கௌஷால் சில்வா சதம், இலங்கை முன்னிலையில்

230
sl v aus

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சந்திமால் (132), தனஞ்செயா டி சில்வா (129) ஆகியோரின் சதத்தால் 355 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் அவுஸ்திரேலியா அணி முதல் இனிங்ஸைத் தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 141 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் ஷேன் மார்ஷ் 64 ஓட்டங்களுடனும், ஸ்மித் 61 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடங்கிய அவுஸ்திரேலிய அணியின் ஷேன் மார்ஷ், ஸ்மித் ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தினார்கள்.

அவுஸ்திரேலியா அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 267 ஓட்டங்களாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 246 ஓட்டங்கள் சேர்த்தனர். ஸ்மித் 119 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஹேரத் பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். மார்ஷ் 130 ஓட்டங்கள் எடுத்த நிலையில் லக்மாலின் பந்தில் க்ளீன் போல்டானார்.

அடுத்து வந்த வோக்ஸ் 22 ஓட்டங்களிலும், ஹென்றிக்ஸ் 4 ஓட்டங்களுக்கும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்கள். அதன்பின் வந்த மிட்செல் மார்ஷ் அரைச்சதம் அடித்து விளையாடினார். இவர் அரைச்சதம் அடிக்க மற்ற வீரர்களை ஹேரத் வெளியேற்ற அவுஸ்திரேலியா அணி முதல் இனிங்சில் 379 ஓட்டங்கள் சேர்த்து சகல விக்கட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி தரப்பில் பந்துவீச்சில் ரங்கனா ஹேரத் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 24 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இனிங்ஸைத் தொடங்கியது. அந்த அணி 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 22 ஓட்டங்களைப் பெற்று இருந்தது.

பின்னர் இன்று தமது இனிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி இன்றைய 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 312 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. அப்போது ஆடுகளத்தில் தனஞ்சய டி சில்வா ஆட்டம் இழக்காமல் 44 ஓட்டங்களோடும், சுரங்க லக்மால் ஆட்டம் இழக்காமல் ஓட்டம் எதுவும் பெறாத நிலையிலும் இருந்தனர்.

இலங்கை அணியின் சார்பில் துடுப்பாட்டதில் கௌஷால் சில்வா 115 ஓட்டங்களையும், சந்திமால் 43 ஓட்டங்களையும், மெதிவ்ஸ் 26 ஓட்டங்களையும் பெற்றனர். அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் லயன் 4 விக்கட்டுகளை வீழ்த்த ஸ்டார்க் மற்றும் ஹொலண்ட் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினார்கள். நாளை போட்டியை தீர்மானமிக்க இறுதி நாள் நடைபெற உள்ள நிலையில் இலங்கை அணி 288 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி – 355/10

தனஞ்சய டி சில்வா 129, தினேஷ் சந்திமால் 132, ரங்கன ஹேரத் 33,

மிச்சல் ஸ்டார்க் 63/5, நேதன் லியன் 110/3

அவுஸ்திரேலிய – 379/10

ஷோன் மார்ஷ் 130, ஸ்டீவ் ஸ்மித் 119, மிச்சல் மார்ஷ் 53,

ரங்கன ஹேரத் 81/6, டில்ருவான் பெரேரா 129/2

இலங்கை – 312/8

கவ்ஷால் சில்வா 115, சந்திமால் 43, மெதிவ்ஸ் 26, தனஞ்சய டி சில்வா 44*

நேதன் லியன் 123/4, மிச்சல் ஸ்டார்க் 58/2,

இலங்கை அணி 288 ஓட்டங்கள் முன்னிலையில்

Batsmen Dismissal Runs Balls
Kaushal Silva  c Smith b Starc 0 15
Dimuth Karunarathne   b Starc 7 34
Kusal Perera c Smith b Lyon 16 32
Kusal Mendis c Smith b Starc 1 12
Angelo Mathews  c Starc b Lyon 1 4
Dinesh Chandimal c Nevill b Starc 132 356
Dhananjaya De Silva c S Marsh b Lyon 129 280
Dilruwan Perera c Lyon b Holland 16 25
Rangana Herath Retired Hurt 33 71
Suranga Lakmal c M Marsh b Starc 5 11
Lakshan Sandakan Not Out 4 8
Extras (11) TOTAL 355 (141.1 overs)