அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி கடந்த ஜூலை மாதம் 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் நோக்கில் இலங்கை மண்ணிற்கு விஜயம் செய்தது.
சுமார் 41 நாட்களைக் கொண்ட இந்த தொடரில் தற்போது வரை 37 நாட்கள் முடிவுற்ற நிலையில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி இலங்கைக்கு கண்டியில் காலை உணவு, காலியில் பகலுணவு, கொழும்பில் இரவு உணவு என்கிற வாசகத்தின் படி 3 – 0 என்ற ரீதியிலும், ஒருநாள் தொடரை அவுஸ்திரேலிய பதிலடி கொடுக்கும் வகையில் 4 – 1 என்ற ரீதியிலும் வெற்றி கொண்டுள்ளது.
இந்த நிலையில் தொடர் முடிவடைய நான்கே நான்கு நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் பல மில்லியன் கணக்கானோர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை கண்டி பல்லேகளே சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறவுள்ளது. இலங்கையின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்ஷான் கண்டி பல்லேகளே மண்ணில் விளையாடும் இறுதி சர்வதேசப் போட்டி என்பதால் நாளை மைதானம், பார்வையாளர்கள் நிறைந்து காணப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அத்தோடு இன்னுமொரு சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டிக்கான டிக்கட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
டிக்கட்டுகள் நாளை விற்பனை செய்யப்படமாட்டாது எனவும் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. போட்டிக்கு உரித்துடைய டிக்கட்டுகள் வைத்திருப்பவர்கள் மாத்திரமே மைதானத்தில் அனுமதிக்கப்படுவரெனவும் கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை – ஆஸி : டி20 கிரிக்கட் வரலாறு
இந்த இரண்டு அணிகளும் 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 8 டி20 போட்டிகளில் பங்குபற்றி உள்ளன. இதில் 75% வெற்றி சதவீதத்தோடு 6 வெற்றிகளை இலங்கை அணியும் 25% வெற்றி சதவீதத்தோடு 2 வெற்றிகளை அவுஸ்திரேலிய அணியும் பெற்றுள்ளன.
இந்த 2 அணிகளும் முதல் தடவையாக டி20 கிரிக்கட் போட்டி ஒன்றில் 2007ஆம் டி20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் சந்தித்தன. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கட்டுகளால் வெற்றி பெற்று இருந்தது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை – 101/10 (19.3)
முபாரக் 28, சங்கக்கார 22, வாஸ் 21
ஸ்டூவர்ட் கிளார்க் 20/4, நேதன் பிரேக்கன் 14/2
அவுஸ்திரேலியா – 102/0 (10.2)
மெத்திவ் ஹெய்டன் 58*, எடம் கில்க்ரிஸ்ட் 31*
அவுஸ்திரேலிய அணி 10 விக்கட்டுகளால் வெற்றி
இதன் பிறகு இடம்பெற்ற 7 போட்டிகளில் இலங்கை அணி 6 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்த 2 அணிகளும் இறுதியாக 2013ஆம் ஆண்டு மெல்பர்ன் கிரிக்கட் மைதானத்தில் சந்தித்தன. இந்தப் போட்டியில் இலங்கை அணி டக்வத் லுவிஸ் முறையில் 2 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பெற்றது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை – 161/4 (20)
மஹேல ஜயவர்தன 61*, திஸர பெரேரா 35*, ஜீவன் மெண்டிஸ் 25
க்ளென் மெக்ஸ்வெல் 23/1
அவுஸ்திரேலியா – 119/3 (15) வெற்றி இலக்கு 122 (15)
ஜோர்ஜ் பெய்லி 45, ஷோன் மார்ஷ் 47*
நுவான் குலசேகர 18/1
இலங்கை அணி 2 ஓட்டங்களால் வெற்றி
டி20 போட்டிகளில் பல்லேகளே மைதானத்தில் இலங்கை
விளையாடியுள்ள போட்டிகள் – 10
வெற்றி – 07
தோல்வி – 01
சமநிலை – 01
முடிவில்லை – 01
டி20 போட்டிகளில் ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை
விளையாடியுள்ள போட்டிகள் – 10
வெற்றி – 01
தோல்வி – 09
- அதிக ஓட்டங்கள் – டில்ஷான் (247 ஓட்டங்கள் 8 போட்டிகளில் – சராசரி 35.28)
- தனிப்பட்ட அதிக ஓட்டங்கள் – டில்ஷான் 108* பல்லேகளே மைதானத்தில்
- அதிக சிக்ஸர்கள் – கெமரோன் வயிட் (9 சிக்ஸர்கள்)
- அதிக விக்கட்டுகள் – அஜந்த மெண்டிஸ் (10 விக்கட்டுகள்)
- சிறந்த பந்து வீச்சு – அஜந்த மெண்டிஸ் (16/6 பல்லேகளே மைதானத்தில்)
கடைசி 5 டி20 போட்டிகளில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவின் பெறுபேறுகள்
இலங்கை – தோல்வி, தோல்வி, தோல்வி, தோல்வி, வெற்றி
அவுஸ்திரேலியா – தோல்வி, வெற்றி, வெற்றி, தோல்வி, வெற்றி
நாளைய போட்டியில் ஒரு மேற்பார்வை
ஆடுகள நிலவரம் :
பொதுவாக பல்லேகளே மைதானம் துடுப்பாட்டத்துக்கு சாதகமான மைதானமாகும். அதனால் நாளைய போட்டியிலும் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக அமைவதோடு அதிக ஓட்டங்களைப் பெறும் மைதானமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Album: Sri Lanka practices ahead of 1st T20I
காலநிலை அறிக்கை :
நாளைய போட்டியில் மழை தூறல்கள் விழக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் ரொம்ப குறைவாகவே உள்ளது.
நாளைய போட்டியில் விளையாடப்படும் என எதிர்பார்க்கப்படும் அணி :
இலங்கை :
1)திலகரத்ன டில்ஷான், 2) குசல் ஜனித் பெரேரா (விக்கெட் காப்பாளர்), 3) குசல்மெண்டிஸ், 4) தினேஷ் சந்திமால் (தலைவர்), 5) சாமர கபுகெதர, 6) மிலிந்த சிறிவர்தன, 7) திஸர பெரேரா, 8) சச்சித் பத்திரண, 9) சீக்குகே பிரசன்னா, 10) சச்சித்ர சேனாநாயக்க, 11) கசுன் ரஜித
அவுஸ்திரேலியா :
1) டேவிட் வோர்னர் (தலைவர்), 2) உஸ்மான் கவாஜா, 3) ஜோர்ஜ் பெய்லி, 4) டிராவிஸ் ஹெட், 5) க்ளென் மெக்ஸ்வெல், 6) மேத்யூ வேட், 7) ஜேம்ஸ் போல்க்னர், 8) பீட்டர் நெவில் (விக்கெட் காப்பாளர்), 9) ஜோன் ஹேஸ்டிங்ஸ், 10) மிட்செல் ஸ்டார்க், 11) எடம் சம்பா
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்