக்கும், புதிய துடுப்பாட்ட வீரரான தனன்ஜய டி சில்வாவுக்கும் இருந்தது.
இரண்டு வீரர்களும் ஆரம்பத்தில் சிறிது தடுமாற்றத்தினை காட்டியிருந்த போதிலும் படிப்படியாக எதிரணியின் பந்துவீச்சினை சமாளிக்கத் தொடங்கியிருந்தனர். இதனால் மேலதிக விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி 50 ஓட்டங்களுடன் இலங்கை அணி தேநீர் இடைவேளையினை அடைந்தது.
பந்துவீச்சு ஆலோசகராக பணியாற்றத் தயாராகும் இலங்கையின் நட்சத்திர வீரர்
2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒரு வீரராக விளையாடுவதையும்…
தேநீர் இடைவேளையின் அடுத்து தொடர்ந்த இரண்டாம் நாள் ஆட்டத்தின் மூன்றாம் இடைவெளியில் சில்வா, மெண்டிஸ் இருவரும் இலங்கை அணியின் ஓட்டங்களை விரைவாக உயர்த்தத் தொடங்கியிருந்தனர். இதில் முதலாவதாக தனன்ஜய டி சில்வா அரைச்சத்தினை பூர்த்தி செய்திருந்தார். சில்வாவினை அடுத்து குசல் மெண்டிசினாலும் அவருடைய 5ஆவது டெஸ்ட் அரைச்சதம் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது.
பங்களாதேஷ் வீரர்களினால் எந்தவொரு விக்கெட்டினையும் தொடர்ந்து கைப்பற்ற இயலாத நிலையில், போட்டியின் இரண்டாம் நாள் முடிவின் போது தனன்ஜய டி சில்வா தன்னுடைய நான்காவது டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்திருந்தார். தனது இறுதி டெஸ்ட் இன்னிங்சிலும் (இந்திய அணியுடனான) சில்வா சதம் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனன்ஜய பெற்றுக் கொண்ட சதத்தோடு இலங்கை அணி முதல் இன்னிங்சில் 48 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 187 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்த போது, போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
வலுவான இணைப்பாட்டம் (187) ஒன்றினை குசல் மெண்டிசுடன் உருவாக்கியிருக்கும் தனன்ஜய டி சில்வா 104 ஓட்டங்களுடனும், மெண்டிஸ் 84 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.
போட்டியின் சுருக்கம்
Scorecard
போட்டியின் மூன்றாம் நாள் நாளை தொடரும்.