இலங்கை ஒருநாள் தொடரில் ட்ராவிஸ் ஹெட் இணைப்பு

253
Travis Head

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தடுமாறிவரும் அவுஸ்திரேலிய அணி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில், இளம் சகலதுறை வீரரான ட்ரவிஸ் ஹெட்டை சேர்த்துள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் சேர்க்கப்பட்டிருக்காத ஹெட், தற்போது சேர்க்கப்பட்டுள்ளதோடு, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாமோடு இணைந்து பயிற்சிகளில் ஈடுபடவுள்ளார். எனினும், 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்குபற்றமாட்டார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

22 வயதான மத்திய தரவரிசை துடுப்பாட்ட வீரரான ட்ரவிஸ் ஹெட் தற்போது வரை ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார்.  அவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற அவரது முதல் போட்டியில் 1 ஓட்டங்களை மட்டுமே பெற்று இருந்தார். இடதுகைத் துடுப்பாட்ட வீரரான இவர், சுழற்பந்தும் வீசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் இம்மாதம் 21ஆம் திகதி நடக்கவுள்ளது.

அவுஸ்திரேலியா அணி வீரர்கள் விபரம்

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர், ஜோர்ஜ் பெய்லி, நாதன் கோட்லர்-நைல், ஜேம்ஸ் பால்க்னர், ஆரோன் பின்ச், ஜொஸ் ஹாசில்வுட், மொயிசஸ் ஹென்றியூக்ஸ், உஸ்மான் காவாஜா, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், ஷொன் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், மேத்தீவ் வாடே, ஆடம் ஸம்பா, ட்ரவிஸ் ஹெட்.