நிதானமான பதிலடியைக் கொடுக்கிறது அவுஸ்திரேலியா

235
sl v aus

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கட் போட்டி எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்றுத் தொடங்கிய இந்தப் போட்டியில் தனஞ்சய டி சில்வாவின் சதத்தால் இலங்கை அணி முதல நாள் ஆட்ட முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 214 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தனஞ்சய டி சில்வா 116 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 64 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய தனஞ்சய டி சில்வா 129 ஓட்டங்கள் சேர்த்து லயனின் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த துடுப்பாட்ட வீரர்களைத் துணையாக வைத்து கொண்டு தினேஷ் சந்திமால் சிறப்பாக விளையாடினார். ரங்கன ஹேரத் 33 ஓட்டங்கள் எடுத்து காயம் காரணமாக வெளியேறினா்ர் . தினேஷ் சந்திமால் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியதுடன் சதமும் அடித்தார். தொடர்ந்து விளையாடிய தினேஷ் சந்திமால் 132 ஓட்டங்கள் எடுத்து 9-வது விக்கட்டாக ஆட்டம் இழந்தார்.

இவர் ஆட்டம் இழந்ததும் இலங்கை அணி முதல் இனிங்ஸில் 355 ஓட்டங்கள் குவித்து சகல விக்கட்டுகளையும் இழந்தது. அவுஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 5 விக்கட்டுகளும், லயன் 3 விக்கட்டுகளும் வீழ்த்தினார்கள்.

பின்னர்  அவுஸ்திரேலியா அணி முதல் இனிங்சைத் தொடங்கியது. தொடக்க வீரர்களாக வார்னரும், ஷேன் மார்ஷூம் களம் இறங்கினார்கள். வார்னர் 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் ஷோன் மார்ஷ்ஷோடு இணைந்த தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 2ஆவது விக்கட்டுக்காக நிதானமாக ஆடி இருவருமாக சேர்ந்து 100 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தொடர்ந்து ஆடிய இவர்கள் விக்கட்டுகளைப் பறி கொடுக்காமல் ஓட்டங்களைப் பெற்றனர். இதன் படி அவுஸ்திரேலிய அணி  போட்டியின் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 1 விக்கட் இழப்பிற்கு 141 ஓட்டங்களைப் பெற்று இருந்தது.  ஷோன் மார்ஷ் 64 ஓட்டங்களோடும்  ஸ்டீவ் ஸ்மித் 61  ஓட்டங்களோடும் ஆட்டம் இழக்காமல் ஆடுகளத்தில் இருந்தனர். வீழ்ந்த ஒரு விக்கட்டை சதம் விளாசிய தனஞ்சய டி சில்வா வீழ்த்தி இருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி – 355/10

தனஞ்சய டி சில்வா 129, தினேஷ் சந்திமால் 132, ரங்கன ஹேரத் 33

மிச்சல் ஸ்டார்க் 63/5, நேதன் லியன் 110/3

அவுஸ்திரேலிய – 141/1

ஷோன் மார்ஷ் 64*, ஸ்டீவ் ஸ்மித் 61*

தனஞ்சய டி சில்வா 20/1

அவுஸ்திரேலிய அணி 214 ஓட்டங்கள் பின்னிலயில்